Tuesday, April 4, 2017

Veera Raaghava Panchakham (By Vallalar Swami)




வடலூர் வள்ளல் பெருமான் அருளிய

(திருஎவ்வுளூர்)**
வீரராகவர் பஞ்சகம்

1. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்த          சத்துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

2. பாண்டவர் தூத னாகப் பாலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர் வாழ் வீரரா கவனே போற்றி.

3. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி  வேதியன் தன்னை ஈன்ற வீர ராகவனே போற்றி.

4. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே  களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்கு நல் எவ்வுளூர் வாழ் வீரரா கவனே போற்றி.

5. அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணி தீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

சிவம் சுபம்

**திருவள்ளூர்

audio1
audio2

No comments:

Post a Comment