மழலை மாறாக் கண்ணன், நல் மாயம் செய்யும் மன்னன்
குழல் ஊதும் கண்ணன், அவன் குறை களையும் மன்னன்
சேலை திருடும் கண்ணன், பெண் மானம் காக்கும் மன்னன், கீதை உறைத்த கண்ணன், நல் பாதை சமைத்த மன்னன்
அவலைத் தின்னும் கண்ணன், நம் ஆவலைத் தூண்டும் மன்னன்,வெண்ணை உண்ணும் கண்ணன், விண்ணையும் அளந்த மன்னன்
மலரை ஏந்தும் கண்ணன், மலர் மகளைக் கவர்ந்த
மன்னன், சிவை சோதரன் கண்ணன், சீலரைக் காக்கும் மன்னன்
மன்னன், சிவை சோதரன் கண்ணன், சீலரைக் காக்கும் மன்னன்
ஆலிலை மிதந்த மதலை, நம் ஆன்மாவைக் கவர்ந்த மழலை, குரு-வாயூ கொணர்ந்த குழந்தை, குரு வாயூர் அப்பனாம் (நம்) எந்தை!
No comments:
Post a Comment