--- வலஜி
சென்னை வாழும் பரமேசன்
என்னுள் ஒளிரும் ஜீவேசன்
என்னுள் ஒளிரும் ஜீவேசன்
அறுபத்து மூவர் வணங்கும் கா-பாலீசன்
அருமருந்தீசன், வைத்திய நாதன்
அருமருந்தீசன், வைத்திய நாதன்
வடிவுடையாள் நாதன் ஒற்றீசன்
கனிவுடன் காக்கும் கச்சபேசன்
காலம் தாழ்த்தா காரணீசன்
கோவூர் வாழும் சுந்தரேசன்
கனிவுடன் காக்கும் கச்சபேசன்
காலம் தாழ்த்தா காரணீசன்
கோவூர் வாழும் சுந்தரேசன்
திரிசூலன், திரி நேத்ரன்
நங்கை நல்லாள் உறை அர்த்த நாரீசன்
வெள்ளி(யின்) பார்வை மீட்ட சுக்ரேசன்
வேண்டிய தெல்லாம் தரும் சென்ன மல்லீசன்
நங்கை நல்லாள் உறை அர்த்த நாரீசன்
வெள்ளி(யின்) பார்வை மீட்ட சுக்ரேசன்
வேண்டிய தெல்லாம் தரும் சென்ன மல்லீசன்
(சென்னையுள்) எண்ணிலடங்கா கோயிலம்மா !
எங்கு நோக்கினும் முக் கண்ணனம்மா !
ஏட்டிலடங்கா கீர்த்தி அம்மா ! ஒரு
பாட்டினுள் கூற முடியுமா ?
எங்கு நோக்கினும் முக் கண்ணனம்மா !
ஏட்டிலடங்கா கீர்த்தி அம்மா ! ஒரு
பாட்டினுள் கூற முடியுமா ?
சிவம் சுபம்
No comments:
Post a Comment