Tuesday, April 4, 2017

Sri Anjaneya Swami Stuthi (சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்)

விருத்தம்

"காற்றின்" மகவானான், "வான"ளாவிப் பறந்தான்,
அகன்ற "கடல்" கடந்தான், "புவி" மகள் உயிர் காத்தான்,
அதர்மத்தை "எரி"த்தான், கண்டேன் அன்னையை என்று அண்ணல் அடி பணிந்த பஞ்ச பூத பாவனன் பதம் பணிந்து உய்வோம்
-------
சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்,
சொல்லின் செல்வனின் திறல் விளங்கு காண்டம்

ஜெகம் புகழும் புண்ணியனின் வீர தீர காண்டம், ஜெகன்மாதா சீதை மனம் நெகிழ்ந்த காண்டம்

ராம நாம ஜெபத்தின் மகிமை நிறை காண்டம்,
ராமனே நெகிழ்ந்து நின்ற ரசமிகு காண்டம்,
படிப்பவர் கேட்பவர் பதினாறும் பெற்று,
நிறை வாழ்வு வாழ அருளும் காண்டம்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio1
audio2

No comments:

Post a Comment