Thursday, July 9, 2020

சித்திரை விழா சிந்தனை



சித்திரை விழா சிந்தனை

பிக்ஷாடணராய் வந்த ஜடாமுடியன்
ராஜ கோலத்திற்கு மாறிய விந்தை

 திருவிளையாடல் புராணம்

சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்துவேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின்
மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்

 திருமணககோல பெற்றோருக்கு ஒரு பிள்ளையின் வாழ்த்து.

நல்லா நீ இருக்கோணும் மீனாக்ஷி .... உன்னை
நம்பித்தான் நான் இருக்கேன் மீனாக்ஷி

கல்யாண கோலத்துலே மீனாக்ஷி உன்னைக்
கண்டு மனம் ரொம்பிடுச்சு மீனாக்ஷி

சுந்தரனின் கம்பீரம் மீனாக்ஷி  - பார்த்த ஆடவரின் கண்ணையும் கவ(ர்)ந்திடுச்சு
சொக்கனைப் பார்த்து நீ மீனாக்ஷி நாணி சொக்கிப் போனதென்னம்மா மீனாக்ஷி

எம்முள் ஒளிர்வது நீயே மீனாக்ஷி
எங்க பக்க பலம் என்றும் சொக்கன் தானே, (இன்று)
பிள்ளைக் குட்டியோடு காட்சி தந்தீரே
இந்த பிள்ளையையும் காத்து ரக்ஷிப்பீரே

சிவம் சுபம் 

ஸ்ரீ நரசிம்மர் கும்மி


ஓம்

ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹ ஸ்வாமி ஸஹாயம்.

ஸ்ரீ நரசிம்மர் கும்மி

கம்பக் குழந்தையாய் வந்தான்டீ
கஞ்சன் வயிற்றை கிழித்தான்டீ
பாலன் சந்ததி காத்தான்டீ
பக்த வத்ஸல சிம்மனடி 1

சட்டென வந்த தேவனடி
பட்டென செயல்
முடித்தான்டி
இட்ட வரத தாயகன்டீ
துட்டருக்கு காலனடி 2

சதுர்த்தசியில் வந்தவன்டீ
சந்தி வேளை மன்னன்டீ
ஸ்வாதி நட்சத்தர
தேவனடி
ஸ்வாதீனமாய் வாழ வைப்பான்டீ 3

உக்கிரம் தணிய
சரபேசன்
மடியிலே வீழ்ந்தானடி
கெட்ட ரத்தத்தை
சிவன் உரிஞ்ச
மீண்டும் நாரணன்
ஆனான்டீ 4

செஞ்சுலக்ஷ்மி நாயகன்டீ
கஞ்சமலர் தாள்
பணிவோம்டீ
வச்சிர தேகம் பெருவோம்டீ
வாழ்வாங்கு நாம்
வாழ்வோம்டீ 5

முணு குருவும் போற்றிப் பணிந்த
முக்கண்ணு கொண்ட
சாமியடி
கம்பரும் ஆழ்வாரும்
கோதையும்
பாடிப் பரவிய தேவனடி 6

சக்கரத்தமர்ந்த யோகனடி
சஞ்சலம் சங்கடம்
தீர்ப்பான்டீ
சுத்தும் சுதர்சன சோதியடி
சூது வாதை எரிப்பான்டீ 7

நவ நவ நர சிம்மனடி
பவ வினையைப்
போக்குவான்டி
கடிகாசலம் ஊர்க்காடு
உலகம்  முழுதும்
கோவிலடி 8

அரக்கனுக்கே மடி தந்த
அனுக்ரஹ சாமியடி
அக்காரக்கனி இவனடி
அன்பருக்கு தன்னை
தருவான்டீ. 9

மந்திர ராஜ பாதனடி
தந்திரம் செய்யும் மாயனடி
ஊக்கம் உயர்வு தருவானடி
நல்ல நோக்கம் பூர்த்தி செய்வான்டீ 10

நினைக்கும் முன்னே வருவான்டி
நினைச்ச தெல்லாம் தருவான்டி
முகம் மவர்ந்த சாமியடி
நம் அகம் நிறையும் சாமியடி 11

துளசி மாலைகள் சூட்டுவோம்டீ
பானகம் வச்சு பாடுவோம்டீ
கம்பக் குழந்தையாய் வந்தவனை
நம்பக் குழந்தையாய்  கொஞ்சுவோம்டீ
நல்லருள் பெற்று உய்வோம்டீ 12


ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய சுப லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய சுப லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா

சிவம் சுபம்

Nrusimha Mangalam & ஸ்வாதி நாதன் தாள் சரணம & வர வேண்டும் வர வேண்டும்

OM

SWAATHI NAATHARUKKU JAYA MANGALAM
STHAMBOTHBARUKKU SUBA MANGALAM

DUSHTA KAALARUKKU JAYA MANGALAM
SISHTA PARIPAALANARKKU SUBA
MANGALAM

AHOBILARUKKU JAYA MANGALAM
ANBAR ULLARUKKU SUBA MANGALAM

SHOLINGOOR YOGARUKKU JAYA MANGALAM
CHOKKATH THANGAM ANUMARKKU SUBA MANGALAM

OORKAADU KALYAANARKKU JAYA MANGALAM
ULAGEZHUM AAZHVORKKU  SUBA MANGALAM

CHAKKARA THEERTHARUKKU JAYA MANGALAM
CHAKKARATHIL AMARVORKKU SUBA MANGALAM

SRI LAKSHMI NRUSIMMARKKU JAYA MANGALAM
SRITHA JANA PAALANARKKU SUBA MANGALAM

SIVAM SUBAM





ஸ்வாதி நாதன் தாள் சரணம

07-05-2020

śrīmad akalaṇka paripūrṇa śaśikoṭi
śrīdhara manohara saṭapaṭala kānta
pālaya kṛpālaya bhavambudhi nimagnaḿ
daityavarakāla narasiḿha narasiḿha

அழகென்றால் நரசிம்மன்
அருளென்றால்
நரசிம்மன்
அன்பென்றால்
நரசிம்மன்
அற்புதன்
நரசிம்மன்

வா எனுமுன் வந்திடுவான்.
கா எனுமுன்
காத்திடுவான்
தா எனுமுன்
தந்திடுவான்
தன்னையே
தந்திடுவான்

ஆரவாரம்
இல்லாதான்
ஆடம்பரம்
விரும்பாதான்
மாலையிலே
வந்தவன், துளசி
மாலையிலே
மனம் நிறைவான்

சக்கரத்து
யோகனம்மா
சன்மார்க்கர்
காவலனம்மா
அக்காரக்
கனியம்மா
அம்ருத
வாரிதியம்மா

சக்கரைத்
தண்ணீருக்கே
உருகியருள்
அப்பனம்மா
சரணம் என்றால்
போதும்
சந்ததியே பலம்
பெரும்

நந்தவன நாதனம்மா
நம் ப்ராண நாதனம்மா
மங்கலமெல்லாம் அருளும்
மலோல சிம்மனம்மா 

இனிமை அவனைக்
காணல்
அமுதமவன் நாமம்
செப்பல்
நிறைவவன் புகழ்
பாடல்
நிம்மதி அவனை நினைத்தல்

சிவம் சுபம்






OM

வர வேண்டும் வர வேண்டும்  என்றழைத்தேன்
சிங்கன் வந்தனாடி,
காட்சி தந்தானடி

அன்னையை மடி வைத்து வந்தானடி, அகம் மகிழ்ந்தே அபிஷேகம் கொண்டானடி

பார்க்க இரு கண்கள் போதாதடி,
பார்த்தவரை காலன்
அணுகானடி

குளித்தது என்னவோ
அவன் தானடி
குளமாச்சு என் கண்கள்
தானேயடி

ப்ரஹ்லாதன் நானில்லை பக்தியிலே
ஆனால் பரந்த மனத்தனடி என் சிங்கனே

பிறவிப் பயனை நான் பெற்றுவிட்டேன், இனி இறவாது அவனடியில்
நிலைத்திடுவேன்

ஸ்வாதி நாதனை என்னை விடானடி, (நந்தா) ஜோதியாய் என்னுள் ஒளிர்வானடி.

சிவம்  சுபம்

சித்திரை நிலவு - மீனாக்ஷி



சித்திரை நிலவு - மீனாக்ஷி

அழுகு நிலா அன்பு நிலா
சித்திரை நிலா  சிவ சக்தி நிலா
அனலில் தோன்றிய குளிர் நிலா
ஆலவாயில் ஒளிரும்  நிலா

மூவலகிற்கும் ஒரே நிலா
முத்தமிழ் வளர்த்த சங்க நிலா
தேயா புகழ் மா மதுரை நிலா
ஓயாதருள் பொழி தேன் நிலா

சித்திரைத் திருவிழா கண்ட நிலா
இத்தரை ஆளும்  மரகத நிலா
கயற்கண் கொண்ட கன்னி நிலா
சூரியனை மிஞ்சும் சுடர் நிலா

மவயத்வஜன் மடி தவழ்ந்த நிலா
காஞ்சனமாலை அணைத்த நிலா
கையில் கிளி வைத்த கருணை நிலா
கல்யாண சுந்தரன் மருவும் நிலா

சிவம் சுபம்

Sangeetha Sevaa at today's Anusha Pooja


OM

Sangeetha Sevaa at today's Anusha Pooja - 09-05-2020

Anusha naadhar ThuNai
அனுஷநாதர் துணை

விழுப்புரம் கண்ட  மெய்ப்பொருளே சரணம்
Vizhuppuram kaNda MeipporuLae SaraNam

Anusha Praabhaakaram Chandrasekaram
Kaanchi Nivaasam
Chandrasekaram
Kaamakoti Easwaram
Chandrasekaram
Kaamaakshi Hrudayam
Chandrasekaram 1

Advaitha saagaram
Chandrasekaram
Shanmatha lakshaNam
Chandrasekaram
Sanaadhana dharmam
Chandrasekaram
Sarva Jagathgurum
Chandrasekaram 2

Padhayaathraa dheeram
Chandrasekaram
Bhaaratha paavanam
Chandrasekaram
Loka prasidhdhim
Chandrasekaram
Sarva Sammatham
Chandrasekaram 3

Annapoorneswaram
Chandrasekaram
Gnana bhikshaakaram
Chandrasekaram
Anaadha naadham
Chandrasekaram
Aasritha vathsalam
Chandrasekaram 4

Paamara paalanam
Chandrasekaram
Pandhitha boshgam
Chandrasekaram
Vaidyanaadham
Chandrasekaram
Mruthyunjayam
Chandrasekaram 5

Naadha layam Chandrasekaram
Gnana vairaagyam
Chandrasekaram
Karma paladhaayagam
Chandrasekaram
Kanaga dhaaram
Chandrasekaram 6

Harihara sakhyam
Chandrasekaram
Yeka Paramaachaaryam
Chandrasekaram
NaarayaNa Smruthim
Chandrasekaram
Namasivaayam
Chandrasekaram 7

Jayendra vandhitham
Chandrasekaram
Vijayendra poojitham
Chandrasekaram
Adhishtaana vaasam
Chandrasekaram
MaNi mandapaalayam
Chandrasekaram 8

Jagan  Maathaaram 
Chandrasekaram
Jagatha Pitharam
Chandrasekaram
Jagath Gurum
Chandrasekaram
Jagannaadham
Chandrasekaram 9

Jaya Jaya Sankaram Chandrasekaram
Hara Hara Sankaram Chandrasekaram
Hara Hara Sankaram Chandrasekara
Jaya Jaya Sankaram Chandrasekaram

அனுஷ ப்ரபாகரம் சந்திரசேகரம்
காஞ்சி நிவாஸம் சந்த்ரசேகரம்
காமகோடி ஈஸ்வரம்
சந்த்ரசேகரம்
காமாக்ஷி ஹ்ருதயம்  சந்திரசேகரம் 1

அத்வைத சாகரம்
சந்திரசேகரம்
ஷண்மத லக்ஷணம்
சந்திரசேகரம்
சநாதன தர்மம் 
சந்த்ரசேகரம்
ஸர்வ ஜகத்குரும்  சந்த்ரசேகரம் 2

பாதயாத்ரா தீரம்
சந்த்ரசேகரம்
பாரத பாவனம்
சந்த்ரசேகரம்
லோக ப்ரஸித்தம்
சந்த்ரசேகரம்
ஸர்வ ஸம்மதம்
சந்த்ரசேகரம் 3

அன்னபூர்ணேச்வரம்
சந்த்ரசேகரம்
ஞானபிக்ஷாகரம் சந்த்ரசேகரம்
அநாத நாதம்
சந்திரசேகரம்
ஆச்ரித வத்சலம் சந்த்ரசேகரம் 4

பாமர பாலனம்
சந்த்ரசேகரம்
பண்டித போஷகம்  சந்த்ரசேகரம்
வைத்ய நாதம் 
சந்த்ரசேகரம்
ம்ருத்யுஞ்ஜயம்
சந்த்ரசேகரம் 5

நாத லயம் சந்த்ரசேகரம்
ஞானவைராக்யம்
சந்த்ரசேகரம்
கர்ம பலதாயகம்
சந்த்ரசேகரம்
கனக தாரம் 
சந்த்ரசேகரம் 6

ஹரிஹர ஸக்யம்  சந்திரசேகரம்
ஏக பரமாச்சார்யம்
சந்திரசேகரம்
நாராயண ஸ்ம்ருதிம்  சந்த்ரசேகரம்
நமசிவாயம்
சந்த்ர சேகரம் 7

ஜெயேந்திர வந்திதம் சந்த்ரசேகரம்
விஜயேந்த்ர பூஜிதம்
சந்த்ரசேகரம்
அதிஷ்டான வாசம் சந்த்ரசேகரம்
மணிமண்டபா லயம் சந்த்ரசேகரம் 8

ஜெகன்மாதரம் சந்த்ர சேகரம்
ஜெகதப் பிதரம் சந்த்ரசேகரம்
ஜெகத்குரும் சந்த்ரசேகரம்
ஜெகன்னாதம் 
சந்த்ரசேகரம் 9

ஜெய ஜெய  சங்கரம்  சந்திரசேகரம்
ஹர ஹர சங்கரம்  சந்திரசேகரம்
ஹர ஹர சங்கரம்  சந்திரசேகரம்
ஜெய ஜெய  சங்கரம்  சந்திரசேகரம்

சிவம் சுபம் 

ஸத்குரு ஸ்வாமினஹ (Song on Thiagaraja Swaami)



ஸத்குரு ஸ்வாமினஹ

இராம ப்ரஹ்ம தனயரே
த்யாக ப்ரஹ்மமே
இராம பக்தி சாம்ராஜ்ய சக்ரவர்த்தியே

மன்னன் நிதி துறந்தீர்
அண்ணல் துதி செய்தீர்
விண்ணும் புகழ
ஐயாற்றில் இன்றும் வாழ்கிறீர்.

நாரதரைக் குருவாய் பெற்ற யோகீந்த்ரரே
நாத இராமாயணம் இயற்றினீரே

ஷண்மத சங்கீத ஸாகரமே
ஸர்வ லோக சம்மத
ஸத்குருவே

கோடி இராம நாமம்
ஜெபித்த தவ  சீலரே
தேடி வந்தாரே இராமர் உம் இல்லமே

சரணம் சரணம் வால்மீகி  அவதாரரே
தரணும் தரணும் சங்கீத  ஞான பக்தியே

அவம் செய்யும் அற்பருக்கும் நல் மதி தந்து ஆன்மீகம் தழைத்தோங்க அருள் செய்வீரே

இராம இராம இராம இராம நாத ராமா
இராம இராம இராம இராம
த்யாக ராஜ ராமா

சிவம் சுபம்

Hamsadhwani - Mahaa Kavi SubramaNya Bhaarathiar

OM Namo Vakrathuntaayaa

Sri  SwarNa Mahaa GaNapathi (Thanga Vinaayagar) near our residence  accepted our ekaantha Chathurhi sevaa just now - May 10th 2020

Ssngeetha Sevaa

OM

Hamsadhwani - Mahaa Kavi SubramaNya Bhaarathiar

Vituththam  - seeks Swarmy's pardon.

நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

Song also by Mahaa Kavi -  Says our fear distress and disease will  vanish with His Grace

கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன்

இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!

உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்

விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றென்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;

அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;

அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே.

சிவம் சுபம்