Sunday, August 19, 2018

கண்மூடித் திறந்தாலே போதுமே (Folk Tune)

உ  folk tune

கண்மூடித் திறந்தாலே போதுமே ஐயா, கண்ணனைக் கண்டிடலாம், முக் கண்ணனையும் கண்டிடலாம்

இருவரும் ஒன்றென்று உணர்ந்திடலாம், அந்த ஒருமையில் நெகிழ்ந்து உருகிடலாம்.

கண்டம் நீலமா மருந்தால் முக்கண்ணன் என்பேன்,  (அவன்)
மேனி நீலமாயிருந்தால் கண்ணன் என்பேன், (அவன்) இதயத்தில் அன்னையைக் கண்டால் கண்ணன் என்பேன், (அவன்)  இடப்பாகம்  அன்னை ஆனால் முக்கண்ணன் என்பேன்.

இரவும் பகலுமாய் நம்முடனே இருப்பவன்,
இணை பிரியாது நம் உள்ளத்து ஒளிர்பவன்,
புறத்தே தேடி அலைய வேண்டாம்.
ஆதிபகவன் அவனே ஆத்ம நாதன்.
...... நம் ஆத்ம நாதன்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment