மீனாக்ஷி உன்னப் பாத்து எத்தன நாளாச்சு ...
பாக்காம கண்ணு ரெண்டும் பூத்துத் தானே போச்சு ... (மதுரை)
பாக்காம கண்ணு ரெண்டும் பூத்துத் தானே போச்சு ... (மதுரை)
அனலில் விளைந்த அற்புதமே.....உன்ன
ஆராதிக்க விளையுது ஆனந்தமே
ஆராதிக்க விளையுது ஆனந்தமே
மஞ்சப் பட்டு கட்டி மல்லிகைப் பூ சூடி
கையில கிளி வச்ச கருணப் பூங்கொடியே
சொக்கனும் மயங்கிடும் சுந்தர வதனியே
டக்குன்னு வரம் கொடுக்கும் தடாதகை தேவியே...
கையில கிளி வச்ச கருணப் பூங்கொடியே
சொக்கனும் மயங்கிடும் சுந்தர வதனியே
டக்குன்னு வரம் கொடுக்கும் தடாதகை தேவியே...
சிவம் சுபம்
No comments:
Post a Comment