Sunday, March 24, 2019

ப்ருந்தாவனம் வாழும் ராயரே (Sri Ragavendrar Brindhavana Saaranga)



13th March - SwamigaL Jayanthi

ராகம் :

ப்ருந்தாவனம் வாழும் ராயரே - முனி ப்ருந்தமெலாம் போற்றும் தேவரே

துங்கா தீரம் வாழும் துறவியே - உமை தொழுதோர்க்கில்லை மறு பிறவியே

பண்ணால் உம்மை துதிப்போம் ஐயனே, கடைக் கண்ணால் எம்மைப் பாரும் மெய்யனே, புவனகிரி தந்த புனிதரே, திரி புவனமும் போற்றும் ராகவேந்த்ரரே

சுந்தரவடிவம் கொண்ட தூயரே, உமது மந்த்ராக்ஷதையே எமைக் காக்கும் ரக்ஷையே, வீணையை மீட்டும் நாத ஸ்வரூபா, எம் வேதனை களையும் த்யான ஸ்வரூபா

சிவம் சுபம்

பள்ளி கொண்ட பெருமானே



பள்ளி கொண்ட பெருமானே, அருளை அள்ளி வழங்கும் சிவபரனே

(அன்னை)  உமை மடி அயர்ந்த அய்யா, எமைக் காக்க எழுந்தருள், முக் கண்ணய்யா

ஆலம் உண்ட அண்ணலே, அரி அயனைக் காத்த வள்ளலே, நீல கண்ட பரம்பொருளே, காலகாலனாம் மெய்ப் பொருளே

சுருட்டப்பள்ளி வாழ் சுந்தரா, மனயிருட்டை நீக்கும் மதிசேகரா, ப்ரதோஷ வலம் வந்தருள்வாய், எம் பிறவி தோஷம் களைந்தருள்வாய்

சிவம் சுபம்


(Sarva Mangala Mangalye & மாசி பங்குனி கூடும் வேளை) - Karadai Nonbu



மோஹனம்

மாசி பங்குனி கூடும் வேளை, மங்கலக் காரடை நோன்பு காலை

அன்னை சாவித்ரி அடி சூடும் வேளை, அன்புக் கணவரின் ஆயூள் கூட்டும் வேளை

காரடை படைத்து கயற் கண்ணியைப் பணிவோம்
கவனத்துடன் நோன்பு சரடு பூணுவோம்
மாசிக் கயிற்றில் பாசி படிய சுமங்கலத் தாரகையாய் என்றும் ஜ்வலிப்போம்

சிவம் சுபம்

(Punniyam Seidhanai Maname & முத்தங்கி அணிந்த முக்கண்ணி)



முத்தங்கி அணிந்த முக்கண்ணி
முன்னின்றருளும் கயற்கண்ணி
முத்தனத்தோடு உதித்தாளே, முக்கண்ணனைக் கண்டு ஒன்றை மறைத்தாளே

சிம்ஹாஸனம் அமர் ராஜமாதங்கி, சிவனையும் அரசாள வைத்த மாதங்கி
அயக்ரீவன் போற்றும் அன்னை லலிதை
அகத்தியன் கண்ட ஸ்ரீ சக்ர வனிதை

உடல் மன நோயைத் தீர்த்திடுவாள்
உன்னத வாழ்வை அளித்திடுவாள்
அலை கலை பணியும் மலைமகள்
அர்தநாரி அவள் சங்கர நாரணி

சிவம் சுபம்

பவனி வருகிறார் அய்யன் பவனி வருகிறார் (Kapaleshwarar)



காபாலீசர் தேரோட்டம்
17-3-2019

பவனி வருகிறார் அய்யன் பவனி வருகிறார் - மயிலையை கயிலை யாக்கி பவனி வருகிறார்

அதிகார நந்திமேல் பவனி வந்தவர்
அற்புதமாய் தேரேறி பவனி வருகிறார்

மாட வீதி களிலே பவனி வருகிறார்,
மக்களைக் கண்டு ஆசி கூற வருகிறார்

அன்னை கற்பகாம்பிகையும் பவனி வருகிறார்
அய்யனை நிழல் போலத் தொடர்ந்து வருகிறார்.

ஆனைமுகனும் ஆறுமுகனும் முன் செல்கிறார்
ஆடிப் பாடி மக்களோடு மிதந்து செல்கிறார்.

கா-பாலீஸ்வரன் பவனி வருகிறார்
பாபநாசன சிவன் பவனி வருகிறார்,

சம்பந்தரின் முறை கேட்டவர் பவனி வருகிறார்
சாகா வரம் அளிக்கும் ஈசன் வருகிறார்

அறுவத்து மூவர் கண்ட தேவன் வருகிறார்
வேதநாதம் திருமுறை முழங்க வருகிறார்

சண்டிகேசர் பின் தொடர பவனி வருகிறார்
நம் சந்ததி சிறந்து வாழ அருள் பொழிகிறார்

வடம் பிடித்து அய்யன் தேரை இழுத்திடுவோமே
வாணாளும் வரமும் பெற்று சுகித்திடுவோமே

(அய்யன்) தேரோட்டம் கண்டவர்க்கு என்றும் இன்பமே
அம்மை யப்பன் அருளால் எல்லாம் சுபமே

சிவம் சுபம்

ஆடும் மயிலாய் உருவெடுத்து + கா பாலீ எங்களை மயிலை நாதனே (Revati)

ஓம்

விருத்தம்

கற்பகவல்லி அம்மை பிள்ளைத் தமிழ்

ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் தாள் அர்ச்சித்த நாயகியாம் நின் திருநாமங்களைப் பாடி உருகி பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய், காடெனவே  பொழில் சூழ் (திரு) மயிலாபுரி கற்பகமே

ரேவதி

கா பாலீ எங்களை மயிலை நாதனே

அன்னை மயிலாகி அழைக்க வந்தோனே மயிலையுள் கயிலையை வைத்த ஈசனே

ஆலம் உண்டு அன்று அகிலம் காத்தாய், பூம்பாவை உயிர் மீட்டு சம்பந்தர் புகழ் சேர்த்தாய், அறுவத்து மூவர் வலம் வந்து தொழுதிட எம்மிடை தேராடி  அருள் மழை  பொழிவாய்

சிவம் சுபம்

மெதுவாய் அழைத்தே (On Murugan)

மெதுவாய் அழைத்தே 
அருகினில் இழுத்தே
கனிவாய் எழுந்தாய்
மனந்தனில் அருளாய்
அதுவாய் இதுவாய் எதுவாய்
வரினும் துன்பம் அதனை
களைவாய் எளிதாய் -உன்
இணைத்தாள் சேர்த்தே
துணையாய் இருப்பாய்- நானே
தனியாய் துவளும் நேரம்
நினைவினில் நின்றே நாளும்
நிகழ்வினை நடத்திடு தாயே

ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ்



விருத்தம்

நெல்வேலி நாதனை,
சொல் வேலியுள் அடங்கானை,
அருள் வேலி அம்மை
காந்திமதி நாதனை,
பரணிக் கரை கங்காதரனை
தரணி புகழ் சைவ சித்தாந்த சிகரனை
வலம் வந்து பாடிப் பணிந்து
பதினாறும் பெற்று பெறுவாழ்வடைவோமே

ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ்

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்

பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன்,
பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,

செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள்
அருளியது

(இப்பிள்ளைத் தமிழைப் பாடி
நம் குழந்தைகளைத் தாலாட்டலாமே)

சிவம் சுபம்

ஆறு முகன் ஆறு படை வாழ் இறைவன்



மோஹனம்

ஆறு முகன் ஆறு படை வாழ் இறைவன்
குன்றுதோறும் ஆடிடுவான், அன்பருள்ளத்தில் கொலுவிருப்பான்

ஆண்டியாய் நின்றான் பழனியிலே, குருகுஹன் ஆனான் ஸ்வாமி மலையில், சூரனை வென்றான் (திருச்)  செந்தூரில், கோபம் தணிந்தான் (திருத்) தணிகையில்

மணம் முடித்தான் (திருப்) பரங் குன்றத்தில், மகிழ்ந்தாடினான் பழமுதிர் சோலையில்,  (தெய்வ) மணிமாலை சூடினான் கந்த கோட்டத்தில்,  வள்ளல் அவன் புகழ் பாடி ஆடுவோம்

விசாகத் துதித்த கார்த்திகேயன், சஷ்டியில் சூர சம்ஹாரன், பங்குனி உத்திர (திரு) மணக்கோலன், தங்குலம் எங்கும் மங்கலம் பொழிவான்

சிவம் சுபம்

உத்திரத்தில் உதித்த ஐயனே (Ayyappa Song)



ஸ்வாமி சரணம்

உத்திரத்தில் உதித்த ஐயனே, அன்பரை பத்திரமாய்க் காக்கும் மெய்யனே...  பங்குனி..

சிவ ஹரி சுதனே, பவபய ஹரனே
சுபமருள் தவசீலனே

பாண்டிய கேரளப் பெருமையே
பந்தள ராஜனின் கண்மணியே
மஹிஷி மர்தன மாதவ மணியே
மாமலை சபரி ஜோதி மணியே

சிவம் சுபம்

ஐந்தும் எட்டும் ஒன்றென்று உணர்த்திடவே நீ அவதரித்தாய் (Ayyappa song)



ஐந்தும் எட்டும் ஒன்றென்று 
உணர்த்திடவே நீ அவதரித்தாய்

ஐந்து மலைக்கு அதிபதியாய்
விளங்கும் தேவா ஐய்யப்பா

அண்ணனின் திருமண நாளினிலே
தோன்றிய பங்குனி உத்திரனே

மன்னன் அளித்த ராச்சியத்தை
மறுத்து தவக் கோலம் பூண்டவனே

மஹிஷி சம்ஹார மணிகண்டா
மஞ்சம்மை தொழுதிடும் நைஷ்டீகா

பதினெட்டுப் படிக்கு அதிபதியே
பந்தவிமோசன குண நிதியே

இருமுடி ஏற்று அருள்புரிவாய்.
உன்பதம்  என் முடி வைத்தருள்வாய்.

மனம் வாக்கு காயம் செம்மையாகி
உன்னுள் இணையும் வரம் அருள்வாய்

ஸ்வாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் அய்யப்பா

சிவம் சுபம்

Sennimalai Aandavar 2

https://drive.google.com/open?id=14yPvtk5WCTV-yuJHihKt5ww8nOdzOdus


நல்லற வீரனே நாளும் உனை மறவேனே!

நல்லற வீரனே நாளும் உனை மறவேனே! 
நம்பிக்கை கொடுத்தவனே நானிலம் போற்றுபவனே! 
நடுக்கம் இல்லாதவனே நாநலம் பெற்றவனே!

நந்தாமணி விளக்கே நாடும் வீடும் புகழ்ந்தவனே!
தவப் புதல்வனே தவப்பயனாய் வந்தவனே!
தன்னடக்கம் கொண்டவனே தர்மநெறி தவறாதவனே!

தர்மத்தின் தூதுவனே தந்திரமெல்லாம் உருவெடுத்து வந்தவனே!
தர்மத்தின் காவலனே தவயோகியே புத்தியில் பலவானே!
புலன்களை வென்ற ஆஞ்சநேயனே சரணம்!

ஜெய் ஸ்ரீ ராம்....
23.03.2019.. விஜயராகவன்..

Sempon Aandavar

https://drive.google.com/open?id=1sk1gt1AtzKz0q-asKU98RwNvKLW_9SAv


Sivan Sirey Sivan Sirey



சிவன் சாரே சிவன்  சாரே 
சிவனாரின் அம்ஸமாய் உதித்தாரே
அனுஷ நாதனின் இளவலாய்
கலிகல்மஷம் நீக்க தோன்றினாரே

இல்லறத்துறவி இவர் போல
புவியில் எவரும் கண்டதுண்டோ
நல்லற உண்மைகள் இவர் போல
இதுவரை எவரும் சொன்னதுண்டோ

மாந்தரை ஏணிப்படிகளிலே
ஏத்திவிட்ட மகத்துவரு
மாண்டவரையும் மீட்டவரு
மாங்கல்யத்தை காத்தவரு 

கந்தல் துணியை சுத்திகிட்டு
காத்து மழையில் நனைஞ்சுகிட்டு
பசி தாகம் ஏதுமின்றி
பார்த்தோர்  பசி தீர்த்த வள்ளலு.

தண்ட கமண்டலம் ஏதுமில்லை
ஆசிரம பர்ணசாலை கட்டவில்லை
மரத்தடி குளத்தடி நிழலிலே
பட்டனத்தாரா வாழ்ந்தவரு

இன்னிக்கும் வாழும் அற்புதரு,  மன
இருட்டை நீக்கும்  சோதியரு.
கண்ணிமைக்கும்  நேரத்திலே நம்
கவலையைத் தீர்க்கும் குருபரரு

ஒல்லியாக இருப்பாரு
ஓங்காரத்தில் லயிப்பாரு 
அகங்காரத்தைக்  களைவாரு
ஆண்டவனுள் சேப்பாரு

சிவம் சுபம்

Jaya Jaya Swaathi Devaa!



Jaya Jaya Swaathi Devaa!
https://drive.google.com/open?id=1BbSXr709em56iuoZwi9anFRECC1Lsvkh
https://drive.google.com/open?id=10YLVXymfNkny3JnIRM0wOcqTQ6_78aKy


ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ சுக சௌனக பக்த வந்த்ய பக்தாநுரக்த பரிபாலன பாரிஜாத ஸ்ரீ லெக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  ஆதி சங்கர பகவத்பாதாள்

பத்தில் முதல்வன் நீயன்றோ!
பரமதயாகர, நரசிம்மா

மற்றவை எடுத்தாய் அரக்கரை அழிக்க
நரஹரியாய் வந்தாய் அன்பன் அழைக்க

பிறந்து வளர்ந்து உயர்ந்து நடந்து அழித்தாய் ஏனைய அரக்கரையெல்லாம்,
நரஹரி நீயோ அழைக்கும் முன் வந்தாய், அழைத்ததும் தோன்றி அன்பனைக் காத்தாய்

மூச்சு முட்ட தூணுள் நின்ற முக்கண்ணா , உன் பேச்சன்றி வேறேது சுகம்  (நர) சிங்கண்ணா,  ஸ்வாதியில் உன்னை நினைத்தாலே போதுமே, உன்னருட் ஜோதியில் கலந்து நான் உய்வேனே

ஜெய ஜெய நரசிம்மா
ஜெய ஹரி நரசிம்மா
ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா

Please note the Pride of (first) place given to Sri Prahlaadha, amongst all the great Devotees of the Lord, by our Aadhi Guru.

சிவம் சுபம்