தெய்வத் தமிழ் மலர் 23
23.1 தணிகையனின் விஸ்வரூபம் -- வடலூர் வள்ளல்
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்
ஓர் கூர் கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் - அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும்
என் கண்ணுற்றதே
23.2 வள்ளலார் கண்ட திருக்காட்சித் திருவருட்பா
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே!
ஞானப் பரஞ்சுடரே !
ஆறுமுகம் படைத்த கோவே !
என்னிரு கண்மணியே! என் தாயே!
என்னை ஈன்றானே! என் அரசே!
என்றன் வாழ்வே!
மின்னிருவர் புடை விளங்க மயில் மீதேறி
விரும்பும் அடியார் காண மேவும் தேவே !
சென்னியில் நின் அடிமலர் வைத்து என்னை
முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!
23.3. விண்ணப்பப் பாடல் *
கையாலுனைத் தொழச் சென்னியினால்
உன் கழல் வணங்க
மெய்யாய் அடிக்கடி வாக்காற்
துதிக்க விதித்து
மனம் நையா வியற்கையாய் நின்ற இனி
என்னை நழுவ விடேல், ஐயா !
உனக்கபயம் பழனாபுரி ஆண்டவனே !
23.4 திருவடிப் புகழ்ச்சி - ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்
அரஹர மந்திர அமல நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம சுகோதய போதக
பரிபுர சத தள பாத நமஸ்தே
ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடனான சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே
சிவம் சுபம்
* பாடல் வரிகள் அற்புதம்.
எழுதிய மஹான் யாரென்று
தெரியவில்லை.
audio1
audio2
தெய்வத் தமிழ் மலர் 22
22.1 திருநீற்று மஹிமை - வள்ளல் பெருமான்
சிந்தாமணி நிதி ஐந்தரு செழிக்கும் புவனமும் ஓர்
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும்
இந்தா எனத் தருவார் தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தா சிவன் மைந்தா எனக் கனநீறு அணிந்திடிலே
22.2 குன்றுதோறாடும் குமரன் - அருணகிரிப் பெருமான்
அதிருங் கழல் பணிந்துன்
அடியேன் உன்
அபயம் புகுவ தென்று
நிலைகாண
இதயந் தனிலி ருந்து
க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க
அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி
நடமாடும்
இறைவன் தனது பங்கில்
உமைபாலா
பதியெங் கிலுமி ருந்து
விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த
பெருமாளே.
22.3 ஆறெழுத்துண்மை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்
பொங்கிடும் புனலில் அம்பூவில் வெங்கனலில்
எங்கணும் உளவெளியில் வளிபகலில்
கங்குலில் அடியவர் கருத்து நன்காகச்
சங்கடந் தீர்ப்பது ச ர வ ண ப வ வே
22.4 ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
உண்ணெகிழ் தொண்டர்
உள்ளத்திரு சிந்திட
ஒளிவிடு முழு மணியே !
உயர்மறை நூல் கலை
முடிவின் முடிந்திடும்
ஒழுகொளி மரகதமே!
விண்ணோடு மண்ணை
விழுங்கி அருட்கதிர்
விரியும் இளஞ்சுடரே !
மெய்ப்புலன் மேய்ந்து
சமைந்தொரு வீட்டை
விளக்கும் விளக்கொளியே!
புண்ணிய நாறுமோர்
பெண்கனி கனியும்
புனித நறுங்கனியே!
புள்ளூர் என எமது
உள்ளத்தட நிறை
புத்தமுதக் கடலே!
தண்ணொளி பொங்கிய
கருணை நிதியே!
தாலோ! தாலேலோ!
சங்கத் தமிழின்
தலைமைப் புலவா
தாலோ! தாலேலோ!
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
audio1
audio2
audio3
தெய்வத் தமிழ் மலர் - 21
21.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்
அகமாறிய நெறிசார்குவர் அறிவாம் உரு அடைவார்
மிகமாறிய பொறியின்வழி மேவா நல மிகுவார்
சகமாறினும் உயர் வானிலை தாமாறினும் அழியார்
முகம் ஆறுடை முதல்வா என முதிர் நீறணிந்திடிலே
(முதிர் நீறு - முன்னைப் பழம் பொருளாம்
சிவனாரின் திருமேனியில் ஒளிரும் நீறு)
21.2 பிழை பொறுக்கும் செந்தூர் பெருமான்
ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் \
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை -- நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை -- அகலா நீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை -- இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது -மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரதனார் புகல் -- குறமாதை
நாடிய கானிடை கூடியசேவக
நாயக மாமயில் உடையோனே
தேவி மனோன்மணி ஆயி பராபரை
தேன்மொழி யாள்தரு -- சிறியோனே
சேணுயர் சோலையின் நீழலி லே திகழ்
சீரலை வாய்வரு -- பெருமாளே
21.3 கந்தரலங்காரம் - ஸ்ரீ அருணகிரிநாதர்
போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும்
உள்ளும், வாக்கும் வடிவும், முடிவும் இல்லா (து)
ஒன்று வந்து வந்து தாக்கும், மனோலயம்
தானே தரும், எனைத் தன் வசத்தே ஆக்கும்
ஆறுமுகவா! சொல்லொணா(து) இந்த ஆனந்தமே
21.4 போற்றி விண்ணப்பம் - ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்
ஐயனே அரசே போற்றி -
அருமறைப் பொருளே போற்றி
துய்யனே துணையே போற்றி -
தூமணித் திரளே போற்றி
மெய் அருள் விளைவே போற்றி -
வெற்றி வேலேந்து பூவற் கையனே போற்றி -
எங்கள் கடவுளே போற்றி
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
audio1
audio2
தெய்வத் தமிழ் மலர் 20
20.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்
மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வைப் பெறுவார் காண்
சீலா சிவ லீலா பரதேவா உமையவள் தன்
பாலா கதிர் வேலா எனப் பதி நீறணிந்திடிலே
20.2 நான்மறை ஸார(ன்) முருகன் - ஸ்ரீ பாபநாசம் சிவன்
மால் மருகா ஷண்முகா முருகா குஹா (மால்)
நான் மறை ஸார ஓங்கார ஸவருபா
மாமயில் வாஹனே ஸவாமி ப்ரதாபா (மால்)
வெள்ளிமலை நாதன் கெளரீ பாலா
வேறு துணை காணேன் வந்தெனையாளாய்
வள்ளி தெய்வானை மணாளா தயாளா
வணங்கும் ராம தாஸன் தலையணி தாளா (மால்)
20.3 ஸ்ரீ அருணகிரிப் பெருமானின் அநுபூதி
பேராசை யெனும் பிணியில் பட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே
20.4 சரவணபவ மஹிமை - ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்
ஹர ஹர சிவ சிவ ஷண்முக நாதா
ஹர ஹர சிவ சிவ எண்முக நாதா
ஹர ஹர சிவ சிவ பரம விலாஸா
ஹர ஹர சிவ சிவ அபய குஹேசா
அருணகிரி பரவு அருள் நெறி நாதா
தரும வுறுவர் புகழ் சததள பாதா
அரி பிராமதிகள் தொழு(ம்) வடிவேலா
திருவடி நாரவர் உளமுறை சீலா
என் இனிய குருநிதம் எணுமதி யீசா
சனன வெய் தரவெளி தரு பரமேசா
பாசா பாச பாப விநாசா
மாசேறாத மான நடேசா
போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜா தேவ ஸமாஜா
தீஞ்சுவை யருளொறு திருவாரமுதே
ஓம் சரவணபவ உருவே அருவே
சிவம் சுபம்
audio1
audio2
தெய்வத் தமிழ் மலர் 19
19.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான் -மோஹனம்
அமராவதி இறையோடு நல் அயனும் திருமாலும்
தமராகுவர் - சிவஞானமும் தழைக்குங் கதி சாரும்
எமராசனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும்
குமரா சிவ குருவே எனக் குளிர் நீறு அணிந்திடிலே
19.2. கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
ஷண்முகப்ரிய
காலமாய்க் காலமின்றிக் கருமமாய் கருமமின்றி
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்’
19.3 திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா -
குமரகுருபரப் பெருமான் - ராகமாலிகை *
பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்
திருவரையும், சீரடியும், செங்கையும், ஈராறு
அருள் விழியும் மாமுகங்கள் ஆறும்
விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற வந்து, இடுக்கண்
எல்லாம் பொடி படுத்தி எவ்வரமும் தந்து புகுந்து
உல்லாசமாக உளத்திருந்து -
பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவதானமும்
சீரப் பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை
எழுத்து முதலாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ் புலமை பாலித்து ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவாதனை
அகற்றி, மும்மைப் பெறுமலங்கள் மோசித்துத்
தம்மை விடுத்து ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் சேய கடியேற்கும்
பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேற்கு
முன்னின்று அருள்
*(முதல் சில வரிகளில் முருகப் பெருமானின்
விஸ்வரூப தரிசனமே காணலாம்)
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
audio1
audio2
தினமொரு தெய்வத் திருமலர் - 18
தீபாவளி சிறப்பு ஜோதி வழிபாட்டு மலர்கள்
(கண்ணனை, கந்தனை, முக்கண் முதல்வனை
ஜோதி வழி பாடு செய்யும் பாடல்கள்)
18.1. ஆண்டாள் அன்னையின் திருவேங்கட ஜோதி
மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போதும் உன்னடி வணங்கி, தத்துவ மிலி
என்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை
வைத்திடாமே, கொத்தலர் பூங்கணை
தொடுத்துக் கொண்டு, கோவிந்தன் என்பதோர்
பேர் எழுதி, வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
18.2 ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் "பகை கடிதல்"
(மயில் மீது கண்ட செவ்வேட் பரம ஜோதி)
திருவளர் சுடர் உருவே சிவை கரம் அமர் உருவே
அருமறை புகழ் உருவே அறவர்கள் தொழும் உருவே
இருள்தபும் ஒளி உருவே என நினை எனது எதிரே
குருகுஹன் முதல் மயிலே கொணர்தி உன் இறைவனையே
18.3 அருணகிரிப் பெருமானின் "தீப மங்கள ஜோதி"
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ர சொரூபா நமோநம
ஞான பண்டித சாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்ட விநோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
18.4. வடலூர் வள்ளல் பெருமானின் "அருட்பெருஞ் ஜோதி" **
ஜோதி ஜோதி ஜோதி சுயம் - ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள் - ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வ்யோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ..ஏக ஜோதி..ஏக ஜோதி ...ஏக ஜோதி
ஆதி நீதி வேதனே ...ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே
தீபாவளி வாழ்த்துக்கள்
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
** ப்ரதோஷ வழிபாட்டிலும் பாட உகுந்த அருட்பா மலர்.
audio1
audio2
audio3
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 17
17.1 முருகனின் திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்
தேறாப் பெரு மனமானது தேறும், துயர் மாறும்
மாறாப் பிணி மாயும், திரு மருவும் கருவொருவும்
வீறாப்பொடு வரு சூர்முடி வேறாக்கிட வருமோர்
ஆறாக் கர பொருளேயென அருள் நீறு அணிந்திடிலே
17.2. முருக சேவை மஹிமை -
திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்
உள்ளக் கவலை எலாம் ஒழிந்தேன், ஒழியாது செய்யும்
கள்ளக் கருமங்கள் யாவும் விண்டேன் - கலை வாணியுடன்
வள்ளக் கமல மலர் மாது தந்தருள் வாழ்வடைந்தேன்
தெள்ளத் தெளிந்தனன் போரூர் முருகனை சேவை செய்தே ,
17.3 முருக பத த்யான மகிமை -
வள்ளல் பெருமான்
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு
விளைகின்ற நிலன் உண்டு, பலனும் உண்டு
நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு
கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பனி உண்டு
உடை உண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு
சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு
மற்றுள்ள செல்வங்கள் யாவும் உண்டு
தேன் உண்டு வண்டுறு கடம் பணியும்
நின் பதத் த்யானம் உண்டாயில் அரசே
தார் உண்ட சென்னையில் கந்த கோட்டத்துள்
வளர் தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி உண்முகச்
சைவ மணி, சண்முகத் தெய்வ மணியே
சிவம் சுபம்
audio1
audio2
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 16
16.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்
துயிலேறிய சோர்வும் கெடும், துயரம் கெடும், நடுவன்
கையிலேறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால்
குயிலேறிய பொழில் சூழ் திருக் குன்றேறி நடக்கும்
மயிலேறி மணியே என வளர் நீறணிந்திடிலே
16.2 திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரி நாதப் பெருமான்
பிறவி அலை ஆற்றினில் - புகுதாதே
ப்ரக்ருதி மார்க்கமுற்று - அலையாதே
உறுதி வாக்கியப் - பொருளாலே
உனது பதக் காட்சியைத் - தருவாயே
அறு சமய சாத்திரப் - பொருளோனே
அறிவுள் அறிவார்க்கு குணக் - கடலோனே
குறுமுனிவன் ஏத்தும் முத் - தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் - பெருமாளே
16.3 கந்தர் அனுபூதி - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்துணர் வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே
16.4 அகத்தியர் அருளிய பாடல்
செந்தூர் கடற்கரையில் நந்தா விளக்கில் உயர்
சிந்தாமணிக்கு நிகரானவன்
கந்தா குஹா கௌரி மைந்தா எனக் கனிந்து
வந்தார் என் மனக் குறை தீர்ப்பவர்
அன்பிற் பிறந்து வளர் அன்பிற் சிறந்து உயர்
அன்பர்க்கெல்லாம் அன்பு மூர்த்தியாம்
அற்பர்க்கெல்லாம் அசுர துஷ்டர்க் கெல்லாம் அவர்
அச்சப்படும் கால மூர்த்தியாம்
நம்பிப் பணிந்தவர் முன் பிம்பத் தனி மயிலில்
செம்பொற்ச் சிலம்பொலிக்கத் தோன்றுவான்
நம் சிந்தைக் கிசைந்து விளையாடுவான்
பொங்கும் தனிக் கருணைத் தங்கத் தனம்
சகல சம்பத்தையும் தந்து வாழ்த்துவான்
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
audio1
audio2
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 15
15.1 திருநீற்றுப் பெருமை - திருவருட்பா
வள்ளல் பெருமான்.
தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும்
நவமண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும்
பவனன், புனல், கனல், மண், வெளி பலவாகிய பொருளாம்
சிவ ஷண்முக எனவே அருள் திரு நீறணிந் திடிலே
15.2. ஸ்ரீ மத் பாம்பன் ஸ்வாமிகளின் "தௌத்யம்"
(முருகனின் திருவடிப் புகழ்ச்சி)
ஏரக நாயக என் குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதி தரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே
ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர குஞ்சரி
இங்கித காவல இக பர சாதக
பங்கயன் மால் பணி பாத நமஸ்தே
15.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
உய்வாய் மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவா-வினையே
15.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர் வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை
விளங்கு வள்ளிக் காந்தனைக் கந்தக் கடம்பனைக்
கார் மயில் வாஹனனைச் சாந்துணைப் போதும்
மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
சிவம் சுபம்
சுந்தரம் தியாகராஜன்
audio1
audio2
---------
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 14
14.1 திருநீற்றுப் பெருமை - திருவருட்பா
வள்ளல் பெருமான்.
மாலேந்திய குழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோலேந்திய வரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேலேந்திய வானாடர்கள் மெலியா விதம் ஒரு செவ்
வேலேந்திய முருகா என வெண்ணீர் அணிந்திடிலே
14.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி
உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா-வதி
காவல சூர பயங்கரனே
14.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப் படார், வெற்றிவேல் பெருமான்
அடியார்க்கு நல்ல பெருமாள்,அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள், திருநாமம் புகல்பவரே
14.4 ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகளின் திருப்போரூர்
சந்நிதி முறை
.
குமரா நம என்று கூறினார் ஓர் கால்
அமராவதி ஆள்வர் அன்றி - யமராசன்
கைபுகுதார், போரூரன் கால் புகுவார்
தாய் உதரப் பை புகுதார், சேரார் பயம்.
சிவம் சுபம்
audio-1
audio-2
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 13
13.1 திருநீற்றுப் பெருமை - திருவருட்பா
வள்ளல் பெருமான்.
திவசங்கள் தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும்
பவசங்கடம் அறும் - இவ்விக பரமும் புகழ் பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ ஷண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே
13.2 வேலும் மயிலும் துணை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் பொழுதும் வேலும் மயிலும் என்பேன்
செந்திலே ! வேலவனே ! செந்தில் வேலவனே !
13.3.திருப்போரூர் சந்நிதி முறை - ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்
கன்று அழைக்கும் முன்னே கருதி வரும் ஆ-போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர் தோன்றி -
ஒன்றினுக்கும் அஞ்சாதே, வா என்று அழைப்பாய்
தென் போரூரா ! எஞ்சாத பேர் அருளால் இன்று
13.4 திருச்செந்தூர் திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்
இயலிசையில் உசித வஞ்சிக் ......கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது உள் அறியும் அன்பைத் ...... தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் ...... தினை காவல்
வனசகுற மகளை வந்தித்து ...... அணைவோனே
கயிலைமலை யனைய செந்தில் ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
சிவம் சுபம்
audio - 1
மோஹனம்
ரோஹம் தீர்க்கும் ராகவேந்திர நாமம் சொல்லுவோம் - பவ
ரோஹம் தீர்க்கும் ராகவேந்திர நாமம் சொல்லுவோம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
நையாமல்,
மன மந்த்ராலயத்தில் ஐயனை இருத்தித் தொழுது
கங்கையிலும் புனிதமாய துங்கையில் நீராடி
மஞ்சாலம்மையின் கஞ்ச மலர் பதம் பணிந்து
அங்கையில் கனிபோல் அருள் மழை பொழியும்
பிருந்தாவன ராயரை பக்தியுடன் வலம் வந்து
சிவம் சுபம்
audio
தெய்வத் தமிழ் மலர் 9
தசாவதாரத் துதி
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கல்கியாய் மற்றும்
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா யுருவம் கொண்டு நல்லபடியோர்
வானாரின்பம் இங்குற வருதி.
(ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகப் பெருமான்
அருளிய மும்மணிக்கோவையில் இருந்து)
சிவம் சுபம்
audio
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 8
குமாரகீதம்**
சிவ...குஹ ..குமர..பராசல....பதியே...சீரலைவாய்...குருநாதா..
செந்தூர..செந்தளிர்...பழனாபுரி...வாழ்...திருவேரகம்...உறை ...கந்தா
செங்கதிர்...நிகர்...தணிகாசலம்...வென்றாள்..
செம்பழம்..உதிர்..உறை
எந்தாய்
தவ..முறை...ஆராதாரா...
தவமுனிவோர் பணி பாதா...
தா தா...தருண..சுபோதா.
ஜெய ஜெய சங்கர பாலக மணியே தாரக மந்திர வினோதா
சிவமே சிவமே சிவமே ஹ ஹர சிவமே....சுபமே..
**ஸ்ரீ வாரியார்.. சுவாமிகள்...அருளியது...
(ஜன.. கன..மன...மெட்டு)
சிவம் சுபம்
ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் போற்றி பரவும் திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் எளிய but அரிய பாடல்.
audio
தினமொரு தெய்வத் தமிழ் மலர் 7
இராம நாம பதிகப் பாடல் (திருவருட்பா)
அறம்பழுக்கும் தருவே, என் குருவே, என்றன்
ஆருயிருக் கொரு துணையே, அரசே, பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே, வெய்ய மறம் பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர் வாளினாற் பணிகொண்ட மணியே, வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றி மற்றோர் செயலி லேனே.
வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்
சிவம் சுபம்
audio
தினமொரு தெய்வத் தமிழ் மலர் 6
6.1. வேலும் மயிலும் துணை
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
தொழுதே உருகி அழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலம் விழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
செந்திலே! வேலவனே!
செந்தில் வேலவனே !
6.2. ஆறெழுத்து உண்மை
பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும்,
இகத்தில் முத்தி தந்து அனுதினம்
முழுப் பலன் நல்க, சத்தியம்
ஆவது "ச ர வ ண ப வ" வே .
ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச ஸ்வாமிகள்
சிவம் சுபம்
audio
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 4
திருமகள் துதி மலர்கள்**
திருமகளே! திருப்பாற் கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே,
உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே,
நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே,
தமியேன் தலைமீது நின் தாளைவையே.
தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால்,
வெம்தரணி முதல் கோளைவன் தீவினைப்
பேயோடு வென்று குலாவுவன் காண்,
வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி
அப்பால் வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச்செய் மின் கொடியே.
**ஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள்
அருளிய "திருமகள் அந்தாதி"யிலிருந்து இரு மலர்கள்.
சிவம் சுபம்
audio
தினமொரு தெய்வத் தமிழ் அமுதம் - 3
(அன்பே சிவம்)
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம்பொருளே - அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே - அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே - அன்புருவாம் பர சிவமே
வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராம லிங்க ஸ்வாமிகள்
சிவம் சுபம்
(பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த அன்பு/பக்தி மலர்)
audio
தினமொரு தமிழ் அமுதம் - 2
மண்ணுலகத்தினிற்...பிறவி...மாசற....
எண்ணிய...பொருள்...எல்லாம்....
எளிதிற்....முற்றுறக்
கண்ணுதல்...உடையதோர்...
களிற்று..மா..முகப்
பண்ணவன்..மலரடி...
பணிந்து...போற்றுவாம்....
ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்...(கந்தபுராணம்)

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 12
திருப்பரங்குன்றத் திருப்புகழ் **
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது
அருள் மாறா
உ(ள்)ளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன்
மலைபோலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி
தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிற அடு கதை கொடு
பொரு போதே
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம்
உறும் பொழுது அளவை கொள்கணத்தில் என் பயம்
அற மயில்
முதுகினில் வருவாயே
வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள
விழுக்கு உடைந்து மெய்
உகு தசை கழுகு உ(ண்)ண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை
அமர் புரி வேலா
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை
முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத
புய வரை உடையோனே
தினம் தினம் சதுர் மறை
முநி முறை கொடு
புனல் சொரிந்து அலர்
பொதிய விண்ணவரொடு
சினத்தை நிந்தனை
செயு(ம்) முநிவரர்
தொழ மகிழ்வோனே
தெனத் தெனந்தன என
வரி அளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரி தனில்
உறை
சரவண பெருமாளே.
அய்யன் அருணகிரிநாதர் அடிமலர் போற்றி
சிவம் சுபம்
audio-1
நாளுமொரு தெய்வத் தமிழ் மலர் 10
நோயை ஓட்டும் பெரியாழ்வார் திருமொழி
உற்றவுறு பிணி நோய்கள்
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்
திருக் கோயில் கண்டீர், அற்றம் உரைக்கின்றேன்
இன்னம் ஆழ்வினைகாள் உமக்கிங்கு ஓர்
பற்றில்லை கண்டீர், நடமின்
பண்டன்று பட்டினங்காப்பே
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
சிவம் சுபம்
மோஹனம்
ரோஹம் தீர்க்கும் ராகவேந்திர நாமம் சொல்லுவோம் - பவ
ரோஹம் தீர்க்கும் ராகவேந்திர நாமம் சொல்லுவோம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
நையாமல்,
மன மந்த்ராலயத்தில் ஐயனை இருத்தித் தொழுது
கங்கையிலும் புனிதமாய துங்கையில் நீராடி
மஞ்சாலம்மையின் கஞ்ச மலர் பதம் பணிந்து
அங்கையில் கனிபோல் அருள் மழை பொழியும்
பிருந்தாவன ராயரை பக்தியுடன் வலம் வந்து
சிவம் சுபம்
audio
தெய்வத் தமிழ் மலர் 9
தசாவதாரத் துதி
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கல்கியாய் மற்றும்
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா யுருவம் கொண்டு நல்லபடியோர்
வானாரின்பம் இங்குற வருதி.
(ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகப் பெருமான்
அருளிய மும்மணிக்கோவையில் இருந்து)
சிவம் சுபம்
audio
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 8
குமாரகீதம்**
சிவ...குஹ ..குமர..பராசல....பதியே...சீரலைவாய்...குருநாதா..
செந்தூர..செந்தளிர்...பழனாபுரி...வாழ்...திருவேரகம்...உறை ...கந்தா
செங்கதிர்...நிகர்...தணிகாசலம்...வென்றாள்..
செம்பழம்..உதிர்..உறை
எந்தாய்
தவ..முறை...ஆராதாரா...
தவமுனிவோர் பணி பாதா...
தா தா...தருண..சுபோதா.
ஜெய ஜெய சங்கர பாலக மணியே தாரக மந்திர வினோதா
சிவமே சிவமே சிவமே ஹ ஹர சிவமே....சுபமே..
**ஸ்ரீ வாரியார்.. சுவாமிகள்...அருளியது...
(ஜன.. கன..மன...மெட்டு)
சிவம் சுபம்
ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் போற்றி பரவும் திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் எளிய but அரிய பாடல்.
audio
தினமொரு தெய்வத் தமிழ் மலர் 7
இராம நாம பதிகப் பாடல் (திருவருட்பா)
அறம்பழுக்கும் தருவே, என் குருவே, என்றன்
ஆருயிருக் கொரு துணையே, அரசே, பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே, வெய்ய மறம் பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர் வாளினாற் பணிகொண்ட மணியே, வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றி மற்றோர் செயலி லேனே.
வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்
சிவம் சுபம்
audio
தினமொரு தெய்வத் தமிழ் மலர் 6
6.1. வேலும் மயிலும் துணை
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
தொழுதே உருகி அழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலம் விழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
செந்திலே! வேலவனே!
செந்தில் வேலவனே !
6.2. ஆறெழுத்து உண்மை
பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும்,
இகத்தில் முத்தி தந்து அனுதினம்
முழுப் பலன் நல்க, சத்தியம்
ஆவது "ச ர வ ண ப வ" வே .
ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச ஸ்வாமிகள்
சிவம் சுபம்
audio
தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 4
திருமகள் துதி மலர்கள்**
திருமகளே! திருப்பாற் கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே,
உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே,
நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே,
தமியேன் தலைமீது நின் தாளைவையே.
தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால்,
வெம்தரணி முதல் கோளைவன் தீவினைப்
பேயோடு வென்று குலாவுவன் காண்,
வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி
அப்பால் வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச்செய் மின் கொடியே.
**ஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள்
அருளிய "திருமகள் அந்தாதி"யிலிருந்து இரு மலர்கள்.
சிவம் சுபம்
audio
தினமொரு தெய்வத் தமிழ் அமுதம் - 3
(அன்பே சிவம்)
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம்பொருளே - அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே - அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே - அன்புருவாம் பர சிவமே
வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராம லிங்க ஸ்வாமிகள்
சிவம் சுபம்
(பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த அன்பு/பக்தி மலர்)
audio
தினமொரு தமிழ் அமுதம் - 2
மண்ணுலகத்தினிற்...பிறவி...மாசற....
எண்ணிய...பொருள்...எல்லாம்....
எளிதிற்....முற்றுறக்
கண்ணுதல்...உடையதோர்...
களிற்று..மா..முகப்
பண்ணவன்..மலரடி...
பணிந்து...போற்றுவாம்....
ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்...(கந்தபுராணம்)
சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment