Sunday, July 26, 2015

சென்னை சிவாலயங்கள் (Valaji)



--- வலஜி 

சென்னை வாழும்  பரமேசன்
என்னுள் ஒளிரும் ஜீவேசன் 
அறுபத்து மூவர் வணங்கும் கா-பாலீசன்
அருமருந்தீசன்,  வைத்திய நாதன் 
வடிவுடையாள் நாதன் ஒற்றீசன்
கனிவுடன் காக்கும் கச்சபேசன்
காலம் தாழ்த்தா காரணீசன்
கோவூர் வாழும் சுந்தரேசன் 
திரிசூலன், திரி நேத்ரன்
நங்கை நல்லாள் உறை அர்த்த நாரீசன்
வெள்ளி(யின்) பார்வை மீட்ட சுக்ரேசன்
வேண்டிய தெல்லாம் தரும் சென்ன மல்லீசன் 
(சென்னையுள்) எண்ணிலடங்கா கோயிலம்மா !
எங்கு நோக்கினும் முக் கண்ணனம்மா !
ஏட்டிலடங்கா கீர்த்தி அம்மா ! ஒரு
பாட்டினுள் கூற முடியுமா  ?


சிவம் சுபம் 

Sivam Aruliya Subhamey (Mohanam)

TRIBUTE to Sri Sadha Sivam & Mathu Sri MS Amma on their 75th Wedding Anniversary on 10th July



audiolink


Raagam: மோகனம் 


சிவம் அருளிய சுபமே...
சுபம் அருளும் சிவமே 
ஸ்ருதிலயமாய் இணைந்த சிவ சுபமே
சுத்த பக்தி ரசமாம் சுநாத வினோதமே 
ஷண்முக வடிவே, சதா சிவ உருவே
சத்குரு மனம் கவர் சங்கீத சரஸ்வதியே
மங்கள இசை பொழி மா தவச் செல்வியே, இந்த
மஹிதலம் உள்ளவரை உன் மாண்பு நிலைக்குமே 

Sivam Subam



மனவருத்தம் தீர்க்கும் மருந்து (Naada Namakriya)



நாத நாமக்ரியா 

மன வருத்தம் தீர்க்கும் மா மருந்து
மதுரை மீனாளின் திரு நாம அமுது 
மலை போல் துயரையும் பனிபோல் போக்குவாள்  (அந்த)
மலையத் வஜனின் திருமகள் தானே 
பிரமனாய்  நம்மைப் படைத்தவள் அவளே
பேணிக் காக்கும் திருமாலும் அவளே
அகமணைத் தாட்கொள்ளும் அரனும் அவளே
அனுதினம் சூடுவோம் அவள் திருத் தாளே 
ஆனை முகனுக்கு கனி கொடுத்தாள்
ஆறு முகனுக்கு வேல் தந்தாள்    (நம்)
அய்யனுக்கு தன்னில் பாதியை ஈந்தாள்
அன்பர் நமக்கு தன்னையே தருவாள்  


விளக்கை ஏற்றிடுவோம் (Poorvi Kalyani)

விளக்கை ஏற்றிடுவோம் (Poorvi Kalyani)


பூர்வி கல்யாணி 

விளக்கை ஏற்றிடுவோம்.... இருளை விரட்டிடுவோம்
அகல் விளக்கை ஏற்றிடுவோம்..... அக இருளை விரட்டிடுவோம் 
விளக்கொளிரும் ஜோதி...அதுவே நம்மை படைத்த ஆதி
விலக்கிடுமே அநீதி, விளக்கிடுமே அனைத்து நீதி 
(நாளும்)  விளக்கை வலம்  வருவோம்
விளையுமே நிலைத்த நலம், இன்பம்
(நாளும்) விளக்கை வணங்கிடுவோம்
வீடும் பேரும் பெற்று உய்வோம் 
(நாளும்) இருமுறை விளக்கேற்றி, நாமே
இருவினை களைந்திடுவோம்
(விளக்கினில்) இறைவனை கண்டிடுவோம், அந்த
இறையுள் கலந்து வாழ்ந்து உய்வோம் 

சிவம் சுபம் 

இரு தெய்வங்களை ஈன்ற தாயே (Bhairavi)


இரு தெய்வங்களை ஈன்ற தாயே (Bhairavi)




இரு தெய்வங்களை ஈன்ற தாயே, ஈச்சங்குடியின் ஈடில்லா தவமே

இணையில்லா ஞானக் கொழுந்தாம் சிவத்தை, இச்செகமே வணங்கும் சங்கர குருவை ஈன்ற திருமகளே!

கோசலை, தேவகியை மிஞ்சிய தவமே! சங்கர சிவத்தை தாங்கியக் கோயிலே!  தருமத்தை ஞானத்தை வழங்கிய தேனுவே! உன்னரும் தவமே எம் சௌபாக்யமே

Sivam Subam

audiolink
                                                

Saturday, July 4, 2015

SARVA GURU STHUTHI MAALIKAA (Brindavana Saranga)

சர்வ குரு ஸ்துதி மாலிகா /  SARVA GURU STHUTHI MAALIKAA 




பிருந்தாவன சாரங்கா /  BRUNTHAAVANA SAARANGA (RAAGAM)

குருவருளே  திருவருள் - GURU ARULAE... THIRU VARUL 

குரு பாதுகைப் பூவே நம் பாதுகாப்பு - GURU PAATHUGAI POO-VAE NAM PAATHUKAAPPU
வேதாச்சார்ய தக்ஷிணாமூர்த்தி   VEDHA ACHARYA DAKSHINAAMOORTHY
கீதாச்சார்ய க்ருஷ்ண மூர்த்தி - GEETHA ACHARYA KRISHNA MOORTHY
சரணம் சரணம் குரு மூர்த்தி - SARANAM SARANAM GURU MOORTHY

அத்வைதாச் சார்ய ஆதி சங்கர - ADVAITHA AACHAARYA  AADHI SANKARA
விசிஷ்டா த்வைத  ஸ்ரீ ராமானுஜா - VISITHTAA DWAITHA SRI RAAMAANUJAA
த்வைதாச்சார்ய மத்வ தேவா  - DWAITHA AACHARYA MADHAVA DEVA
சரணம் சரணம் குரு தேவா  - SARANAM SARANAM GURU DEVAA

பிருந்தாவன நிலய  ராக வேந்த்ரா - BRUNTHAAVANA NILAYA RAAGAVENDRA
ஞான பராத்பர  ரமணா தேவா - GNANA PARAATHPARA RAMANA DEVAA
நடமாடும் தெய்வமாம் பரமாச்சார்ய - NADAMAADUM DEVIAMAAM PARAMAACHAARYA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA 

 சர்வ  தர்ம ஸ்ரீ  ராம கிருஷ்ணா - SARVA DHARMA SRI RAAMA KRISHNA
சக்தி ஸ்வரூப சாரதா மா  - SAKTHI SWAROOPA SARAADHA  MAA
சர்வ சம்மத விவேகானந்தா - SARVA SAMMATHA VIVEKAANANDA
சரணம் சரணம் குரு தேவா- SARANAM SARANAM GURU DEVAA 

குழந்தை யானந்த மீனாக்ஷி புத்ர - KUZHANTHI AANANDA MEENAAKSHI PUTHRA
ஸ்ரத்தானந்த  க்ஷீரடி சாயி -SRDHAANANDA KSHEERADI SAAYEE
சேவானந்த  சத்ய சாயி -SEVAANANDA SATHYA SAAYEE
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA 

ஜோதி ஸ்வரூப   ராமலிங்கா - JYOTHI SWAROOPA RAAMA LINGAA
ஸ்வர பிதாமக புரந்தர  தாஸ -SWARA PITHAAMAGA PURANTHARA DAASAA
பஜன போஷண  ஞானானந்தா - BHAJANA BOSHANA GNAANANDAA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA 

ராம பக்தி த்யாக ப்ரஹ்மமே - RAAMA BHAKTHI THIAGA BRAHMA-MAE
குருகுஹப் பிரிய முத்து சுவாமி - GURU GUHA PRIYA MUTHU SWAAMI
குவலயம் போற்றும் ச்யாம கிருஷ்ணா - KUVALAYAM POTRUM SYAAMA KRISHNA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA 

பாப நாசன தமிழ் த்யாகையா (Sri  சிவன்) - PAAPA NAASANA THAMIZH THYAAGAIYAA (SRI SIVAN)
நாதோபாசன நவ யுக மீரா  (Smt . MS அம்மா) - NAADHO PAASANA NAVA YUGA MEERAA (SMT. MS AMMA)
பதம் பணிந்தோம் உம் அனைவரையும்  - PATHAM PANINTHOM UM ANAIVARAIYUM
பாதுகாப்பீர் பாமரர் எம்மையும் - PAATHU-GAAPEER PAAMARAR EMMAIYUM 

------------------------


































Ganesa NaamaavaLi (MOHANA KALYAANI )


--- மோகன கல்யாணி  - MOHANA KALYAANI 




சித்தி கணேசம், புத்தி கணேசம் -  SIDHDHI GANESAM - BUDHDHI GNESAM
சக்தி கணேசம்,  சாந்த  கணேசம்  - SAKTHI GANESAM - SAANTHA  GANESAM 
மோன கணேசம், ஞான கணேசம் - MONA GANESAM - GNANA GANESAM
மோஹன கணேசம், மோதஹ  கணேசம் - MOHANA GANESAM - MOTHAHA  GANESAM 
ப்ரணவ கணேசம் ப்ராண கணேசம் - PRANAVA GANESAM - PRAANA GANESAM
பால  கணேசம்  தந்த கணேசம் - BAALA  GANESAM - THANTHA  GANESAM
அமித  கணேசம் - அவிக்ன  கணேசம் -  AMITHA  GANESAM - A-VIGNA  GANESAM
சுமுக கணேசம் சுலப கணேசம் - SUMUKA GANESAM - SULABA GANESAM 
ஹரித்ரா கணேசம் ஹரிஹர  கணேசம் - HARIDHRAA GANESAM - HARIHARA GANESAM
வல்லப கணேசம் வரத  கணேசம் - VALLABA GANESAM - VARATHA GANESAM
வித்யா கணேசம்  விமல கணேசம் - VIDHYAA GANESAM - VIMALA GANESAM
நித்ய  கணேசம் ந்ருத்ய கணேசம் - NITHYA GANESAM - NRUTHYA GANESAM 
ஸ்தம்ப கணேசம் - வ்ருக்ஷ கணேசம் - STHAMBA GANESAM -VRUKSHA GANESAM
ப்ரிதிவி கணேசம் - ப்ரத்யக்ஷ கணேசம் - PRITHIVI GANESAM -  PRATHYAKSHA GANESAM
ரக்த கணேசம் - ருத்ர கணேசம் - RAKTHA GANESAM - RUDRA GANESAM
சக்ர கணேசம் - சதுர்த்தி கணேசம் - CHAKRA GANESAM -  CHATHURTHI GANESAM
ஆத்ம கணேசம் - ஆலய கணேசம் - AATHAMA  GANESAM - AALAYA  GANESAM
ஆதி கணேசம் - ஜோதி கணேசம் -  AATHI GANESAM - JOTHI GANESAM
தர்ம கணேசம் - தன்வந்தரி கணேசம் - DHARMA GANESAM - DHANVANTHRI GANESAM
தோடு கணேசம் - நீட கணேசம் - THODU GANESAM - NEEDA GANESAM
வேத கணேசம் ஸ்வேத கணேசம் - VEDA GANESAM - SWETHA GANESAM
வீர கணேசம் வைத்ய கணேசம் - VEERA GANESAM - VAITHYA GANESAM
விகட கணேசம் விஜய கணேசம் - VIKATA GANESAM - VIJAYA GANESAM
மஹா கணேசம் மங்கள கணேசம் - MAHAA GANESAM - MANGALA GANESAM
-------------------+
தோடு கணேசம் -  துணை கணேசம்  (Thodu - is a telugu word) He is our guide/friend.
நீட கணேசம் - நிழல் கணேசம்  (Needa - is a telugu word)  He is our refuge.
அமித (amitha) கணேசம் - இணையில்லா கணேசம்  (Incomparable Lord)
அவிக்ன (avigna) கணேசம் -  தடைகளைத் தகர்ப்பவர் - Remover of all obstacles -
விகட (vikata) கணேசம் - huge /  gigantic