Thursday, July 9, 2020

திருநீற்றுச் சுடராள் & அம்பா ஜெகதம்பா (Jagadhambha)



திருநீற்றுச் சுடராள்
திருநெற்றி குங்குமத்தாள்,
கருணைபொழி கண்ணாத்தாள்
கண்ணனை, முக்கண்ணனைக் காத்தாள்,
சமய புரத்தாள்,
சதுர் மறையாள்,
கமலத் தாள் (நம்)
சிரம் வைத்தால்,
காலனும் அணுகான நம்மை பயத்தால்.

சிவம் சுபம்


OM

Friday Eve Praarththanaa to Divine Mother

Raaga : Maaligaa

AMBAA
JEGADHAMBAA
ABAYAAMBAA
KAMALAAMBAA

KARPAGAAMBAA
KAALIKAAMBAA
MADHURAAMBAA
MOOKAAMBAA

DHARMAAMBAA
THRI-PURAAMBAA
THRI-NETHRAAMBAA
DIGVIJAYAAAMBAA

BRUHADHAAMBAA
BRAHMARAAMBAA
POORNAAMBAA
VADIVAAMBAA

(SU) VARNAAMBAA
SWARNAAMBAA
SWARAAAMBAA
(SU)MANGALAAMBAA

MRUTHU PAATHA PANKAJAAMBAA
MAMU KAAPAD-AMBAA
KADHAMBAVANAAMBAA
MEENAAMBAA

Sivam Subam

ஓம்
அம்பா
ஜெகதம்பா
அபயாம்பா
கமலாம்பா

கற்பகாம்பா
காளிகாம்பா
மதுராம்பா
மூகாம்பா

தர்மாமாம்பா
த்ரிபூராம்பா
த்ரிநேத்ராம்பா
திக்விஜயாம்பா

ப்ரஹதாம்பா
ப்ரமராம்பா
பூர்ணாம்பா
வடிவாம்பா

(ஸு)வர்ணாம்பா
ஸ்வர்ணாம்பா
ஸ்வாராம்பா
(ஸு)மங்களாம்பாக

ம்ருது பாத பங்கஜாம்பா
மமு காபாடம்பா
கதம்பவனாம்பா
மீனாம்பா

சிவம் சுபம்

Enga veettu Anumaarae(Song1) & Aanjaneya Maaruthae (Song2)

OM

Enga veettu Anumaarae
Enga kulak Kaavalarae
Thanga Manach Chemmalae
Pongi-poorith-aruLvaarae

எங்க வீட்டு அனுமாரே
எங்க குலக் காவலரே
தங்கமனச் செம்மலே
பொங்கி பூரித் தருள்வாரே

VeNNaik kaappu kaetkamaattaar, aanaa (naan) eNNiyathai mudiththiduvaar, Raamaa Raamaa endraal pothum,
Ennudanae aadi magizhvaar

வெண்ணக் காப்பு கேட்க மாட்டார்,  ஆனா (நான்) எண்ணியதை முடித்திடுவார்,  ராம ராம என்றால் போதும், என்னுடனே ஆடி மகிழ்வார்

Vada maalai vaendaam enbaar, aanaa vara mazhai pozhinthiduvaar,
Raamanin Thulasi dhaLam
Siram vaiththaal kooththaaduvaar

வடை மாலை வேண்டாம் என்பார், ஆனா வரமழை பொழிந்திடுவார்,
இராமனின் துளசி தளம்
சிரம் வைத்தால் கூத்தாடுவார்

Anjanai petraaLammaa
aNNaL Kulam kaaththaar-amma
Annalai uL-vaiththaae ennudanae vaazhgiraar-ammaa
Ennai vittu piriyaar Amma.

அஞ்சனை பெற்றாளம்மா, அண்ணல் குலம் காத்தாரம்மா
அண்ணலை உள் வைத்தே என்னுடன் வாழ்கிறார் அம்மா   என்னை விட்டு பிரியாரம்மா

சிவம் சுபம்
Sivam Subam






ஜெய் ஹனுமான்

விருத்தம் -

Aanjaneya Maaruthae
Aprameya Maaruthae
Vaayu kumaara Maaruthae
Vaanara Veera Maaruthae
Raamapriya Maaruthae
Raama naama priya Maaruthae
Raamaa aalaya Maaruthae
Rakshimpavayya Maaruthae

குரங்காய் தோன்றி தாரகம் ஜெபித்தானே
செயற்கரிய செய்து சரித்திரம் படைத்தானே

சாகரம் தாண்டி  சதியைக் காத்தானே
சஞ்சீவி கொணர்ந்த சிரஞ்சீவி இவன் தானே

தசமுகன் தலைகளை நடுங்கச்  செய்தானே
தாசரதி  மனம் குளிரச் செய்தானே
 
வாலை ஆட்டி வக்கிரம் எரித்தானே
மாலையுள்ளும் மாதவனைத்    தேடினானே

மந்தியாய் தோன்றி மஹனீயன் ஆனானே
அனுமன் அவனே அண்ணல் உறையும் ஆலயம் ஆனானே

ஸ்ரீ ராம ஜெய ராம சீதா ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம அனுமந்த ராமா

சிவம் சுபம்




Dattatreya Stuthi (மூவரை இணைதது வந்த குருவே)



ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய  தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்

மூவரை இணைதது வந்த குருவே
மூவுலகும் தொழும் குரு தத்தா
அத்ரி மஹானின் அருந்தவமே
ஆத்ரேயா தத்தாத்ரேயா 1

அன்னையின் கற்புக் கனலிலே விளைந்த தாணு-மால்-அயனே
ஆதி அந்தமில் அருள் வடிவே
ஆத்ரேயா தத்தாத்ரேயா 2

மூன்று முகம் கொண்ட மூர்த்தியே
மூவிரண்டு கர கருணாமூர்த்தியே
நால் வேதம் தொடர் கீர்த்தியே
ஆத்ரேயா தத்தாத்ரேயா 3

ஒவ்வொரு ஜீவனும்  குருவென்று
உணர்த்திய உன்னத யோகியே
இருபத்திநாலு குரு கொண்ட
ஆத்ரேயா தத்தாத்ரேயா 4

பரசுராமர் பணி பரமா
வ்யாசர் போற்றும் பூரணா
நினைந்தாலே நிறைமதி/நிம்மதி யருளும்
ஆத்ரேயா தத்தாத்ரேயா 5

ஞான வைராக்ய சிரஞ்சீவியே
சஞ்சல சமன சஞ்சீவியே
தஞ்சம் அடைந்தேன் உமை ஸ்வாமி
பந்தம்அறுத்தருள் 
ஆத்ரேயா தத்தாத்ரேயா 6

சிவம் சுபம்

Nrusimha Stuthi (Revati) கருணையே வடிவான தெய்வம்



ரேவதி

கருணையே வடிவான தெய்வம்
கல் தூணில்  தோன்றிய தெய்வம்
பாற்கடலை விட்டு வந்த தெய்வம்
பறவைக்கும் முன் வந்த தெய்வம்

அழைக்குமுன் வந்த தெய்வம்
அன்பனுக்காய் ஓடி வந்த தெய்வம்
மணந்தாளை மறந்து வந்த தெய்வம்
மடி அரக்கனுக் கீந்த தெய்வம் 

தாயன்புக்கு ஏங்கிய தெய்வம், (பின்)
தாய்மார்கள் பல கொண்ட தெய்வம்
தாய் பெருமை உணர்த்தும் தெய்வம்
நம  தாய் தந்தையாம் தெய்வம் 

தன்னை நிகர் இல்லா நரசிம்ஹ தெய்வம்.... லக்ஷ்மி நரசிம்ஹ தெய்வம்.

சிவம் சுபம்

ஆத்யந்த ப்ரபுவே சரணம்

ஓம்

ஆதிசக்தி பாலம் ஆனந்த விநாயகம்
விக்ன நிவாரணம் விஜய ப்ரசாதகம்
அஞ்சனா நந்தனம் அத்புத மாருதீம்
அசாத்ய சாதகம் அனந்த/ஆனந்த ராமாலயம்.

****

ஆத்யந்த ப்ரபுவே சரணம்
ஆனைமுக ஆஞ்சநேயா சரணம்த
அன்னை தவம் காத்தோய் சரணம்
அண்ணல் குலம் காத்தோய் சரணம்

தந்தி முகம் கொண்டோய் சரணம்
மந்தி முகம் ஏற்றோய் சரணம்
உலகை வலம் வந்தோய் சரணம்
கடலைக் கடந்து வென்றோய் சரணம்

கனி ஏந்தி  அமர்வோய் சரணம்
கதை ஏந்தி நிற்போய் சரணம்
தடைகளைத் தகர்ப்போய் சரணம் (எடுத்த)
காரியம் முடிப்போய் சரணம்

மரத்தடி அமர்வோய் சரணம்
மலை கொணர்ந்து காப்போய் சரணம், (மஹா)
பாரதம் எழுதினோய் சரணம்
கீதை செவி மடுத்தோய் சரணம்

மோதஹ ப்ரியனே சரணம்
வடை மாலை கொள்வாய் சரணம்
அருகுக் கிளகுவாய் சரணம் 
துளசியில்  மிளிர்வாய் சரணம்

பஞ்சாக்கரனே சரணம்
பஞ்சமுகேசா சரணம்
தோஷ நிவாரணா சரணம் 
கோளணுகா கோமானே சரணம் 

சிவை அருள் பாலா சரணம்
சிவ ருத்ராம்சா சரணம் 
பச்சைப் பவளமே சரணம்,
பங்கஜ மலர் பாதம் சரணம்.

சிவம் சுபம்

Pradhosha sevaa

OM

Pradhosha sevaa

ராகம் - ஸ்ரீ ரஞ்சனி

காணவேண்டாமோ ஐயனை இரு கண்ணிருக்கும்
போதே விண்ணுயர் கோபுரம்


வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனை


வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து
நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்


ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்

சிவம் சுபம்

அனுஷாவதாரரின் ஜாதகம். (suddha dhanyasi)



சுத்த தன்யாசி

அனுஷாவதாரரின் ஜாதகம்.
அனுக்ரஹ சிவனாரின்
ஜாதகம்.

ஆதிரையன் மறு வடிவின் ஜாதகம்.
ஆதி சங்கர வழித் தோன்றலின் ஜாதகம்.

நால் வேத ரக்ஷகரின்
ஜாதகம்.
நடமாடும் தெய்வத்தின் ஜாதகம், பவ ரோஹம் தீர்த்திடும் ஜாதகம் 
சிவகடாக்ஷம் கூட்டிடும் ஜாதகம்.

கோள்களை நம் வசமாக்கும் ஜாதகம்
கோவிந்தன் அருள் கூட்டும் ஜாதகம், உலகை நல்வழி நடத்திடும் ஜாதகம்,
உய்கதி அருளும்  ஜாதகம்.

காஞ்சி வாழ் தேவனின் ஜாதகம்
காமகோடி ஈசனின் ஜாதகம்.
காமாக்ஷி அருள் கூட்டும் ஜாதகம்
கனகதாரை பொழிந்திடும் ஜாதகம்

ஜெகத்குரு நாதரின் ஜாதகம்
ஜெகன் மங்களாகார
ஜாதகம்
பார்த்தாலும் பணிந்தாலும் ஜெயமே !
பக்தியோடு பேணுவோர்க்கு சுபமே !

சிவம் சுபம்