Tuesday, February 17, 2015

சிவராத்திரி சிந்தனை - வள்ளல் வாக்கில்


எல்லாம் தருவார் ஈசன் 

ஊர் தருவார்  நல்ல ஊண்  தருவார் உடையும் தருவார் 
பார் தருவார் உழற் கேர் தருவார் பொன் பணந்தருவார் 
சோர் தருவார் உள்  ளறிவு கெடாமல் சுகிப்பதற்கிங்(கு)
கார் தருவார் அம்மையார் தரு பாகனை யன்றி நெஞ்சே 

எல்லாம் அளிக்கும் திருநீறு 
பாடற்  கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் 
கூடற் கினிய  அடியவர் தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் 
ஆடற் கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என் ஆணை கண்டாய் 
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நம் என்று இடு நீறே

audio link



No comments:

Post a Comment