Wednesday, February 4, 2015

Natarajar Pathhu by Shri Mazhavai Munnusami - 10 Songs on Lord Nataraja

ஸ்ரீ நடராஜர் பத்து - by ஸ்ரீ மழவை முனுசாமி

"10 Songs on Lord Nataraja" composed by Shri Mazhavai Munusami

Transcribed and Sung by Shri S. Thiagarajan

(Please click on the "audio link" which shall open a new window with the audio)

1.  மோஹனம்

மண் ஆதி பூதமொடு விண்  அதி அண்டம் நீ - மறை நான்கின் அடிமுடியும் நீ 
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ,அனலும்  நீ,  மண்டலம் இரண்டெழும் நீ 
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல் உயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ நீயே, 
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே, 
பொன்னும் நீ,பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ, 
புகழொணாக் கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, 
எண்ணரிய ஜீவ கொடிகள் ஈன்று உவப்பவனே, என் குறைகள் யார்க்குரைப்பேன் 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 


https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtdldxY3BCa2ktNjA&authuser=0

2. பிருந்தாவன சாரங்க 

மானாட மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமி யாட, 
மாலாட  நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரமனாட 
கோனாட வானுலக கூட்டமெல்லாம் ஆட, குஞ்சர முகத்தான் ஆட 
குண்டலம் இரண்டாட, தண்டை புலியுடை ஆட, குழந்தை முருகேசனாட 
ஞான சம்பந்தரோடு, இந்திராதி பதினெட்டு முனி அஷ்ட பாலகரும் ஆட 
நரை தும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட 
வினை ஓட உனைப் பாட எனை நாடி இது வேளை  விருதோடு ஆடி வருவாய் 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtYUhXWHFFcjljalE&authuser=0

3. பாக ஸ்ரீ 

கடல் என்ற புவி மீதில் அலை என்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பிக் 
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம் 
உடலென்ற கும்பிக்கு உணவென்ற  இரை  தேடி ஓயாமல் இரவு பகலும் 
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே அல்லாது ஒரு பயன் அடைந்திலேனே !
தடமென்ற இடிகரையில் பந்த பாசம் என்னும் தாபரப் பின்னில் இட்டுத் 
தாய் என்று சேய் என்று நீ என்று நான் என்று தமியேனை இவ்வண்ணமாய் 
இடை என்று கடை நின்று ஏன் என்று கேளாதிருப்பதுவும் அழகாகுமோ ?
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtMzUtU3ZPbThkV3M&authuser=0

4. சிந்து பைரவி 

வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணந் தம்பனம் வசியமல்ல 
பாதாள வஞ்சனம் பரகாய ப்ரவேசம் அது வல்ல, ஜாலமல்ல 
அம்பு குண்டுகள் விலக மொழியும் மந்த்ரம் அல்ல, ஆகாயக் குளிகை அல்ல 
அன்போடு செய்கின்ற வாத மோடிகளல்ல, அரியமோ கனமுமல்ல 
கும்ப முனி மச்ச முனி சட்ட முனி பிரம்ம ரிஷி கொங்கணர் புலிப்பாணியும் 
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல 
என் மனதுன்னடி விட்டு நீங்காது நிலை நிற்கவே  உளவு புகல .....
வருவாய் ...ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtMVJzVFFTVml6U2s&authuser=0


5.அடாணா 

நொந்து வந்தேன் என்று ஆயிரம் சொல்லியும் செவி என்ன மந்தம் உண்டா 
நுட்ப நெறி அறியாத பிள்ளையை பெற்றபின் நோக்கத தந்தை யுண்டா 
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சம் உண்டோ 
தந்தி முகன் அறுமுகன் இரு பிள்ளை இல்லையோ தந்தை நீ மலடு தானோ 
விந்தையும் ஜாலமும் உன்னிடம் இருக்குதே வினையோன்றும் அறிகிலனே 
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதல் வேடிக்கை இதுவல்லவோ 
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லும் இனி உன்னை விடுவதில்லை 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtSjREWWJxdWtvczA&authuser=0

6.சுப பந்துவராளி 

வழி கண்டு உன்னடியைத் துதியாத போதிலும், வாஞ்சை இல்லாத போதிலும் 
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும், வஞ்சமே செய்த போதிலும் 
மொழிகளை மொகனை இல்லாமலே பாடினும், மூர்க்கனேன் முகடாகிலும் 
மோசமே செய்யினும், தேசமே கவரினும், முழு காமியே ஆகினும் 
பழியெனக் கல்லவே, தாய் தந்தைக் கல்லவோ ..பார்த்தவர்கள்  சொல்லார்களோ ?
பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ பாலகனைக் காக்கொணாதோ ?
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ?
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtWDhDZ0VWME41WVE&authuser=0

7. சஹானா 

அன்னை தந்தைகள்  என்னை ஈன்றதற் கழுவனோ, அறிவில்லாத தற்கழுவனோ 
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ..ஆசை மூன்றுக் கழுவனோ 
முன் பிறப்பென்ன வினை  செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கழுவனோ 
முன்னிலென் வினை வந்து மூழுமென்றழுவனோ  முத்தி வரும் என்றுணர்வனோ 
தன்னை நொந்தழுவனோ, உன்னை நொந்தழுவனோ, தவமென்ன வென்றழுவனோ 
தையலர்க் கழுவனோ மெய் வளர்க்கழுவனோ தரித்திர திசைக் கழுவனோ 
இன்னம் என்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய் 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtVWJlNnJudzhzaHc&authuser=0


8. ஹரஹரப்ரியா 

காயா முன் மரமீது பூப்பிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டேனோ 
கடனென்று பொருள் பறித்தே  வயிறு எரித்தனோ, கிளை வழியில் முள்ளிட்டனோ 
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தேனோ, தந்த  பொருள் இல்லை என்றனோ 
நானென்று கெர்வித்துக்  கொலை களவு செய்தேனோ, தவசிகளை  ஏசினேனோ 
வாயாரப் பொய் சொல்லி வீண் பொருள் பறித்தனோ,  வானவரைப் பழித்திட்டேனோ 
வடவு போலப் பிறரை சேர்க்கா தடித்தேனோ, வந்த பின் என் செய்தேனோ 
ஈயாத லோபியென்றே பெயரேடுத்தேனோ...... எல்லாம் பொறுத்தருள்வாய் 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtcVVHdS0yYnJuVHM&authuser=0


9. நாட்டகுறிஞ்சி 

தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன 
தன்  பிறவி உறவு கோடி தனமலை குவித்தென்ன 
கனப்பெயர்  எடுத்தென்ன, தாரணியை  யாண்டுமென்ன 
சேயர்கள் இருந்தென்ன, குருவாய் இருந்தென்ன, சீடர்கள் இருந்துமென்ன,
சித்து பல கற்றென்ன, நித்தமும் விரதங்கள் செய்தென்ன 
நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன், 
எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க வதவுமோ,  இதுவெல்லாம் ?
தந்தை உறவென்றுதான் உன்னிரு பாதம் பிடித்தேன்,
யார்மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதும் 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audiolink

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtVWJlNnJudzhzaHc&authuser=0

10. ஆஹிரி 

இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ 
இரு செவியும் மந்தமோ கேளாது அந்தமோ, இது உனக்கழகு தானோ 
என்னென்ன மோசமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ 
இருபிள்ளை  தாபமோ,யார்மீது கோபமே யானாலும் நான் விடுவனோ 
உன்னை விட்டெங்கு சென்றாலும், விழலாவனோ, நான் உன்னை அடுத்தும்  கெடுவனோ 
ஓஹோ இது உன் குற்றம்  என் குற்றமொன்றுமிலை, உற்றுப் பார் பெற்றவையாய்  (பெற்ற  அய்யா)
என்  குற்றமாயினும்,உன் குற்றமாயினும் இனி அருள் அளிக்க வருவாய் 
 ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtNEdxN3FXTTJrbWs&authuser=0

11.  ஆனந்த பைரவி 

 சனி  ராகு, கேது  புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரைச் 
சற்று எனக்குள்ளாக்கி, இராசி பனிரெண்டையும்  சமமாய் நிறுத்தி உடனே 
பனியொத்த நட்சத்திரங்கள் இருபத்தேழும் பக்குவப் படுத்திப்  பின்னால் 
பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி என்முன் 
கனிபோலவே பேசி கெடு நினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கி 
காத்த நின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி 
இனிய வள மருவு சிறு மணவை முனிசாமி எனை அருள்வதினி  உன் கடன் காண் 
ஈசனே, சிவகாமி நேசனே, எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே 

audio link - 

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtVlJtSGpRUUFlZVk&authuser=0


சிவம் சுபம் 
த்யாகராஜன் 

No comments:

Post a Comment