Sunday, July 26, 2015

விளக்கை ஏற்றிடுவோம் (Poorvi Kalyani)

விளக்கை ஏற்றிடுவோம் (Poorvi Kalyani)


பூர்வி கல்யாணி 

விளக்கை ஏற்றிடுவோம்.... இருளை விரட்டிடுவோம்
அகல் விளக்கை ஏற்றிடுவோம்..... அக இருளை விரட்டிடுவோம் 
விளக்கொளிரும் ஜோதி...அதுவே நம்மை படைத்த ஆதி
விலக்கிடுமே அநீதி, விளக்கிடுமே அனைத்து நீதி 
(நாளும்)  விளக்கை வலம்  வருவோம்
விளையுமே நிலைத்த நலம், இன்பம்
(நாளும்) விளக்கை வணங்கிடுவோம்
வீடும் பேரும் பெற்று உய்வோம் 
(நாளும்) இருமுறை விளக்கேற்றி, நாமே
இருவினை களைந்திடுவோம்
(விளக்கினில்) இறைவனை கண்டிடுவோம், அந்த
இறையுள் கலந்து வாழ்ந்து உய்வோம் 

சிவம் சுபம் 

No comments:

Post a Comment