Wednesday, June 24, 2015

Sri Raama Lingam (Sivaranjini)


சிவரஞ்சனி 

அன்னை சீதை சமைத்த லிங்கம்
அண்ணல் ராமன் தொழுத லிங்கம் 
ராம அனுஜனும் பணிந்த லிங்கம்
ராம லிங்கம் ராம நாத லிங்கம் 
மண்ணால் ஆன மஹா  லிங்கம்
விண்ணோரும் தொழும் விஸ்வ லிங்கம்
அனுமன் கொணர்ந்த அற்புத லிங்கம்
ஆகம வேத ஆத்ம லிங்கம் 
பர்வதவர்தினி பாக லிங்கம்
பாவம் களையும் பாவன லிங்கம்
பிரமன் விஷ்ணு தேடிய லிங்கம்
ப்ரசித்தி பெற்ற ஜ்யோதிர் லிங்கம் 
சிவம் சுபம் 



No comments:

Post a Comment