Friday, October 28, 2016

Maamanum Maruganum

மாமனும் மருகனும் !

வாசுதேவம் சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகதகுரும்

வாமதேவ சுதம் தேவம் சூர சம்ஹார மூர்த்தினம்
பார்வதி ஹ்ருதயானந்தம் ஸ்கந்தம் வந்தே குருகுஹம்

மாமனும் மருகனும் கருணையின்  வடிவே, அவர்'
மலரடி நினைந்தே உய்வாய் மனமே

அஷ்டமி நாயகன் மாமன் என்றால்
சஷ்டியின் தலைவன் மருகன் அன்றோ

சிவன் கர சக்கரம் ஏந்திடுவான் மால்
சிவை கர வேல் ஏந்தி வென்றிடுவான் முருகன்
ஆலிலையில் மிதந்தான் மாமன் என்றால்
ஆறு தாமரையில் தவழ்ந்தான் மருகன் அன்றோ

கம்சாதிகளை கரு வறுத்தான்  மாமன்
சூராதிகளை கூறாக்கி ஆட்கொண்டான் மருகன்
கீதை நெறி உரைத்தான் மாமன் என்றால்
ப்ரணவ உரை தந்தான் மருகன் அன்றோ

வடமதுரை நாதன் மாமன் என்றால்
தென்மதுரைக் குன்றன் மருகன் அன்றோ
திருப்பாவைத் தலைவன் மாமன் என்றால்
திருப்புகழ் நாதன் மருகன் அன்றோ

தீப ஆவளியில்  ஒளிர்வான் மாமன்
கார்த்திகைச் சுடராய் மலர்வான்  மருகன்
வேங்கடசுப்பிர மணியனைப் பணிவோம்
வேண்டுவன எல்லாம் வேண்டுமுன் பெறுவோம்

தீபாவளி-சஷ்டி-கார்த்திகை வாழ்த்துக்கள்
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


audio


No comments:

Post a Comment