Sunday, July 26, 2015

குருவை நினைந்தாலே கோடி நன்மை (Yadhu Kula Kambhodhi)



யது குல காம்போதி

audiolink

குருவை நினைந்தாலே கோடி நன்மை,
குருவைப் பணிந்தாலே கிட்டும் இறவாமை, மீண்டும் பிறவாமை

குருவே நம் குல தெய்வம், குருவருளே நம் குலம் காக்கும் தனம்

ஆலடி குரு ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி,
காலடி குரு ஆதி சங்கர மூர்த்தி,
காமகோடி குரு ஸ்ரீ சந்த்ர சேகர மூர்த்தி,  போற்றிப் பாடுவோம் இம் மும்மூர்த்த்திகளின் கீர்த்தி

நடமிடும் சங்கரனே நம்மிடை வந்தார், நடமாடும் தெய்வமாய் நம்முளே கலந்தார், அம்மை யப்பனாய்  அருள் பொழிகின்றார், இம்மை மறுமை (பிணி) அகற்றி  ஆட்கொள்கின்றார்

Sivam Subam

No comments:

Post a Comment