உ
நாமம் நவின்றாலே போதும், நரசிம்மன் தோன்றிடுவான்
பவ பயம் போக்கிடுவான்
பக்க துணை யாயிடுவான் -
கம்பத்திலும் இருப்பான்
கடுகுள்ளும் ஒளிர்வான்
நம்பிப் பணிவோரின்
மனம் வெம்பாமல்
காத்திடுவான்
பகையை முடித்திடுவான்
உவகை அளித்திடுவான்
கள்ளம் தவிர்த்திடுவான்
உள்ளம் கவர்ந்திடுவான்
பாலனுக்காய் வந்தான்,
பின் அனுமனும் கண்டு கொண்டான்
நாமும் அழைத்திடுவோம்
நாதனுள் கலந்திணைவோம்.
நரசிங்கா நரசிங்கா
நரசிங்கா நரசிங்கா
சிவம் சுபம்
No comments:
Post a Comment