Tuesday, April 4, 2017

என்னை விட்டு அகலாதேடா ராமா (Revati)

ரேவதி

என்னை விட்டு அகலாதேடா ராமா, என் நெஞ்சை விட்டு விலகாதேடா, ராமா

கல்லுக்கும் உயிரளித்த கருணா மூர்த்தி, வில்லுக்கு பெருமை சேர்த்த வீர ராம மூர்த்தி

அன்னையின் சொல்லுக்கு அடி பணிந்தவா, தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டவா, தாரம் ஒன்றே என்று வாழ்ந்து காட்டியவா, தஞ்சம் என்போருக்கு அஞ்சேல் என்றருள்பவா

சபரியின் கனி உண்டு மோக்ஷ மளித்தவா,  அரக்கனுக்கும் அபரிமித அருள் பொழிந்தவா
குஹனின் அன்பில் குழைந்த தூயவா, குணமிகு அனுமனுள் அமர்ந்த ஆண்டவா

சிவம் சுபம்
audio

No comments:

Post a Comment