Sunday, March 24, 2019

பவனி வருகிறார் அய்யன் பவனி வருகிறார் (Kapaleshwarar)



காபாலீசர் தேரோட்டம்
17-3-2019

பவனி வருகிறார் அய்யன் பவனி வருகிறார் - மயிலையை கயிலை யாக்கி பவனி வருகிறார்

அதிகார நந்திமேல் பவனி வந்தவர்
அற்புதமாய் தேரேறி பவனி வருகிறார்

மாட வீதி களிலே பவனி வருகிறார்,
மக்களைக் கண்டு ஆசி கூற வருகிறார்

அன்னை கற்பகாம்பிகையும் பவனி வருகிறார்
அய்யனை நிழல் போலத் தொடர்ந்து வருகிறார்.

ஆனைமுகனும் ஆறுமுகனும் முன் செல்கிறார்
ஆடிப் பாடி மக்களோடு மிதந்து செல்கிறார்.

கா-பாலீஸ்வரன் பவனி வருகிறார்
பாபநாசன சிவன் பவனி வருகிறார்,

சம்பந்தரின் முறை கேட்டவர் பவனி வருகிறார்
சாகா வரம் அளிக்கும் ஈசன் வருகிறார்

அறுவத்து மூவர் கண்ட தேவன் வருகிறார்
வேதநாதம் திருமுறை முழங்க வருகிறார்

சண்டிகேசர் பின் தொடர பவனி வருகிறார்
நம் சந்ததி சிறந்து வாழ அருள் பொழிகிறார்

வடம் பிடித்து அய்யன் தேரை இழுத்திடுவோமே
வாணாளும் வரமும் பெற்று சுகித்திடுவோமே

(அய்யன்) தேரோட்டம் கண்டவர்க்கு என்றும் இன்பமே
அம்மை யப்பன் அருளால் எல்லாம் சுபமே

சிவம் சுபம்

No comments:

Post a Comment