Sunday, October 22, 2017

ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

திருப்போரூர் சந்நிதி முறை -

ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

களங்கமெலாம் அற்றேன் கதி புகுந்தேன்,
நாயேன், உளங்குளிர ஆனந்தம் உண்டேன்
திருப்போரூர் உத்தமனார் சீர் பாத
நற்றாமரை தொழுத நான்

முருகன் வரவேற்பு - வள்ளல் பெருமான் 

வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும், புள்ளி மயிலோரே  வாரும்

சங்கம் ஒலித்தது, தாழ் கடல் விம்மிற்று
ஷண்முக நாதரே வாரும், உண்மை விநோதரே வாரும்

பொழுது விடிந்தது,  பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும், மின்னார் முன் நூலரே  வாரும்

சூரியன் தோன்றினன், தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூர சம்ஹாரரே வாரும், வீர ஸ்ரீங்கார-ரே வாரும்
பக்க்தர்கள் சூழ்ந்தனர், பாடல் பயன்றினர்
பன்னிரு தோளரே வாரும், பொன் மலர் தாளரே வாரும்

சிவம் சுபம்

ஆண்டாளை ஆண்டவனே (Brindavana Saaranga)

உ
Brunthaavana Saarangaa

ஆண்டாளை ஆண்டவனே - அவள் தமிழ் மாலை பூண்டவனே

(அவள்) அந்தரங்க மன்னாரே, ப்ருந்தாவன சாரங்கரே

நாச்சியார் மொழி கேட்டு அருளாட்சி செய்வோனே, மாமனாரின் பல்லாண்டு ஏற்ற கூடல் அழகனும் நீயே,
ராப் பத்து பகல் பத்து  ராயர் சேவை ஏற்றிடுவாய், ஆபத்து ஏதுமின்றி அன்பரைக் காத்திடுவாய்

Sivam Subam

அனுஷத் துதித்த அற்புத தெய்வம்

ஓம்

அனுஷத் துதித்த அற்புத தெய்வம்
ஆதிரையன் மறு உருவாம் தெய்வம்
இருபாதம் பதித்து நட மாடும் தெய்வம்
ஈச்சங்குடி அன்னை ஈன்ற தெய்வம்

உயர் வேதம் காக்க உதித்த தெய்வம்
ஊழ்வினை மாற்றும் உத்தம தெய்வம்
எளிமை வடிவானத் துறவறத் தெய்வம்
"ஏணிப்படி" சிவன் சாரின் முன் வந்த தெய்வம்

ஐயமில்லாதருளும் காமகோடி தெய்வம்
ஒப்பிலா சந்திர சேகர தெய்வம்
ஓரிக்கை வாழும் ஒரே
தெய்வம்
ஔத்ர்ய வடிவ ஆனந்த தெய்வம்

சிவம் சுபம்.


Sasti Special 6-7

திருப்போரூர் சந்நிதி முறை - 

ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

களங்கமெலாம் அற்றேன் கதி புகுந்தேன்,
நாயேன், உளங்குளிர ஆனந்தம் உண்டேன்
திருப்போரூர் உத்தமனார் சீர் பாத
நற்றாமரை தொழுத நான்

7. முருகன் வரவேற்பு - வள்ளல் பெருமான்  

வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும், புள்ளி மயிலோரே  வாரும்

சங்கம் ஒலித்தது, தாழ் கடல் விம்மிற்று
ஷண்முக நாதரே வாரும், உண்மை விநோதரே வாரும்

பொழுது விடிந்தது,  பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும், மின்னார் முன் நூலரே  வாரும்

சூரியன் தோன்றினன், தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூர சம்ஹாரரே வாரும், வீர ஸ்ரீங்கார-ரே வாரும்

பக்க்தர்கள் சூழ்ந்தனர், பாடல் பயன்றினர்
பன்னிரு தோளரே வாரும், பொன் மலர் தாளரே வாரும்

சிவம் சுபம்

நம்மை பெற்ற தெய்வம்

உ

நம்மை பெற்ற தெய்வம்
நம்முடனே வாழ்(ந்த) தெய்வம்
நம்மை வாழ்விக்கும் தெய்வம்
நம் பெற்றோராம் தெய்வம்.

உடலளித்த தெய்வம்
உயிரளித்த தெய்வம் (நம்மை)
உய்வித்த தெய்வம்
உயர் பெற்றோராம் தெய்வம்

தவப் பயனாம் தெய்வம்
அவம் நீக்கும் தெய்வம்
சுபம் அருளும் தெய்வம்
 சிவனார்க்கும் கிட்டா தெய்வமதே தெய்வம்.

நம் சிந்தை நிறை பெற்றோராம் தெய்வம்

 சிவம் சுபம்

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtWnRZcndVMHhwam8

கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்

புன்னெறியதனில் செல்லும் போக்கினை விலக்கி,  மேலாம்
நன்னெறி ஒழுகச் செய்து, நவையறு காட்சி நல்கி, என்னையும்  அடியன் ஆக்கி, இருவினை நீக்க ஆண்ட, பன்னிரு தடந்  தோள் வள்ளல்
பாத பங்கயங்கள் போற்றி

செந்தில் கலம்பகம்

வரம் கொண்ட உமை முலைப்பால் மணம் கொண்ட செவ்வாயும், பரம் கொண்ட களி மயிலும், பன்னிரண்டு கண்மலரும், சிரம் கொண்ட மறை யிறைஞ்சும் சேவடியும், 
செந்தூரான் கரம் கொண்ட வேலும் என்றன் கண்ணை விட்டு நீங்காவே.

சிவம் சுபம்

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtcnBOMkp2VUd1NDA


மூவிரண்டு முகத்தான்

மூவிரண்டு முகத்தான்-  அவன் முக் கண்ணன் மகன் தான்

ஆறிரண்டு கரத்தான் - அவன் அருள் பொழியும் மனத்தான்

மூவிரண்டு படையான்,
மாதிரண்டு உடையான்,
வேலொன்று கொண்டான்
வென்று பகை முடிப்பான்

ஆறிரண்டு கண்ணன்
ஆட்கொள்வதில் மன்னன்
மயிலொன்று ஏறுவான்
விரைந்தருள் புரிவான்

சிவம் சுபம்

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtVmdOdEhldWxzMkk