Friday, October 21, 2016

ஸியாட்டில் வாழும் ஸ்ரீ கண நாதா (Hamsanandi)

ஹம்ஸாநந்தி

ஸியாட்டில் வாழும் ஸ்ரீ கண நாதா,
எங்கள் சித்ததுள் கலந்தொளிரும் சத் குண நாதா

நீர் வலம் வந்த. உலகம்மை யப்பரே எம்மையும் ஈன்ற பெற்றோர் ஆவரே

தடைகளைத் தகர்த்தெறியும் தந்த முகரே,
கடல் கடந்து வாழும் எம்மைக் காக்க
வந்தீரே,
மடை திறந்த வெள்ளமாய் அருள் பொழியும்,
ஆனைமுக வள்ளலே, ஆறுமுகன் சோதரரே

அரி மருகனாம் கரிமுகரே
சரி சரி என்றெம் குறை களைபவரே, (வாழ்வில்)
நெறி பிறழாதெம்மை வழி நடத்தி
உரிய நேரத்தில் உம் பதமுமம் தருவீரே

சிவம் சுபம்

audio

No comments:

Post a Comment