பாகஸ்ரீ
த்ரிபுரஸுந்தரி அன்னையே, திரும்பக் காண்பேனோ உன்னையே
பெற்றவளை இழந்த என்னைப் பேணிய உற்ற தாயே, தக்க தருணத்தில் உன் அருகில் தனயன் நான் இல்லையே, அம்மா
(உன்)மஞ்சள் முகமும், மலர்ந்த வதனமும், நீ இட்ட என் நெற்றிக் குங்குமமும், உன்னுடன் நான்
இசைத்த கீதமும், என்றும் என் உயிருள் கலந்- தினிக்கும் அம்மா! சத்தியம்
மதுரகாளியின் மறு உருவே, அன்பர் மனக்குறை தீர்த்த தருவே, (எம்) குறைகளையும் குணமாய் கொண்ட குருவே, (கனவிலும்) மறவேனம்மா உன் திருப் பாத மலரே
No comments:
Post a Comment