Sunday, July 26, 2015

மனவருத்தம் தீர்க்கும் மருந்து (Naada Namakriya)



நாத நாமக்ரியா 

மன வருத்தம் தீர்க்கும் மா மருந்து
மதுரை மீனாளின் திரு நாம அமுது 
மலை போல் துயரையும் பனிபோல் போக்குவாள்  (அந்த)
மலையத் வஜனின் திருமகள் தானே 
பிரமனாய்  நம்மைப் படைத்தவள் அவளே
பேணிக் காக்கும் திருமாலும் அவளே
அகமணைத் தாட்கொள்ளும் அரனும் அவளே
அனுதினம் சூடுவோம் அவள் திருத் தாளே 
ஆனை முகனுக்கு கனி கொடுத்தாள்
ஆறு முகனுக்கு வேல் தந்தாள்    (நம்)
அய்யனுக்கு தன்னில் பாதியை ஈந்தாள்
அன்பர் நமக்கு தன்னையே தருவாள்  


No comments:

Post a Comment