Tuesday, April 4, 2017

மனமெனும் கோயிலில் (Kaanada)

Kaanada

மனமெனும் கோயிலில் உனையே வைத்தேன், மதியணி சேகரனே! மஹேஸ்வரனே!

அன்பு விழி நீர் சொரிந்து அபிஷேகம் செய்வேன், அருந்தமிழ் மாலை சூட்டி அலங்காரம் செய்வேன்,

(நீ) எனக்களித்த உணவை உனக்கே படைப்பேன், என்னை நான் சுற்றி உன்னை வலம் வருவேன், உன்னைக் காண்பேன், என்னை இழப்பேன், பிறவா வரம் பெற்று உன்னுள் நிலைப்பேன்

சிவம் சுபம்

audio

No comments:

Post a Comment