Monday, June 8, 2015

திருவடிப் புகழ்ச்சியின் மாண்பு (Aahir Bairav)


Aahir Bairav

திருவடியைத் தொழ, "திரு" முகம் மலரும் "திரு"  மனம் நிறையும்,  திரு வருள் பொழியும், இறை 
வீணரை முகப் புகழ்ச்சி செய்   துழலாமல்
வாணனின் திருவடி தொழு தெழுவோம் வாரீர் 
வடலூர் வள்ளலின் திருவடிப் புகழ்ச்சி  வாணனுக்கே,
பாம்பனாரின் தௌத்தியம் முருகனின் மலரடிக்கே,
பட்டத்ரியின்  பாத சப்ததி பரா சக்திக்கே,
வண்ணச் சரபரின் ஆயிரம் அரங்கனின் அடிக்கே
(மெய்)ஞானிகள் பற்றுவர் இறை திருவடியே,
அஞ்ஞானிகளே புகழ்வர் மனிதப்  பதர்களை,
ஞானிகளாய் நாமும் உயர் வோமே
ஞால முதல்வன் தாள் சேர்வோமே  

No comments:

Post a Comment