Friday, October 21, 2016

அகிலம் போற்றும் அனுஷ நாதரே

ஓம்

அகிலம் போற்றும் அனுஷ நாதரே,
ஆதி குருவின் மறு உருவே,
இம்மையில் எம் கண் கண்ட தெய்வமே
ஈசராம் எங்கள் காமகோடீசரே
உறு துணை நீரே, மஹா பெரியவரே
ஊழ்வினை மாற்றும் பர பரஹ்மமே,
எண்திக்கும் பரவும் நர நாராயணரே,
ஏகனாம் சந்திர சேகர வள்ளலே,
ஐயமில்லா உளம் உறை ஆத்ம நாதரே,
ஒப்பிலா வேத ஆகம பாலனரே,
ஓம்காரத்தொளிர் தவச் செம்மலே,
ஔதார்ய காமாக்ஷி அன்னையும் நீரே,

தந்தருள்வீரே எமக்கே உம் பத மலர் நிழலே.

சிவம் சுபம்

audio

No comments:

Post a Comment