Monday, June 1, 2015

அந்தாதி அஷ்டோத்திர போற்றி மலர்கள்



audiolink

(The following hymn has been strung together in Andadi Style)
-----------------------

ஓம் 

 சர்வ ஜெகத் குரு ஸ்ரீ காமகோடி சந்திரசேகரேந்திர பரமாச்சார்ய பரமேஸ்வர மஹா குரு ஸ்வாமி அவர்களின்                                                                                       அந்தாதி அஷ்டோத்திர போற்றி மலர்கள் 


1. திருமகள் அளித்த அருட் கடலே - போற்றி 

2. அருட் கடலாம்  குரு குஹ னே  - போற்றி 

3. குரு குஹனாம் ஸ்வாமி நாதரே  போற்றி 

4  ஸ்வாமி நாதராம் மஹா ஸ்வாமியே - போற்றி 

5. மஹா ஸ்வாமியாம் மெய்ப் பொருளே - போற்றி 

6.மெய்ப்பொருளாம் பரம் பொருளே - போற்றி 

7. பரம் பொருளே, அன்பருள் ஒளிர் அரும் பொருளே - போற்றி 

8. பொருள், பொன், போகம் அறியாய் போற்றி - போற்றி 

9. அறிவாய் ஒன்றே,  அறமே போற்றி 

10. அறம் விட்டகலா  அரனே போற்றி 

11 . அரனே, அரியே  , பிரமனே போற்றி 

12. பிரம ஞான துறவியே போற்றி 

13.துறவின் இலக்கணமே போற்றி 

14. இலக்கணம் மாறா இலக்கியமே போற்றி 

15, இலக்கு எமக்கு உம் இரு பதமே போற்றி 

16. பதம் பதித்து புவியை புனிதம் ஆக்கினை போற்றி 

17. ஆக்கும் தொழில் ஐந்தும் புரி அரனே போற்றி 

18. அரனே,  அனுஷத்தில் மீண்டும் உதித்தாய் போற்றி 

19. உதித்தாய்,   ஆலடியான்  மறு உருவாய் - போற்றி 

20. உருவே, எளிமைத் திருவே போற்றி 

21. திருவே , திருமிகு காலடி குருவே போற்றி 

22. குருவே, காமகோடி இறையே போற்றி 

23. இறையே , இறைவி காமாக்ஷி அன்னையே போற்றி 

24. அன்னையே, அன்னையின் மாறாக்  கனிவே போற்றி 

25. கனிவே, கனிந்து பழுத்த ஞானியே போற்றி 

26. ஞானியே, ஞானக் கனியின் சாரமே போற்றி 

27. சாரமே, சாரதா தேவியே போற்றி 

28. தேவியே, தேவி அமர் மேருவே போற்றி 

29. மேருவே, மேருவில் ஒளிர் ஜோதியே போற்றி 

30. ஜோதியே, ஜோதியுள் நிலை ஒளியே போற்றி 

31. ஒளியே, ஓட்டுவாய் இருளே போற்றி 

32. இருளை  நீக்கும் (ஞான-விஞ்)ஞானமே  போற்றி 

33. ஞானமே!  வடிவான தெய்வமே போற்றி 

34. தெய்வமே! எம்மிடை நடமாடும் தெய்வமே போற்றி 

35. தெய்வமே! எம்முள் நடமிடும் தெய்வமே, போற்றி 

36. தெய்வமே! தெய்வத்தின் குரலே போற்றி 

37. குரலே! குரலில் ஒளிர்  குறளே  போற்றி 

38. குறளே! வேத ஆகம சாஸ்த்ரமே போற்றி

39. சாஸ்த்ரமே! சாஸ்திரம் வழுவா நெறியே போற்றி 

40.நெறியே! நெறி பிறழா தவமே  போற்றி 

41.தவமே! தவத்தில் கயிலை சிகரமே போற்றி 

42.சிகரமே!  சிகரத் தொளிர் பிறையே  போற்றி 

43.பிறை சூடும் இறையே போற்றி 

44. இறையே ! மறைத்தாய் புனலும், ஒரு நயனமுமே  போற்றி 

45. இரு நயனம் பொழி ஒளியே போற்றி 

46. ஒளியில் நிறை  அருளே போற்றி 

47. அருளில் கலந்த அன்பே போற்றி 

48.. அன்பே வடிவான சிவமே போற்றி 

49. சிவம்  பொழி சுபமே போற்றி 

50.. சுபம் பொழி  நெற்றித் திரு நீறே  போற்றி  

51. திரு நீற்றுடன் இணை காஷாயமே போற்றி 

52. காஷாயத் திருமேனியே போற்றி 

53. திருமேனி சூடும் தே-ஆரமே போற்றி (தேவாரமே போற்றி)

54. தேவாரத்துக்கு அணி செய்  ருத்ராக்ஷமே போற்றி 

55. ருத்ராக்ஷத்துடன் புனை துவளமே  போற்றி 

56. துவளத்துடன் இணை துளசியே  போற்றி 

57. துளசியுடன்  இணை தும்பை இதழ்களே போற்றி 

58. இதழ் அவிழ்  திரு வாய் மலரே போற்றி 

59. திருவாய் மலர் திரு வாசகமே  போற்றி 

60. அவ்வாசகமே கனிவிக்கும் கல்லையுமே போற்றி 

61. கல்லினுள்  தேரைக்கும் அருளும் கருணையே போற்றி 

62. கருணையே,  மெய்த்  தவமே போற்றி 

63. தவமே செய் சிவையே போற்றி 

64. சிவையுடன் இணை சிவமே போற்றி 

65. சிவ  கரம் ஏந்தும் தண்டமே போற்றி 

66.. தண்டமே, மும்மலம்  நீக்கும் திரி சூலமே, போற்றி   

66. சூலமே காக்கும் உலகில் சீலமே போற்றி 

67. சீலமே அருளும் ஜெயமே  போற்றி 

68. ஜெயமருள் மலர் கரமே போற்றி 

69. கரம் பொழி கனக தாரையே போற்றி 

70. தாரையே, தண்ணருள் மழையே போற்றி 

71. (அருள்) மழையால் தழைக்கும் உலகுயிரே போற்றி 

72. உலகுயிர் அனைத்தும் போற்றும் இறையே போற்றி 

73. இறையே, இசையே, லயமே, போற்றி 

74. லயமே,  நாதமே, வேதமே போற்றி 

75. வேதமே, யாகமே, யக்யமே  போற்றி  

76. யக்ய ரக்ஷக சாதுவே போற்றி 

77. சாதுவே, ஸ்வதர்ம ஹேதுவே போற்றி 

78. ஹேதுவே ,  சர்வ  தர்ம  சேதுவே  போற்றி 

79. சேதுவே, ஷண்மத சங்கரரே  போற்றி 

80. சங்கரரே, சாந்த அத்வைத சங்கரரே போற்றி 

81. சங்கரரே, சர்வக்ய சங்கரரே போற்றி 

82. சங்கரரே, சர்வ லோக வசங்கரரே போற்றி 

83. வசங்கரரே, சர்வ சம்மதாச்சார்யரே போற்றி 

84. ஆசார்யரில்  பரமாச்சார்யரே போற்றி 

85. பரமாச்சார்ய சந்திர சேகரரே போற்றி 

86. சேகரரே, கருணா சாகரரே போற்றி 

87. சாகரரே, சாகா வரம் அளிப்பீரே போற்றி 

88. அளிப்பீர் தீர்த்த  ப்ரசாதமே, போற்றி 

89. ப்ரசாதமே, பிறப்பறுக்கும் அமுதமே, போற்றி 

90. அமுதை மிஞ்சும் அருட் பார்வையே, போற்றி 

91. அருட் பார்வையே  ஈர்க்கும் அகிலத்தையே,  போற்றி 

92. அகிலமே நெகிழும் எளிமையே போற்றி 

93. எளிமையினும் எளிய உபதேசமே போற்றி 

94. உபதேசம்  களைந்தது பேதங்களை, போற்றி 

95. பேதமில்லா ஏகனே போற்றி 

96. ஏகனே,அநேகனே  போற்றி 

97. அநேக கோடி ப்ரஹ்மாண்டனே, போற்றி 

98. ப்ரஹ்மாண்டரின் பாதமே போற்றி 

99. பாதமே நடந்த காதமே போற்றி 

100. காதம் நடந்து காத்த வேதமே போற்றி 

101. வேத விஞ்ஞான விசாரமே போற்றி 

102 விசார விவஹார நிபுணமே போற்றி 

103. நிபுணத்தில் வியந்த உலகமே போற்றி 

104 உலகை  அளந்த (or வென்ற)  பாதமே  போற்றி 

105. பாதமே தாங்கும் பாதுகையே போற்றி 

106. பாதுகா ப்ருந்தாவனமே போற்றி 

107 பிருந்தாவனத் துறை பெரியவா போற்றி 

108. பெரியவா பாதுகைப பூவே போற்றி 

  பெரியவா  பாதுகைப் பூவே நம் பாதுகாப்பு 
  மஹா பெரியவா பாதுகைப் பூவே நம் பாதுகாப்பு 


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர - ஆலடி சங்கர  காலடி சங்கர - காலடி சங்கர காமகோடி சங்கர 
காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர - காமாக்ஷி சங்கர ஸ்ரீ சந்த்ர சேகர - ஸ்ரீ சந்த்ர சங்கர ஜெய ஜெய சங்கர - ஜெய ஜெய சங்கர ஸ்ரீ சந்த்ர  சேகர 

சிவம் சுபம் 








No comments:

Post a Comment