Wednesday, February 4, 2015
ஓம் ஜெய் ஜெகதீஸ்வரரே ! ஸ்வாமி சந்திர சேகரரே
ஓம் ஜெய் ஜெகதீஸ்வரரே ! ஸ்வாமி சந்திர சேகரரே
கரமலர் குவித்தோம் உம் முன் ஸ்வாமி, பதமலர் தந்தருள்வீர்
எமக்கே பதமலர் தந்தருள்வீர்....
ஈச்சங்குடி அன்னை உலகுக்களித்த ஈடில்லா ஜெகத் குருவே !
விழுப்புரம் கண்ட மெய்ப்பொருளே, எங்கள் இருவினை களைந்தருள்வீர், மும்மலம் வேரறுப்பீர்...
ஆலடி அமர்ந்தோன் மறு உருவே எங்கள் காமகோடீஸா !
பாதம் நோக காதம் நடந்து வேதம் காத்தவரே!
பேதம் களைந்தவரே ! ஹரி ஹர பேதம் களைந்தவரே
த்வைதா-த்வைதரும் போற்றும் எங்கள் கண்கண்ட கடவுளே!
எம்மிடை நடமாடும் தெய்வமே ! உமது, பாதுகைப் பூவே....
எங்கள் பாதுகாப்பு....சுவாமி....
ஏகனும் நீரே ! வரதனும் நீரே! ஏழைப் பங்காளன் நீரே...அன்னை
காமாக்ஷி-யாய் எம்மைக் காக்கும் பரமாச்சார்யரே!
ஆரத்தி ...ஏற்றருள்வீர்...மங்கள ஆரத்தி ஏற்றருள்வீர்
ஜெய ஜெய சங்கர கருணா சமுத்திர சந்திர சேகரரே !
ஹர ஹர சங்கர காமகோடீஸ்வர பரமாச் சார்யரே !
எங்கள் பரமேஸ்வர ரே ! எங்கள் பரமச்சார்யரே !
Audio link
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment