Raagam: கல்யாணி
Composer: ஸ்ரீ ஆனை அய்யா சஹோதரர்களின் சாஹித்யம்
சோம வார தரிசனம் செய்தார்கள் ஸ்வர்க்கம் யாசிப்பதில்லை.....
த்ரிபுரசுந்தரியை........
சோமன் அணி அகஸ்தீசன்.... பங்கினில் சொந்தமாக
வந்த நாயகியை.....
மயலாகி மாதரை நாடாமல்
மனம் போன வழி போய் வாடாமல்
வையம் மீது மூடரைப் பாடாமல்.... (நல் )
வாக்குத் தந்தவளை மறவாமல்......... (சோம)
நாராதாதி முனிவர்கள் கீதம் பாட
நம்பும் உண்மை "உமை தாசன்" கொண்டாட
பாரினில் எம பாசம் பறந்தோட....
பஞ்சாக்ஷரம் எனும் மந்த்ரம் கை கூட........ (சோம)
Notes
About Shri Aanai Iyer and his brothers......
ஸ்ரீ ஆனை அய்யர் AND ஸ்ரீ அய்யாவைய்யர் சஹோதரர்கள் 19ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த இசை மேதைகள். சத்குரு ஸ்ரீ த்யாகராஜ
ஸ்வாமிகளின் சமகாலத்தவர்கள். தெலுங்கிலும் தமிழிலும் "உமைதாசன்"
என்ற முத்திரை கொண்ட அற்புதமான கிருதிகள் இயற்றிய மஹான்கள்.
சிவம் சுபம்
த்யாகராஜன்
No comments:
Post a Comment