Monday, November 27, 2017

கூப்பிடும் முன்னே அன்று வந்தவன் (Behaag)

உ  பெஹாக்

கூப்பிடும் முன்னே அன்று வந்தவன், (எத்தனை முறை) கூப்பிட்டாலும் இன்று வருவதில்லை.. ஏனோ ?

தூணைப் பிளந்து வந்தான், லிங்கத்திருந்தும் வந்தான்,  அந்த   எங்கும் நிறைந்தோன் எங்கு மறைந்தான்

பக்தி நம்முள் துளிர்த்தால் சக்தி நேரில் வருவாள், நேர்மையில் நாம் ஒளிர்ந்தால், அரன் நம்முள்  ஒளிர்வான், நெறியில் நாம் நிலைத்தால், அரியும்  நம்முள் நிலைப்பான்,

சிவம் சுபம்

சங்கரநாரணன் ஸுதனே வா வா



சங்கரநாரணன் ஸுதனே வா வா
சபரிகிரீஸனே வா வா வா வா

ஐந்துமலைக் கதிபதியே வா வா
ஐய்யப்ப தேவனே வா வா வா வா

திருமலையானைத் தாயாய்க் கொண்டாய்,
ஸ்ரீ ராமனைப் போல் கானகம் புகுந்தாய்,
மஹிஷியை ஆட்கொண்ட மணி கண்ட  தேவா, மஞ்ச மாதா தொழும் மங்கள ரூபா

புலித்தோலணிவோன் புத்திரனே வா,
புலி வாஹனனே, புண்ணியனே வா, பதினெட்டுப் படி மேல் ஒளிர்வோனே, உத்தர நட்சத்திர மகர ஜோதியே

சிவம் சுபம்.

MS Amma 108 Potri


இசை தேவதைக்கு நூற்றெட்டு போற்றி

மதுரையில் தோன்றினாய் போற்றி
கயற்கண்ணி அளித்த கலைவாணியே போற்றி
ஷண்முக வடிவமே  போற்றி
பரணியில் உதித்தாய் போற்றி 
தரணி ஆண்ட இசையே போற்றி  5

கானக்  குயிலே போற்றி
வீணையின் நாதமே  போற்றி
ஸுஸ்வர லயமே போற்றி
சிவத்துள் இணைந்தாய் போற்றி
சிவ சுபம்  ஆனாய்  போற்றி  10

பரமகுரு பதம் பணிந்தாய் போற்றி
பக்தி மகரந்தம் ஆனாய்   போற்றி
முசிரி அய்யன் முத்தே போற்றி
செம்மங்குடி பாணியே  போற்றி
அரியக்குடி அன்பு கொண்டாய் போற்றி 15

பாவ ராக தாள விநோதினியே போற்றி
அமரும் பொலிவே போற்றி
இசைக்கும் பாங்கே போற்றி
காண மங்கலமே போற்றி 
கருத்தினில் நிலைத்த இசையே போற்றி 20

கேட்கத் திகட்டா அமுதே போற்றி
இன்னும் கேட்கத் தூண்டும் இன்பே போற்றி 
ஸத்குரு வழி உபாசனையே  போற்றி
குருகுஹ மந்த்ர செம்மையே போற்றி
ஸ்யாம க்ருஷ்ண அமுதமே போற்றி  25
 "பாவயாமியின்" பாவமேபோற்றி.
 சுப்ரபாத சுநாதமே போற்றி
ஸஹஸ்ரநாம சங்கீர்த்தனமே போற்றி
அன்னமய்யாவின் அகம் கவர்நதாய்   போற்றி
பஞ்ச ரத்ன மாலை சூட்டினாய் போற்றி  30

படியளப்போனுக்கே பாடி/படி அளந்தாய் போற்றி
இறையை எழுப்பும்/துயிலச் செய்யம்  கனிவே போற்றி
ஷண்மத சங்கீதமே  போற்றி 
தமிழிசை முதல்வியே  போற்றி 
அனைத்து இசை மேதையே போற்றி  35

தன்னை மறந்தாய் போற்றி
இறையைக் கண்டாய் போற்றி
இறையைக் காட்டுவித்தாய் போற்றி
இறையுள் கலந்தாய் போற்றி
இறை இசை தேவதையே போற்றி  40

அல்லா ஏசு புகழ் இசைத்தாய்  போற்றி
அருள் நானக்கையும் வணங்கினாய் போற்றி
பண்டிதரைக் கவர்ந்தாய் போற்றி
பாமரரை ஈர்த்தாய் போற்றி 
பக்தி வழி சமைத்தாய் போற்றி  45

நாத்திகரையும் கவர்ந்தாய் போற்றி
நல் வழி சமைத்தாய் போற்றி
மதங்களை கடந்தாய் போற்றி
வேற்றுமை களைந்தாய் போற்றி
மனங்களை இணைத்தாய் போற்றி  50

பன்மொழிப் புலமையே போற்றி
பரிந்து உள்ளுணர்ந்த இசையே போற்றி
பத உச்சரிப்பில் செம்மையே போற்றி
புரந்தர வசந்தியின் ஸோதரியே போற்றி
பகட்டில்லா பட்டம்மையின் தோழியே போற்றி   55

சக கலைஞர்களுக்கு   ஊக்கமே போற்றி
எவரிடமும் கற்கும் ஏற்றமே போற்றி
எவருக்கும் கற்பிக்கும் கனிவே போற்றி
குறை காணா நிறையே போற்றி
நலிந்தோர்க்கு உதவும் பண்பே   போற்றி   60

இசையை இறைக் கற்பணித்தாய் போற்றி
விளைந்த பயனை நாட்டிற்களித்தாய் போற்றி 
மஹாத்மா மனம் கவர்ந்தாய் போற்றி
தேசபக்திக் கீதமே  போற்றி
தெய்வ பக்திச் சுடரே போற்றி  65

மீராவின் மறு வடிவே  போற்றி
காமகோடிக் கனியே போற்றி
சத்ய சாயி மனம் கவர்ந்தாய் போற்றி
நிலைத்த பேரருள் கொண்டாய் போற்றி
இங்கித பண்பின் இமயமே  போற்றி  70

கண்டத்தால் கண்டங்களை இணைத்தாய் போற்றி
உலக அரங்கில் ஒளிர்ந்தாய் போற்றி
சதா சிவ பதிவ்ரதையே போற்றி
இல்லறத் துறவியே போற்றி
நல்லற நாயகியே போற்றி
  75

பட்டங்களுக்கு பெருமை சேர்த்தாய் போற்றி
சிவன் சார் மெச்சிய எளிமையே போற்றி
ஈவதற்கென்றே தோன்றினாய்  போற்றி
ஈவதற்கென்றே இசைத்தாய்  போற்றி
இன்றும் ஈந்து இசை பட வாழ்கிறாய் போற்றி  80

கள்ளமில்லா உள்ளமே போற்றி
காற்றினில் வரும் கீதமே போற்றி
காலத்தை வென்ற இசையே போற்றி
இல்லம் தோறும் ஒலிக்கும் மங்கலமே  போற்றி
நல் உள்ளங்களில் நிலைத்த உருவே போற்றி   85

குறை ஒன்றுமில்லாய் போற்றி
ஓம்கார நாதமே போற்றி
ஔதார்ய குணமே போற்றி
பாரத ரத்னமே போற்றி
பார்புகழ் பாரதப் பெருமையே  போற்றி 90

பெண்மையின் இலக்கணமே போற்றி
இன்முக மந்தஹாஸமே போற்றி
சுப சௌபாக்யமே போற்றி
பண்பின் சிகரமே போற்றி
எளிமையின் எழிலே போற்றி  95

பிரதோஷ மாமாவின் துணை கொண்டாய் போற்றி
பெரியவருக்கு மணி மண்டபம் சமைத்தாய் போற்றி
உருவாய் எம்முடன் வாழ்ந்தாய் போற்றி
அருவாய் எம்முள் நிறைந்தாய் போற்றி
மரணத்தை வென்ற மாண்பே போற்றி  100

மண்ணோர் செய்த மாதவமே போற்றி
விண்ணோர் செய்த பாக்கியமே போற்றி
எம் எஸ் அம்மா போற்றி
எம் இசை அம்மா போற்றி
சிவமருளிய சுபமே போற்றி
சுபம் பொழி சிவமே போற்றி
சுபமே சிவமே போற்றி
சிவமே போற்றி சுபமே போற்றி  108

சிவம் சுபம்

சங்கரநாரணன் ஸுதனே வா வா (Behag)



Behag

சங்கரநாரணன் ஸுதனே வா வா
சபரிகிரீஸனே வா வா வா வா

ஐந்துமலைக் கதிபதியே வா வா
ஐய்யப்ப தேவனே வா வா வா வா

திருமலையானைத் தாயாய்க் கொண்டாய்,
ஸ்ரீ ராமனைப் போல் கானகம் புகுந்தாய்,
மஹிஷியை ஆட்கொண்ட மணி கண்ட  தேவா, மஞ்ச மாதா தொழும் மங்கள ரூபா

புலித்தோலணிவோன் புத்திரனே,
புலி வாஹனனே, புண்ணியனே, பதினெட்டுப் படி மேல் ஒளிர்வோனே, உத்திர நட்சத்திர மகர ஜோதியே

சிவம் சுபம்.

மனமெனும் சிம்மாசனத்தில் உனை வைத்தேன் (Simhendramadhyamaam)


Simhendramadhyamaam

(என்) மனமெனும் சிம்மாசனத்தில் உனை வைத்தேன், உன் மனமிரங்கி அருள்வாய் அன்னை லலிதையே,

அகந்தையை சுட்டெரிக்கும் அக்கினிப் பிளம்பே, அருங் கருணை பொழியும் அகிலாண்டேஸ்வரி

ஐந்தொழில் புரியும் சதா சிவையே,  ஐயிரண்டு அவதார நாராயணியே,
ரோஹ நிவாரணி, கால பைரவி, வேத ரூபணி காயத்ரீ

தவம் செய் காமாக்ஷி,
அவம் நீக்கும் விஸாலாக்ஷி, மங்கல  மங்கையர் தொழும் மீன லோசனி, ஸ்ரீ சக்ர வாஸினி, ஸ்ரீ சிவசக்தி

அயக்ரீவ அகத்தியர் பரவும் பராசக்தி, கூத்தனூர் தேவியும் நாச்சியார் அன்னையும் பணியும் மஹா சக்தி,
திருமீயச்சூர் வாழ் திரிபுர ஸுந்தரி,(தக்க) தருணம் இதம்மா உன் தனயனை ஆதரி..

சிவம் சுபம்

இந்து என்றாலே அன்பு (Shanmugapriya)



இந்து என்றாலே அன்பு
இந்து என்றாலே பண்பு

இந்து என்றாலே வேத பரம்.
இந்து என்றாலே தர்ம மார்க்கம்.

இந்து என்றாலே யாகம் யோகம்
இந்து என்றாலே த்யானம் ஞானம்.
இந்து என்றாலே பக்தி பாவம்.
இந்து என்றாலே சாந்தம் சத்வம்.

இந்துக்கள் காண்பர் வேற்றுமையில் ஒற்றுமை
இந்துக்கள் என்றுமே விட்டுக் கொடுப்பார்.
விட்டுக் கொடுப்போர்
கெட்டுப் போகார். 
விட்டுக் கொடுப்போரே உலகை ஆள்வர்.

குருநாதன் வருவார் (Amrutha Varshini)



குருநாதன் வருவார்
குறை களைவார்

அருள் பொழிவார்..  நம்
மனம் நிறைவார்

குரு உரையே வேதம் ஆகும்.
குரு நாமமே நம் கவசம் ஆகும்
குரு வடிவே இறை வடிவம்
குரு பாதமே நம் பவம் களையும்

இறையை மறந்தால் குரு காப்பார்
குருவை மறந்தால் இறை தாளார்.
குருவுருவை சிந்திப்போம்
குருவருளும் இறையருளும் பெற்றுயுவோம்

சிவம் சுபம்.

மரகத மேனியளே (Kaambothi)

Kaambothi

மரகத மேனியளே
மலையத்வஜன் மகளே
மாதேவன் மனம் கவர்ந்தவளே
மா மதுரை மீனாளே
மலரடி தந்தருள்வாயே

அனலில் விளைந்த அருட்புனலே, அன்பர் மனத்தில் நிறைந் தொளிர் தமிழ் மகளே

சிவராஜ தானி ஆள்பவளே, சுப சௌபாக்ய மெலாம் அருளபவளே, இபமா முகனை ஈன்றவளே, 
இடபவாகனத் தமர்ந்தின்னருள் பொழிபவளே....

சிவம் சுபம்

நரசிம்ஹ தரிசனமே (Thodi)

Thodi

நரசிம்ஹ தரிசனமே... நம் வாழ்வில் நாம் செய்த புண்ணியமே

ஆசார்யர் மூவரும் தொழுத தேவன், அன்னை ஆண்டாளும் ஆழ்வாராதிகளும் போற்றும் வரதனாம்..

பால ப்ரஹ்லாதனின் தவப் பயனால் பாரினில் வந்த புருஷோத்தமன், சீலம் மிகுந்தோரைக் காத்திட விரைந்தோடி வந்திடும்
பரம தயாளனாம்...

திருப்புகழ் அருணகிரி போற்றிடும் தேவன், திருமகளை மடி வைத்த
சாந்த முகன்,  பரிக்கலில் வாழும் பர வாஸுதேவன், ஸ்ரீதரன் மாலோலன், ச்ரித ஜன பாலன்....

சிவம் சுபம்

Jaya Jaya Narasimhaa Jaya Vijayee Bava Narasimaa



Jaya Jaya Narasimhaa
Jaya Vijayee Bava Narasimaa

Parakaala Narasimhaa
Parama dayaaLa Narasimhaa

Vyaasa vandhitha Narasimhaa - mano vyaakoola nivaaraNa Narasimhaa
Kanaga Vallee Samaetha Narasimhaa

Parakaalaasura samhaaaa
Baktha "Vasantha" Priya Narasimhaa, (any dhina)
Abhisheka Priya Narasimhaa, Sadhaa Shaantha Suba Moorthae Narasimhaa

Sivam Subam

துதித்தால் அருள்வான் இறைவன்.



துதித்தால்  அருள்வான் இறைவன்.
அவர் வழி நடந்தால் அருள்வார் குருநாதன்.
சொல் செவி மடுத்தால்
அருள்வார் தந்தை.
(கன்று) நினைக்கும் முன்னமே பசியாற்றுவாள் நம் அன்னை.

அன்னை :

நாம் குடியிருந்த கோயில்.
நம்மை உலகறியச் செய்த கொடிமரம்**.
தன்னுயிரைப் பணயம் வைத்து நம்மைக் காத்த பலி பீடம்.
 என்றும் நம்மை வாழ வைக்கும் தெய்வம்.

** த்வஜஸ்தம்பம்.

சிவம் சுபம்

நீ அமரும் இதயம் அல்லவோ

2

நீ அமரும் இதயம் அல்லவோ, பழுதடையாது பாது காத்துக் கொள் அய்யா

ஹ்ருதயாலீஸ்வரா என் ஹ்ருதய கமலேஸ்வரா..

என் அன்னையினும் பெருங் கோயிலோனே, என் தந்தை சொல் மிக்க
மந்திர ரூபனே, ஆலடி அமர் என் குரு நாதனே, உன் காலடி தந்தென்னை ஆள் தெய்வமே

கையளவே ஆன கோயில் அல்லவோ, அதனுள் வாழ் கருணைக் கடல் நீ அல்லவோ, சிறியேன் நானுன் பெருமை சொல்லவோ, அடியேன் என்னைக் காத்தருள் வல்லவன் அல்லவோ..

சிவம் சுபம்.

ஒருசில வரங்கள் கேட்பேன் (Behag)



ஒருசில வரங்கள் கேட்பேன், தந்தருள் வாய் எனக்கே தந்த முகனே

(என்) தேகாபிமானம் குறைய வேண்டும் - தெய்வாபிமானம் குன்றாமை வேண்டும்

உன் போல் பெற்றோரை வணங்கிடல் வேண்டும், உன் சோதரரைப் போல் தவம் சிறந்திட வேண்டும், சைவ வைணவரும் போற்றும் தந்தி முகனே,  (எங்கணும்)  கொலை புலை  இன்றி  அன்பலை வீச வேண்டும்.

வெயில் மழை பாரா மரத்தடி வாசனே , அருகம் புல்லுக்கே அகம் குழைவோனே, எளியோர்க்குதவும் மனம் பெருக வேண்டும், எங்கணும் மங்கலம் பொழிந்திட வேண்டும்.

சிவம் சுபம்.

அன்னையினும் பெரும் கருணாமயன்



அன்னையினும் பெரும் கருணாமயன்-
ஆயிரம் பிறை கண்ட சந்திரசேகரன் -
இன்சொல் அமுதன் -
ஈசனின் மறுவுருவாம் சங்கரன்-
உயர் வேதக் காவலன்  -
ஊருலகம் போற்றிப் பணி ஞான ஸரஸ்வதி -
எம்மிடை என்றும் நடமாடும் தெய்வம் -
ஏழுலகும் ஒலிக்கும் தெய்வக் குரலோன் -
ஐங்கரனை ஒத்த ஞானக் கனியோன் -
ஒப்பிலா ப்ரணவ குருகுஹன் -
ஓங்காரத் தொளிர் பர ப்ரஹ்ம ரூபன் -
ஔவியம் தீர்த்து நம்மை ஆட் கொள்ளும் அம்மையப்ப குருபரன்.

சிவம் சுபம்

அவளுக்கென்ன அழகுச் சிலை (in film tune)

Appa: my friend sent this Gandhimathi AmbaaL (above) n asked me to compose few lines  in a cine tune.  My immediate response was.....

Appa: அவளுக்கென்ன அழகுச் சிலை
அருள் ஒழுகும் அன்புச் சிலை, ஐந்தொழிலோன் உள்ளுறையும் உயர் ஞான வடிவச் சிலை.....

உயர் ஞான வடிவச்சிலை.....

(மூ) உலகிற்கவள் அரசிதான்



(மூ)  உலகிற்கவள் அரசிதான் - எனக்கவள் அன்னையாவாள்

அனலில் அவள் தோன்றினாலும் அருட் புனலாய்க் கருணை  செய்வாள்

கணபதிக்கு கனி தந்தாள்
கந்தனுக்கு வேலீந்தாள்
கணவனுக்கு (பாதி) உடல் அளித்தாள்
கடையன் எனக்கோ தனையே ஈந்தாள் 

(அழுத) பிள்ளைக்கு பால் கொடுத்தாள்
ஊமைக்கு பாட்டளித்தாள்
கண்ணனையும் காத்தவள் தான்,  தனயன் எனை அணைப்பவள் தான்

OM SIva KaNmaNikku Jeya MangaLam

OM

SIva KaNmaNikku Jeya MangaLam
Sivai kara Velarukku   Suba MangaLam

Aaru Mugathaarukku Jeya MangaLam
Aarirandu Vizhiyaaruku Suba MangaLam

Visaagathu Uthithaarukku Jeya MangaLam
Sri Kaarthikeyarukku Suba MangaLam
Sooranai aatkondaarukku Jeya MangaLam
Subramanya Saamikku Suba  MangaLam

Aaru padai Veetaarukku Jeya MangaLam
Aarirandu karathaarukkku Suba MangaLam
SaravaNabavarukku Jeya MangaLam
Shanmuga Naatharukku Suba MangaLam

Sevalukkum Mayilykkum Jeya MangaLam
Sri VaLLi Devasanaikku Suba MangaLam
VishNuvin Marugarukku Jeya MangaLam
Veerath Thiru Murugarukku Suba MangaLam

Thiruppugazh Naatharukku Jeya MangaLam
Thiru-Arutpaa VaLLalukku Suba MangaLam
Thiruporoor adiyaarukku Jeya MangaLam
Ayyan Thiruvadi Thaamaraikku Suba MangaLam

Sivam Subam

மூவிரு முகங்கள் போற்றி (Kandha Puraanam)

விருத்தம் -

கந்த புராணம் - ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்யப் பெருமான் அருளியது

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி, அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

சிவம் சுபம்

கணபதியைத் தொழும் வல்லீ பதியே



கணபதியைத் தொழும் வல்லீ பதியே
சுரபதி தொழும் தேவ சேனாபதியே... சரணம் சரணம் சரணம்

சிவைபதி அருளிய அறுமுக நிதியே
வாக்பதி வலம் வரும் ஸ்ருதி பதியே சரணம் சரணம் சரணம்

பசுபதி தோளமர் குருகுஹ நிதியே
ரமாபதியின் மருக நிதியே
இச்சை க்ரியை மருவும் ஞான நிதியே
பச்சை மயிலேறும் அருள் நிதியே சரணம் சரணம் சரணம்.

சிவம் சுபம்

படைத்தாள் நம்மை அங்கயற்கண்ணி



படைத்தாள் நம்மை அங்கயற்கண்ணி
பாலூட்டினாள் திரிபுர சுந்தரி

உணவளித்தாள் அன்ன பூரணி, உயர் ஞான மளித்தாள் காந்திமதி

அழகளித்தாள் வடிவுடை நாயகி, ஆரோக்யம் காப்பாள் தையல் நாயகி, கனகம் பொழிவாள் கற்பக நாயகி,  தவசீலம் சேர்ப்பாள் காமாக்ஷி

அறம் வளர்ப்பாள் தர்ம ஸம்வர்த்தினி, அச்சம் தவிர்ப்பாள் அபயாம்பிகை, தோஷம் போக்குவாள் பர்வத வர்த்தினி, மதுரம் பொழிவாள் மதுர காளி.

காலனை வெல்வாள் அபிராமி, கலைஞானம் ஊட்டுவாள் சிவகாமி, ஞால மளிப்பாள்** விஸாலாக்ஷி,  மங்கலம் காப்பாள் ஸ்ரீ லலிதை,

சிவம் சுபம்.

** உலகையே நம் வசமாக்குவாள் என்று கொள்க.

அகிலத்தின் பசி தீர்க்கும் அம்மை & அன்னம் பாலிக்கும் அன்னையே!




அகிலத்தின் பசி தீர்க்கும் அம்மை யப்பருக்கு ஐப்பசி முழு நிலவில் அன்னாபிஷேகம்

அன்னம் பாலிக்கும் தில்லை அம்பலருக்கு அறுசுவை காய் கனியோடு அபிஷேகம்

ஊர் மக்களுக்கெல்லாம்  படி யளக்கும் பாண்டியற்கு, உன்னத மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு, உண்ணாமுலையாளின் அண்ணாமலை யார்க்கு, எந்நாளும் நமை காக்கும் (அன்ன) பூரணற்கு அபிஷேகம்

அய்யனின் ப்ரசாதம் அறியாமை இருள் நீக்கும். வயிற்றுப் பசி தீர்த்து ஞானப் பசி தூண்டும், வாதாதி ரோஹ நிவாரணம் செய்யும், வானோரைப் போல் வாழ்வாங்கு வாழ வைக்கும்.

சிவம் சுபம்.


அன்னம் பாலிக்கும் அன்னையே! எப்பொழுதும்
முழு நிறைவே,
சங்கரனின் உயிர் துணையே,  எமக்கு
பற்றற்ற மனமும் ஞானமும்  ஈய வேண்டும் தாயே,
பர்வதராஜன் மகளே,
பார்வதியே, என்னை ஈன்றவளே, என் அப்பனாம் மகேசனின்
அடியாரே எனக்கு உற்றார் (அம்மா), அவன் ஆளும்  மூவுலகோரும் சுகமாய் வாழ அருள்வாயே.

சிவம் சுபம்

ஞான சம்பந்த ஸ்வாமிநாதர்.

ஓம்

ஞான சம்பந்த ஸ்வாமிநாதர்.
ஞான குருகுஹ
ஸ்வாமிநாதர்

ஞான பண்டித
மஹாஸ்வாமி நாதர்
ஞான போதஹ
மஹாதேவ நாதர்

ஞான சக்தி வடிவ
மஹா ஸ்வாமி நாதர்
ஞான சரஸ்வதியாம்
ஸ்ரீ சந்த்ரசேகரர்.

குருவும் அவரே
குஹனும் அவரே
குருகுஹ ஸ்வாமிநாத
பரமாச்சார்ய பரமேஸ்வரரே.

சிவம் சுபம்

பால க்ருஷ்ணன் பக்த பரிபால க்ருஷ்ணன்



பால க்ருஷ்ணன்
பக்த பரிபால க்ருஷ்ணன்

வேங்கட க்ருஷ்ணன்-  திரு வேங்கட க்ருஷ்ணன், திருவடி தொழுவோம், திருவருள் பெறுவோம்

வண்ணப் பட்டாடடையில் மிளிரும் அய்யனே, யாழி மேல் தோன்றும் காளியும் ஆவான். அருணகிரி பாடும் பால முருகனே திருமலை உறையும் பாலா-ஜீ ஆவான்

கண்ணனும் கந்தனும் ஒன்றென்றுணர்ந்தால்
பேதங்கள் மாயும், (அவன்) மோஹன ரூபம் தெரியும், அவரவர்க்கேற்ப உருவம் கொண்டு அருள் மழை பொழியும் ஆனந்த வடிவம் புரியும்

சிவம் சுபம்.

அருள் வடிவே அம்மா (Sahana)

சஹானா

அருள் வடிவே அம்மா 
ஆகம வேத கலாநிதியே அம்மா
இருள் நீக்கி யருள் அம்மா
ஈசமனோஹரி மீனாக்ஷி  அம்மா

உனதடியே சரணம்மா
ஊக்கமளிப்பாய் அம்மா
என்னுயிரல்லவோ அம்மா, என்
ஏக்கம் தவிர்த்தருள் அம்மா

ஐந்தொழில் புரியும் அம்மா
ஒப்பிலா ராஜமாதங்கியே அம்மா
ஓங்காரத் தொளிர் அம்மா
ஔதார்யக் கழலிணைத் தந்தாள் அம்மா... மீனம்மா

சிவம் சுபம்.

இறை வழி பாடு இறை பதம் நாடு (Revathi)



இறை வழி பாடு
இறை பதம் நாடு
இரையையும் தேடு
நெறியோடு வாழு

ராம ராம என்றால் போதாது
ராமனின் நெறியைப் பின்பற்றாது

க்ருஷ்ண க்ருஷ்ண என்றால் போதாது,
க்ருஷ்ணனின் கீதையை செவி மடுக்காது

சிவாலயம் அமைத்தால் போதாது,
பூசலாரைப் போல் பக்தி செய்யாது

குன்றுதோறும் சென்றால் போதாது
குமரனை மனத்தில்
நம்பித் தொழாது

தேங்காய் உடைத்தால் தடை விலகாது, ஐங்கரனை உருகிப் பணிந்து தொழாது

சாயி பஜனை செய்தால் போதாது,
சகலர்க்கும் அன்புடன் உதவி செய்யாது

பூசை புனஸ்காரம் பலித்திடுமே இறை பாதத்து அன்பு மெய்யாய் இருந்தால்.

நாம ஜெபம் ஒன்றே போதும் நமக்கு, காமனைக் காலனை வென்று வாழலாம். 

சிவ சாயி நாரண பராசக்தி,
கந்தா கணபதி ஐய்யப்பா
என்றால் போதும் இந்தா என்றே அருள் பொழியும், அகம் நிறையும்

சிவம் சுபம்

கண்ணாரக் காண வேண்டும் -



கண்ணாரக் காண வேண்டும் - காஞ்சி வாழ் தயா பரனை -
கை கூப்பி வணங்க வேண்டும் காமகோடி ஈசனை,

நெஞ்சாரப் பாட வேண்டும் பரமாச்சார்ய
பரம்பொருளை -
செவியாரக் கேட்க  வேண்டும் அந்த தெய்வத்தின் குரலை தினமும்.

தப்பாமல் நடக்க வேண்டும் அக்குரல் சொல்லும்  நெறி தனிலே,
(இனிப்) பிறவியற இதை விட சிறந்த மார்க்கம் இல்லை புவியிலே.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
ஆலடி சங்கர காலடி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர
காமகோடி சங்கர
காமாக்ஷி சங்கர
காமாக்ஷி சங்கர
ஸ்ரீ சந்தர் சேகர

சிவம் சுபம்.

மனமெனும் மந்த்ராலயத்தில் உமை வைத்தேன்

மனமெனும் மந்த்ராலயத்தில் உமை வைத்தேன். அன்று ப்ரஹ்லாதனாய்
நரசிங்கனைக் கொணர்ந்தீர், பயமறுத்தீர். பவம் களைந்தீர்.
இன்று துங்கைக் கரையில் ப்ருந்தாவனத்தில் ஒளிரும் புனிதரே,
என் உடல் பிணி தீர்ப்பீர்,   உள்ளம் குளிரச் செய்வீர்,
மலர் பாதம் பிடித்தேன் 
குரு ராயரே, உம் அபய கரம் கொடுத்தென்னை காப்பீர், காற்றின் மகவை எதிர் வைத்தருளும் எங்கள் கற்பக வ்ருக்ஷமாம் காமதேனுவே, ஸ்ரீ ராகவேந்திர பரப்ரஹ்மமே!

சிவம் சுபம்

(குரு) பகவானே பகவானே



(குரு) பகவானே பகவானே பதம் தந்தருள்வாய் பகவானே

கடைக் கண்ணால் என்னைப் பார்த்திடுவாய், கவலைகள் யாவும் தீர்த்திடுவாய்

இருகரம் கொண்டெனை அணைத்திடுவாய், இக புரத்திலும் என்னைக் காத்திடுவாய், அதரம் மலர்ந்து ஆசி கூறி என் இதயத்துள்ளே நிலைத்திடுவாய்

ச்ருங்கேரி காமகோடி ஷீரடி பர்த்தியில் ஒளிர்நதிடுவாய், சேஷாத்ரி ரமணராய் குழந்தையாய் காட்சித் தந்தே (என்) சஞ்சலமெல்லாம் தீர்த்திடுவாய்,  சங்கட மெல்லாம் போக்கிடுவாய்

சிவம் சுபம்

மழை பொழிய வேண்டும் தாயே (Revathi)



மழை பொழிய வேண்டும் தாயே ...  மக்கள் வாழ்ந்திட மகிழ்ச்சி யுற்றிட...

தருணம் அறிந்து பொழிந்திட வேண்டும் தக்க அளவே பொழந்திட வேண்டும்

குளம் நிறைய வேண்டும் தாயே, மக்கள் கண்கள் குளமாக வேண்டாம் தாயே, கால் நடைகளும் வாழ்ந்திட வேண்டும், இதை கவனத்தில் கொள்வாய் கயற்கண்ணி நீயே

பயிர் செழித்திட வேண்டும், உயிர் வாழ்ந்திட வேண்டும், தனம் பெருக வேண்டும்  தானமும் சிறக்க வேண்டும்.. தாயே

சிவம் சுபம்

மங்கள வாரம் வாரம் (Yemen Kalyani)

உ (y/k)

மங்கள வாரம் வாரம்
மங்கலம் பொழியும் வாரம்

துர்கா தேவியின் சுப வாரம்,
நம் துக்கமெலாம் துகளாகும் வாரம்

செவ்வேள் முருகனும்
செவ்வாய் மலர்ந்து அருளும் வாரம்,
தனயனை மடிவைத்து
தாயும் முகமலர்ந் தருளும் வாரம்

ரோஹ நிவாரண வைத்திய நாதனும்,
பாப ஸமன பாலாம்பிகையும்,
தன்வந்த்ரி மாமனும்
முத்துக் குமரனும்
முன்னின்றருளும்....

சிவம் சுபம்

எல்லாம் உனது பதம்



எல்லாம் உனது பதம்
எல்லாம் உனது செயல் எல்லாம் உனதருளே என்றிருந்தால், பொல்லாத மா துயரம்
நீங்கும் மருவும் உனதடிக்கே ஆதரவாய் சொக்கநாதா

-- சொக்கநாத வெண்பா

சோமன் அணி சுந்தரா
சொக்கநாதேஸ்வரா, சொக்கினேன் உன் அழகில் மீனாக்ஷி சுந்தரா

கயிலையை விட்டு   மதுரை வந்தாய்,  கயற் கண்ணி கரம் பிடித்து சிங்காதனம் அமர்நதாய் கடம்பவனத் தினையே கையிலாயமாக்கி மூவுலகும் ஆளும் முத்தமிழ் வேந்தனே

அங்கிங்கெனாதபடி எங்கும் உன் இடது காலை தூக்கி ஆடி அயர்ந்து விட்டு, மதுரையிலே தானே உன் காலெடுத்து ஆடி உள்ளம் பூரித்தாய், உனதடியாரின் உள்ளம் புகுந்தாய்.

கால் பதித்து நடந்து இங்கே  பிட்டுக்கு மண் சுமந்தாய்,  நின் திருப் பாத மண்ணே திருநீறு ஆகும், என்னிரு வினை களைந்து உன் பாதம் சேர்க்கும்.

சிவம் சுபம்

Siva Bhajan - Meenaakshi pathi Sundareswaraa

OM

Meenaakshi pathi Sundareswaraa
Kaamaakshi pathi
Yekaambareswaraa
Visaalakshi pathi
Viswesvaraa
Virainth-AruL purivaa
Paavathi Parameswaraa

Karpagaambikai Naatha KaapaLee-swaraa
Vadivudainaayagi Naathaa Otriyooreaswara
Thripurasundari Naathaa
Vaalmeekeeswara
Kai koduth-aaL  vaa
KaaLi Kacchabeswaraa

Kaanthimathi Sametha
Saalivateeswaraa
Gomathi Sametha
Sankaralingeswaraa
Kuzhal-vaaimozhi-yaaL Sametha Kutraaleeswara
VantharuL puri vaa
Oppilanaayagi Samaetha
Vaithyapureeswara

Sivakami Priya
Natarajeswaraa
Abiraami priya
Amirthakateswaraa
Akilaandeswari Priya
Jambookeswsraa
Adimalar thanthaaL
Artha-Naareeswaraa

Sivam Subam

பக்தி செய்வோம் வாரீர் (Brindavana saranga)

B/S

பக்தி செய்வோம் வாரீர்
பரமனை பக்தி செய்வோம் வாரீர்

பக்தி செய்தால் நம் புத்தி தெளியும், நற் சிந்தனை மலரும், செயலும் சிறக்கும்

ஆழ்வாரைப்  போலே, அறுபத்தி மூவரைப் போலே, அனுமனைப் போலே, மீராவைப் போலே, நம்மிடை வாழும் சுபத் தாயினைப் போலே, நாதோபாசனை செய்திடுவோமே, நமனை வென்று வாழ்ந்திடுவோமே

சிவம் சுபம்

Saturday, October 28, 2017

ஓடிவா ஓடிவா கயற்கண்ணி



ஓடிவா ஓடிவா கயற்கண்ணி, ஆடி ஆடி வா கண்மணி... என் கண்மணி

சந்திரன் போயி  சூரியன் வந்தான், எழுந்து நீயும் நீராடு,
மஞ்சப் பட்டு பாவாடை மல்லிகப் பூவும் வச்சிருக்கேன், அழகாக உன்னை அலங்கரிச்சு மஞ்சக் குங்கும திலகமிட்டு அரசவைக்கு அழச்சுப்  போவேன்.

சிங்காதனத்திலே நீ அமர்ந்து மூ-வுலக ஆண்டிடலாம்,
முக்  கண்ணனை மணந்திடலாம், முருகனை மகனாப் பெத்துக்கலாம், முத்தமிழை வளர்த்திடலாம்.

என்னையும் நல்லா பாத்துக்கலாம். ஏகாந்தமா நாம பேசிக்கலாம்.
மலையத்வஜன் நான்  தானே, காஞ்சன மாலையும் நான் தானே, என் குல மகள் என்றும் நீ தானே,  என் குல தனமும் நீ தானே.

வேகமே வா வா என் தாயே, என் வேதனை களையும் மகா மாயே, பால் சோறு ஊடடிடுவேன், உன் பிள்ளைத் தமிழு பாடிடுவேன், மடியில வச்சு கொஞ்சிடுவேன்.
தாலாட்டி தூங்கப் பண்ணிடுவேன்.

தூங்கும் போது காலை வருடி பதமா பிடிச்சு விட்டுடுவேன்-  த்ருஷ்டியும் நானே கழிச்சிடுவேன் 

ஆராரோ ஆராரோ என் தாயே,  (என்னை)   பாராயோ ஓரக் கண்ணாலே.....

மதுர வாழும் மரகதமே, மதுரம் பொழியும் திரிபுரமே,
கிளியேந்தும் கோமளமே,  என் கலிதீர்க்கும் கோகிலமே!

சிவம் சுபம்

வேழனை வேலனை ஈன்ற கன்னி



வேழனை வேலனை ஈன்ற கன்னி, அமரர்  
வேதனை தீர்த்த முக்கண்ணி

ஞான வடிவாய் ஒரு பிள்ளை - ஞாலம் காத்திட மறு பிள்ளை
ஈன்றவளே, சிவ சக்தி ஈடிணையில்லா பரா சக்தி

சிக்கலில் வாழ் சிங்காரி,  சிக்கலைத் தீர்க்கும் ஒய்யாரி, மூத்தவனை மடிவைத்து
இளையோனுக்கு வேலளித்து போருக் கனுப்பிய கை காரி, உன் சாதுர்யம் என் சொல்வேன் அர்த்தநாரி

சிவம் சுபம்


அழகிய சிங்கன் அடி போற்றி.

அழகிய சிங்கன் அடி  போற்றி.

தூணைத் தாயாய் கொண்ட தெய்வம்.
தூயவரைத் தாயாய் காக்கும் தெய்வம்

பக்தனுக்காய் வந்த ஒரே அவதாரம்
பத்தில் இதுவே சிறந்த அவதாரம்.

முகமோ ஜ்வாலா சிம்ஹம்.
மனமோ உருகிய
நவநீதம்

ஸ்வாதியில் உதித்த
தேவன் - நம்மை
ஸ்வாதீனமாய் வாழ வைக்கும் இறைவன்.

ப்ரதோஷக் காலத்தில்
தோன்றினான்
பிறவி தோஷம் எல்லாம் போக்குவான்.

திருவேங்கடனும் தொழும் பெரியவன்
திருமாலில் இவனே
சிறந்த பூரணன்

அரக்கனை மடி வைத்த கருணை
அவன் சந்ததியைக் காத்த அருட் சுனை.

சக்கரத்தில் அமரும் யோகன்
சஞ்சலம் சங்கடம் தீர்க்கும் மார்க்கன்

அன்பருள்ளமே அவன் அஹோபிலம்
மெய் யன்பருக்கதுவே
பெரும் பலம்.

பானக நீரை விரும்பி அருந்துவான்
பரமபதம் தந்து வாழ்த்தி
நெகிழ்வான்.

ஜெய விஜயீபவ நரசிம்மா
பவ பந்தமோசன
லக்ஷ்மீ நரசிம்மா.

சிவம் சுபம்
ந்ருசிம்ஹம் நிர்பயம்.

ஆனைமுகனே ஆறு முகனே



ஆனைமுகனே ஆறு முகனே   அய்யப்ப தேவனே சரணம்.
அம்மை அப்பனே
அருமை மாமனே
அலை கலை மகளே வரணும், திட பக்தி செய்யும் மார்க்கம் அருளி திருவடி மலரிணைத் தரணும்

அசாத்ய ஸாதக மூர்த்தி
அதி பல  நவகோள் மூர்த்தி
அடிபணிந்தேன் அருள்  கீர்த்தி

ஜெய ஜெய ஹரி ஹர  ப்ரஹ்மாதி சுபகர
ஜெய ஜெய  கருணா மூர்த்தே, ஹரனே ஹரியே அன்னையே அருள்புரி அனைவர்க்கும் இனிதே
சிவம் சுபம்

கயற்கண்ணி நாதனே (Reeti Gowlai)



ரீதி கௌள

கயற்கண்ணி நாதனே
கல்யாண ஸுந்தரனே
கழலிணைப் பணிந்தேனே  கடுகி
அருள்வாயே

முத் தனத்தாளை மணந்த முக் கண்ணனே, முத்தமிழ் வளர்த்த மூதூர் இறைவனே.... மதுரை மூதூர் இறைவனே

அனல் மகளுடன் வாழ் சிரப் புனலோனே,  சடை மறைத்து மகுடம் பூண்ட சிவனே, சூலம் விடுத்து செங்கோல் ஏந்தும்
ராஜனே, கால் பதித்து வைகைக் கரை நடந்தோனே

கால் மாறி ஆடுவோனே, பால் வெண்ணீர் அணிவோனே,  கௌரீ லோகம் ஆள் சௌந்தர பாண்டியனே,  அறுபத்தி நாலு ஆடல் வல்லானே, ஆலவாய் அண்ணலே, உனக்கிணை யாரே.

சிவம் சுபம் 

வானோரும் வணங்கும் (Mohanam)

Mohanam

வானோரும் வணங்கும் வைத்தியனே, எம்மை வாழ வைக்கும் நாதனே

தையல்நாயகி மருவும் மெய்யா, மன மையலை நீக்கும் துய்யா

புள்ளிருக்கு வேளூர் வாழ்பவனே, எம் உள்ளிருந் தொளிரும் சிவ பரனே, செவ்வேளை ஈன்ற
சூலனே, செவ்வாய் தொழுதேத்தும் சுபகரனே

நின் ஐந்தெழுத்தே அரு மருந்து, வானோரையும்
வாழ்விக்கும் திருவமுது,
நின்னை நினைந்தோரின் ரோஹம் மாயும், நின் பணம் பணிந்தோ

கந்தனின் திருமண வைபவமே (Madhyaamavathi)

Madyamaavathi

கந்தனின் திருமண வைபவமே - நம் சொந்தனின் திருமண வைபவமே

நம்பிராஜனின் திருமகளாம் வள்ளியைக் கடிமணம் புரிந்தானே -  வள்ளல் விநாயகன் திருவருளால். தினைப்புனத்து திருமணமே, திகட்டாதின்ப அனுபவமே

சூரனை வென்ற வேலனை இந்திரன் மகள் வரித்தாளே, தேவ சேனை அதிபதியை தேவசேனா கரம் பிடித்தாள். (பரங்) குன்றத்தில் நடந்த வைபவமே, குவலயம் கண்ட அற்புதமே

ஆனந்தம் ஆனந்தம்  ஆனந்தமே ஆறுமுகனின் திருமணமே, ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே,
வள்ளி தெய்வானைத் திருமணமே

கண்டோர்க் கினி பிறவி யில்லை, கேட்டோர்க்கும் இனி இறப்பு இல்லை.
என்றும் எங்கும் மங்கலமே,  எதிலும் எப்போதும் மனநிறைவே.

செல்வமுத்துக் குமரனே வா வா (Shanmugapriya)


Shanmugapriya

செல்வமுத்துக் குமரனே வா வா - எங்கள்
செல்ல முத்துக் குமரனே  வா வா

வைத்யநாதன் சுகுமாரனே வா வா - (அன்னை) தையல் நாயகி கர வேலனே வா வா

செவ்வாய் மலர்ந்தருள் செவ்வேளே வா - திருச் சீரலைவாய் அமுதே வா வா - அரக்கனை ஆட் கொண்ட  அருளே வா வா - இரக்கமே வடிவான  அண்ணலே வா வா

ஷண்முகா உன்னை நான் வலம் வந்தேனே -  சஷ்டி கவசம் பாடிப் பணிந்தேனே,  தன்வந்த்ரியின் மருமகனே,  தருணமறிந்தருளும் தயாகரனே.

சிவம் சுபம்

Tuesday, October 24, 2017

நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை வெண்பாக்கள் (சில)

Sashti Special 10

நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
வெண்பாக்கள் (சில)

விருத்தம் - ராகமாலிகை

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கல்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்!" 

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல்  கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை." 

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தி(ல்) வாழ்வே!" 

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்  'முருகா!' என்று ஓதுவார் முன்." 

முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே  ஈசன் மனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியேக்  கை தொழுவேன் நான்

சிவம் சுபம்

காணக் கண் ஆயிரம் போதுமோ (Hamsanandi)


(ஹம்ஸானந்நி)

காணக் கண் ஆயிரம் போதுமோ... அன்னை காமாக்ஷியின் நல்லெழில் வடிவைக்....

நாவாயிரம் போதுமோ... நம் அன்னையின் நற்புகழைப் பாட

கரம் ஆயிரம் போதுமோ அவள் அருளைப் அள்ளி அள்ளிப் பருக, மீண்டும் மீண்டும் பிறந்திட வேண்டும், யாண்டும் அவள் முன் அமர்ந்திட வேண்டும், போதும் என்றவள் நெகிழும் வரை, (அவளைப்) பாடிப் பரவி பணிந்திட வேண்டும்

தேவியவள் அபிஷேகம் கண்டேன், என் தோஷமெல்லாம் நீங்கிப் புனிதன் ஆனேன், மஞ்சள் பட்டாடையில் அவள் தவக் கோலம் கண்டேன், (என்)   சஞ்சலம் சங்கடம் அறவேக் களைந்தேன்

கணேசன் அன்னையைக்  கணமும்  விட்டகலான்,  குமரனும் அருகில் நிழல் கொண்டான், வரதனோ வலத்தில் சந்நிதி கொண்டான், ஏகனோ அவளுள் பாதி ஆனான்.... நாயேன் அன்னையை என்னுள் கொண்டேன்

சிவம் சுபம்

Monday, October 23, 2017

Viruththam & Sri Muruga Naama Mahimai By Paambam Srimath Kumara Gurudaasa SwamigaL



Viruththam & Sri Muruga Naama Mahimai 
By   Paambam Srimath Kumara  Gurudaasa SwamigaL



பெரியவா எனும் பெருங் கருணைக் கடல் (ranjani)

உ (ரஞ்சனி)

பெரியவா எனும் பெருங் கருணைக் கடல் இருக்க, சிற்றோடைகளைத் தேடி அலையாதே, மனமே நீ

 எத்தை தின்றால் பித்தம் தெளியு மென்று உழலாதே...உன் சித்தத்தை அச்சிவன் பால்  செலுத்தி யிரு

நடமாடும் தெய்வம் அவர் துணை வருவார், நல்வழி காட்டி உய்விப்பார், (அவர் பால்) திட பக்தி செய்தால் போதுமே, விடமும் அமுதமாய் மாறுமே

அன்னை காமாக்ஷியாய் அரவணைப்பார், அய்யன் ஏகனாய் அகமணைப்பார், அத்தி வரதனாய் காத்து நிற்பார்,  குருகுஹக் குமரனாய் ஆட் கொள்ளுவார்

சிவம் சுபம்.

Chandramouleeswaraa - Chandrasekaraa (Bhajan)

OM

Chandramouleeswaraa -
Chandrasekaraa
Chandrasekaraa -
Chandramouleeswaraa

Parameswaraa
Paramaachaaryaa
Paramaachaaryaa
Parameswaraa

Kaanchi nivaasaa.
Mahaa Devaa
Kaamkoteesaa
Mahaa Periyavaa

Veda swroopa
Dakshinaamurthy
Veda Paalana
Chandra sekara Saraswathi

Prathosha thaandavaa
Ekaambaresaa
Prathyaksha Aandavaa
Eka-Paramaacharya

Nandi vaahanaa
Nama sivaaya
Natha jana paalana
Nama Periyavaa

Sivam Subam

பூரத்தில் உதித்த புண்ணியளே (Hindolam)



பூரத்தில் உதித்த புண்ணியளே,  திரி 
புவனமும் வணங்கும் தமிழ் மகளே....ஆடிப்

அக்கிரஹாரத்தில் அவதரித்தாய், எங்கள் அந்தகாரமதைப் போக்கிடவே....ஆடிப்

துளசி நிழலில் தோன்றினாய், தூய பெரியாழ்வார் மகளனாய், சேரிப் பெண்டிருடன் கை கோர்த்தாய், அருளை வாரி இறைத் தவர்  உய்யச் செய்தாய், ஆடிப்..

உலகின் முதல் புரடசிப் பெண்ணே,
உலகளந்தோனை உளம் வைத்த பெண்ணே,
உன்னத தமிழ் மாலை சூட்டிய பெண்ணே,
உன்னடி தொழுது உய்வோம் கண்ணே.

சிவம் சுபம்

ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ் - வாராதிருந்தால் இனி நான் உன்


ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ் 

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன்,
பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள்
அருளியது

(இப்பிள்ளைத் தமிழைப் பாடி
நம் குழந்தைகளைத் தாலாட்டலாமே)

சிவம் சுபம் 

ஆண்டவனை ஆண்டாள் - அவள் அன்பர் நம்மையும் ஆழ்வாள்



ஆண்டவனை ஆண்டாள் -  அவள் அன்பர் நம்மையும் ஆழ்வாள்

அரங்கனைக் கலந்தவள்,   நம் அந்தரங்கம் அறிவாள்

பூரத் துதித்தவள் பரி பூரண வாழ்வருள்வாள்,
பொறுமை நிலமகள் பெருமை சேர்ப்பாள்,
சூடிக் கொடுத்தவள் ஆடியில் வருவாள்,
பாவை நோன்பளித்தவள்  நம் சேவை ஏற்பாள்

அந்தணர் மகள் அவள் அறத் தமிழ் வளர்த்தவள் - பேதம் களைந்தவள் (ஞான) போதம் அளித்தவள்,
அரங்கனை விட்டகலாள், அன்பர் நம்மையும் விட்டகலாள்

சிவம் சுபம்

ஆடிப்புர திருநாள் இதுவே (Cini Tune - Mohanam - Lahiri Lahiri)



ஆடிப்புர திருநாள் இதுவே அன்னை மீனாக்ஷிக்கு வளை காப்பு
ஆலவாய் அரசியின் அருளொன்றே அனைத்துயிருக்கும் பாதுகாப்பு

சொக்கனை பிரியா விடை யவளே சொக்கத் தங்கமாய் ஒளிர்ந்திடுவாள்,
மல்லிகை முல்லை மருக்கொழுந்து மலர் மணமாய்த்  திகழ்ந்திடுவாள்

மரகத மேனி மீனாளே தக தக வெனவே ஜ்வலித்திடுவாள், நீண்ட கூந்தலில் பூச்சூடி
நிறைமதியாய் குளிர்ந்திருப்பாள்

தங்கம் வைர வைடூர்ய கண்ணாடி வளையல்கள் பூட்டிடுவோம்.
மங்கலத் திரு பாதங்களை நலுங்கிட்டே அலங்கரிப்போம் 

கலைமகள் வீணை மீட்டிடவே, அலைகள் கீதம் இசைத்திடுவார்.
மதுரை யாளும் சுந்தரரும் மகிழந்தே கேட்டே ரசித்திருப்பார்.

பலவித பக்ஷண சித்ரான்னம் படைத்தே   
அன்னையைப் பணிந்திடுவோம்.
அய்யனையும் அருகழைத்து தீபாராதனை செய்திடுவோம்

உக்கிரவழுதியாய் குமரனே விரைவில் அவதாரம் செய்திடுவார்.
சோமாஸ்கந்த மூர்த்தியாய் காமாதி ரோஹங்கள் போக்கிடுவார்.

ஜெய ஜெய சங்கரி மீனாக்ஷி - ஹர ஹர சங்கரி மீனாக்ஷி-
ஹர ஹர சங்கரி மீனாக்ஷி- ஜெய ஜெய சங்கரி மீனாக்ஷி

நம்முள் இருப்பது மீனாக்ஷியே
நற்றுணையாவது சுந்தரமே

சிவம் சுபம்.

Narasinga devaa vaa vaa

OM

Narasinga devaa vaa vaa, Nanda(va)nam amarnthu aruLa vaa vaa

Prahlaatha Varathanae Vaa Vaa Vaa
PraNathaarthi-haranin mithranae vaa vaa

Simma mugaththu chemmalae vaa vaa
sirantha-thai aruLum vaLLalae vaa
anbar uLLam urai Ahobilaa - nin
adimalar thantharuL
vaa vaa vaa


Kaamaakshi sothara vaa vaa
Kamlaakshi naathanae vaa vaa vaa
ThirumaN oLirum Saivanae vaa vaa
Thuruvadi en siram vairhthaaL vaa vaa

Sivam Subam

ஓம்

நரசிங்கதேவா வா வா வா வா
நந்த (வ)னம் அமர்ந்து அருள வா வா

ப்ரஹ்லாத வரதனே வா வா வா வா
ப்ரணதார்த்தி ஹரனின் மித்ரனே வா வா

சிம்ம முகத்து செம்மலே வா வா
சிறந்ததை அருளும் வள்ளலே வா வா
அன்பருள்ளம் உறை அஹோபிலா வா - நின்
அடிமலர் தந்தருள் வா வா வா

காமாக்ஷி சோதரா வா வா வா வா
கமலாக்ஷி நாதனே வா வா வா வா
திருமண் ஒளியும் சைவனே வா வா
திருவடி என் சிரம் வைத்தாள் வா  வா வா வா

சிவம் சுபம்


அழகென்றால் மீனாக்ஷி



அழகென்றால் மீனாக்ஷி 
அருளென்றால் மீனாக்ஷி
அன்னை யென்றால்  மீனாக்ஷி
அரசி யென்றால் மீனாக்ஷி 

தமிழென்றால் மீனாக்ஷி
தடா தகை என்றால் மீனாக்ஷி
தண்ணருளே மீனாக்ஷி
தந்நிகரில் மீனாக்ஷி

மதுரை யென்றால் மீனாக்ஷி
மதுரமவள் மீனாக்ஷி
மரகதமே மீனாக்ஷி
மங்கலமே மீனாக்ஷி

உயிரளித்தாள்  மீனாக்ஷி
உணர்வளித்தாள்
மீனாக்ஷி
உயர் வளித்தாள்
மீனாக்ஷி
உட்கலந்தாள் மீனாக்ஷி

சிவம் சுபம்

ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து (Sai Stuthi)

Om

ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து
ஸாயி அருளாலே - ஸத்ய ஸாயி அருளாலே 

தங்குலம் எங்கும் மங்கலம் பொங்க ஸாயி  அருள்வாரே - ஸத்ய ஸாயி அருள்வாரே

வ்யாழன் அன்று ஒன்றாய் கூடி ஸாயியைப் பணிந்திடுவோம், ஸத்ய ஸாயியைப் பணிந்திடுவோம்

பர்த்திபுரீசனை பக்தி செய்து பதமலர் சூடிடுவோம் - அய்யன் பதமலர் சூடிடுவோம்.

பிறவிப் பிணியை களைந்து நாமே என்றும் ஸுகித்திருப்போம் -  ஸாயி அன்பில் திளைத்திருப்போம்

ஜெய் ஸாயிராம்
சிவம் சுபம்

தங்கபாலா தங்கபாலா (Bhajan on Sri Subramaniya Swami)



தங்கபாலா தங்கபாலா 
தங்கமயில் ஏறிவரும்
ஸ்ருங்கார  வேலா
ஸ்ருங்கார வேலா

ஆடி வருவாய் நீ
ஓடி வருவாய்
ஆடும் மயில் ஏறி எனைக்
காணவருவாய்
பாடும் குரல் கேட்கப்
பறந்தோடி வருவாய்
(பறந்து) ஓடி வந்து
என்னை நீ அகமணைப்பாய்

அஞ்சனமை எழுதிய
கண்கள் ஈராறு
வெஞ்சினம் அறுக்கும் உன் கரம் ஈராறு - (உன்)
சந்தன மேனியோ
கருணைப் பேராறு -
எங்கணும் மணக்கும்
வெண் திருநீறு

சரவண பவ என்றே ஜெபித்திவேன்
திருப்புகழ் மாலை சூட்டிடுவேன்
அருட்பா அமுது படைத்திடுவேன்
(உன்) அடிமலரை சிரம் சூடிடுவேன்

சிவம் சுபம் 

நோயுற்று அடராமல் (Noyutru Adaraamal) - Chidambhara SwamigaL

நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கி
ஒண் போரூர் அய்யா! நின் சீரடிக்கீழ் வைப்பாய் "தெரிந்து".

திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்

கண்ணார உன்னைக் காண வேண்டும்



Meenakshi viruthham
Namaste Sada Pandya Rajendra Kanye..

கண்ணார உன்னைக் காண வேண்டும் - என் கருத்தினில் நின்னுரு நிலைத்திட வேண்டும்

காதார உன் பெருமை கேட்டிடல் வேண்டும்-  அப் பெருமையை மனதார (நான்) இசைத்திட வேண்டும்

கைகூப்பி உன்னைத் தொழுதிட வேண்டும், (என்) சிரம் உன் பதமலர் சூடிட வேண்டும், (என்) நெற்றியில் (உன்) குங்குமம் நிலைத்திட வேண்டும், என் நெஞ்சினில் நீ குடி கொண்டிட வேண்டும்   

இந்த வரங்களே போதுமம்மா, கயற் கண்ணியே,   கருணை வாரிதியே, யமனையும் நான் வென்றிடுவேன், என்றும் உன்னுள் நிலைத் திருப்பேன்

சிவம் சுபம்

கஜத்தின் மேலமர்ந்து திக் விஜயம் செய்யும் காமாக்ஷி (Mohanam)

mohanam

கஜத்தின் மேலமர்ந்து திக் விஜயம் செய்யும் காமாக்ஷி ... என் அகத்துள்  அமர்ந்  தென்னை ஆட்சி செய்யும் மன சாக்ஷி

வெள்ளீஸ்வரனின் நாயகியே - தங்க மனத் தாயே - த்ரிபுர ஸுந்தரியே

தாமதியாதருளும் கோமதி நீயே, தன் நிகரில்லா காந்திமதி நீயே, ஆடித் தவசு செய் சங்கர நாரணியே, உன்னைப் பாடிப் பரவும் உள்ளம் நிறை பூரணியே

சுக்ரேஸ்வரியே சுப மங்களேஸ்வரி, ஸ்ரீ சக்ரேஸ்வரி, சரப மனோஹரி, கா பாலீஸ்வரி, கற்பக நாயகி, வா பாலீ என்னை வரதாயகி

சிவம் சுபம்

இறையன்பே மெய்யன்பு (Revati)

உ (ரேவதி)

இறையன்பே மெய்யன்பு
இறையருளே திருவருள்

இறைவனே நம் நற்றுணை,  இறை நிழலே நமக்கு நிலைத்த புகல்

இரை தேடுவதோடு இறையையும் தேடுவோம், இறை பக்தியே நம் சக்தி யாகும், இறை ஜெபமே அளிக்கும் நிலைத்த ஜெயமே, இறை பதமே அருளும் இறவா வரமே

சிவம் சுபம்

Sunday, October 22, 2017

கனக தாரை பொழியும்



கனக தாரை பொழியும் அன்னையைக் காணக் கண் கோடி போதுமோ

இல்லம் தோரும் ஒளிரும் மங்கையின்  எழிலை எடுத்து உரைக்க  முடியுமோ

மாலின் மனதைக் கோயிலாய்க் கொண்டவள், மாயை நீங்கிட அருளும் தேவியவள்,
அலையா மனமும் நிலைத்த ஞானமும் அருளும் வர லக்ஷ்மி
வருக வருகவே

Varalakshmi varuvaayamma

OM

Varalakshmi varuvaayammaa - Thiru Maalin Devi kadaik-kaN paarammaa .... Ammaa 

maNam veesum Malar soodi, manjaL kunguma thilaga-maNinthu mangalamae aruL Pankaya-chelvi-yae

MaNivaNNan maarbinil nilyaiyaagavae amarnthu niraivaana vaazhvaruLum  Nithya KalyaaNi, neethaan Ammaa engaL vaazhvin aathaaram, thaamatham seyyaamal dhayai koornth-aruL Thaayae

Sivam Subam

(As I only know that pallavi of this old cine classic of Sri Paapanaasam Sivan sir , I have just completed the rest of the song.  SIR should forgive me.)

வேத ரூபம் சந்த்ர சேகரம் (Siva Ranjani)



வேத ரூபம் சந்த்ர சேகரம்
ஆகம வடிவம் சந்தர சேகரம்
தர்மஸவரூபம் சந்த்ர சேகரம்
காமிதபலதம் சந்த்ர சேகரம்

நாத மயம் சந்த்ர சேகரம்
கீத மயம் சந்த்ர சேகரம்
ஸதோத்ர மயம் சந்த்ர சேகரம்
சிவமயம் சந்தர சேகரம்

அத்வைத சந்த்ர சேகரம்
த்வைதாத்வைத சேது ராமம்
ஸர்வ ஸம்மத ஆச்சார்யம்
ஸர்வ பூஜித பரமாச்சார்யம்

ஜெய சந்த்ர சேகரம்
ஹர சந்த்ர சேகரம்
ஹர சந்த்ர சேகரம் 
ஜெய சந்த்ர சேகரம் 

சிவம் சுபம்

Sankaraa Siva Sankaraa

OM

Sankaraa Siva Sankaraa
Chandrasekaraa, Sadhaa Sivaa, sathamani ninnae nammithi Easwaraa

Yekaambaresvaraa Thri-amba-keswaraa, Kaama dahanaa, Kaala Kaala, Kasi Viswesaa....

Lingeswara, Roopa Maheswara, Brahma VishNu saevitha Arunaachaleswaraa, Prathosha naayaka
Vrushabaarooda, prathyaksha Meenaakshi Soundaraa.....

Sivam Subam

நந்த(வ)னத்துறை நமசிவாயன் (Hindolam)

Hintholam

நந்த(வ)னத்துறை நமசிவாயன் - பவ பந்த விமோசன ஏகாம்பரன்

(அன்னை) காமாக்ஷி உடனுறை கருணால வாலன் - அருளாட்சி நடத்தும் அம்மையப்பன்

ப்ரதோஷ வலம் வந்திடுவான், (நம்) பிறவிப் பிணியை   வேரறுப்பான், ஷங்காபிஷேகத்தில் மனம் நெகிழ்வான், அன்பர் சங்கட சஞ்சலம் களைந்திடுவான்

தனது மூன்று குமாரருடன் தண்ணருள் பொழியும் நாராயணனை, நரசிங்கனை, பைரவ மாருதி ஸஹிதமாய், ஒரு குடை நிழலில் தொழுதிடவே, வழி சமைத்தே நம் கலி தீர்த்தான்

Sivam Subam

அரியும் அரனும் ஒன்று (Sahana)

Virutham in Sahana

Thaaz Sadaiyum... (Peyaalvaar Pasuram)

அரியும் அரனும் ஒன்று, இதை உணர்ந்தாலே மிக நன்று

இருவினை களைந்து க்ஷேமமுற, பிரிவினை, பேதமின்றி பக்தி செய்வோம்

ஆடி மகிழ்ந்தால் அரனாவான், அதன் பின் அயர்ந்து நம்மை  கணித்தால் அரியாவன். வேத நாயகன் அரனென்றால், கீதை நாயகன் அரியாவான்.

அரி ராமனாய் சிவ பூசை செய்வான், அரனாய் தாரக உபதேசம் செய்வான், லிங்கோத்பவன் அரனென்றால், ஸ்தம்போத்வன் அரியாவான்.

சங்கர ராமானுஜ மத்வரை சந்ததம் நாம் தொழு தெழுவோம், திருநீறணிந்து அஷ்டாக்ஷரமும்  திருமண் ஒளிர பஞ்சாக்ஷரமும் ஜெபித்தே நாமே இறை பதமடைவோம், இறையுள் நிலைப்போம்

சிவம் சுபம்

Hari Hara Bhajan

HARI HARA BHAJAN 

PADMANAABHA PAAHI PAAHI
PARAMAESA PAAHI PAAHI
NAARAAYANA PAAHI PAAHI
NAMASIVAAYA PAAHI PAAHI

ANANTHA SAYANA PAAHI PAAHI
AANANTHA THAANDDVA PAAHI PAAHI
VARADA RAAJA PAAHI PAAHI
THIAGA RAAJA PAAHI PAAHI

STHAMBOTHBAVA PAAHI PAAHI
LINGOTHBAVA PAAHI PAAHI
KAAMA JANAKA PAAHI PAAHI
KATHIR-KAAMA JANAKA PAAHI PAAHI

MAA-LOLA PAAHI PAAHI
MAATHRU-BOOTHESA PAAHI PAAHI
KRISHNAMURTHY PAAHI PAAHI
DAKSHINAAMURTHY PAAHI PAAHI

SAKTHI SIVA PAAHI PAAHI
SRI NIVAASA PAAHI PAAHI
SANKARA NAARANA PAAHI PAAHI
SATHYAM NEEYAE PAAHI PAAHI

(SATHYAMU NEEVAE PAAHI PAAHI)

SIVAM SUBAM

பிடரிகள் சிலிர்க்கும் சிம்ஹ முகம் (Ataana)




பிடரிகள் சிலிர்க்கும் சிம்ஹ முகம்,
சிவனை யொத்த சிவந்த முக்கண்கள், தூணைப் பிளந்து வெளிவரும்  இரு திருக் கரம்,  இன்னும் இரண்டு கரம் ஏந்தும் சங்கு சக்கரம்,  ஸ்வாதி ப்ரதோஷ கால ஸ்தம்போத்வனைக் காணக் கண் கோடி போதுமோ

சிவம் சுபம்

Sri Gayathri Bhajan (Shankaraa Bharanam)



ஸ்ரீ காயத்ரி பஜன்

வேத  மாதா காயத்ரி
மந்த்ர மாதா காயத்ரி
நாத மாதா காயத்ரி
ஸ்ரீ மாதா காயத்ரி

பஞ்ச முகேஸ்வரி காயத்ரி
பஞ்ச வர்ணேஸ்வரி காயத்ரி
பஞ்ச  பூதேஸ்வரி காயத்ரி
பஞ்ச க்ருத்யேஸ்வரி காயத்ரி

ஸந்த்யா தேவி காயத்ரி
சாவித்ரி தேவி காயத்ரி
ஸரஸ்வதி தேவி காயத்ரி
ஸர்வ ரூபிணி காயத்ரி

த்யான ப்ரியே காயத்ரி
ஜெப ப்ரியே காயத்ரி
அர்க்ய ப்ரியே காயத்ரி
பக்தி ப்ரியே காயத்ரி

புத்தி ப்ரஸாதினி காயத்ரி
ஞான ப்ரசாதினி காயத்ரி
சித்தி ப்ரஸாதினி காயத்ரி
முக்தி ப்ரஸாதினி காயத்ரி

சிவம் சுபம்

Raagam attempted SankaraabaraNam.

துளசி செய்த சௌபாக்யமே (Kedaaram)

கேதாரம் (?) 

துளசி செய்த சௌபாக்யமே, சுந்தரன் மேனியை வருடுதே

மல்லி முல்லை மனம் பொருமுதே, அல்லியும் தாமரையும் விம்முதே

சத்யபாமையின் செருக்கழித்து, ருக்மிணி தேவியின் மனம் கவர்ந்து, கோதா தேவிக்கு நிழல் அளித்து, கோவிந்தன்  தீர்த்தத்தில் நிறைந் தொளிரும்.....

   சிவம் சுபம்

ஆலடி சங்கரா போற்றி போற்றி



ஆலடி சங்கரா போற்றி போற்றி 
காலடி சங்கரா போற்றி போற்றி

காலடி சங்கரா போற்றி போற்றி
காமகோடி சங்கரா போற்றி போற்றி

காமகோடி சங்கரா போற்றி போற்றி
காமாக்ஷி சங்கரா போற்றி போற்றி

காமாக்ஷி சங்கரா போற்றி போற்றி
ஸ்ரீ சந்த்ர சேகர போற்றி போற்றி

உன்னை நம்பி வாழும் ஏழை ராகவேந்திரா, நான் உன் அருளை (Amtruthavarshini)

Sri Sri Sri Swamy's Brundaavanam in Ambattur - just now



உன்னை நம்பி வாழும் ஏழை ராகவேந்திரா, நான் உன் அருளை வேண்டி வாடும் பேதை ராகவேந்திரா

தவறு செய்தே வாழும் கசடன் நான்,  ராகவேந்திரா
தண்ணருள் பொழிந்து என்னைக் கா வா ராகவேந்திரா

(என் மன)சஞ்சலமதைப் போக்கிடு ராகவேந்திரா
(திட) பக்தி செய்யும் மார்க்கம் காட்டு ராகவேந்திரா, (அன்று)
ப்ரஹ்லாதனாய் நாரணன் மடி அமர்ந்த பாலனே, இன்று ப்ருந்தாவனம் அமர்ந்து எம்மை கரை சேர்க்கும் தேவனே

விழி மூடித் தவத்தில் காமாக்ஷி,



விழி மூடித் தவத்தில் காமாக்ஷி,
விழி மலர்ந்தால் கயற்கண்ணி மீனாக்ஷி,
இத் தரணியெங்கும் அருள் பொழி விசால ஆட்சி (விசாலாக்ஷி).
கரம் அசைத்தால் கனக தாரை பொழி கமலாக்ஷி
திருவாய் மலர்ந்தால் ஞான ஸரஸ்வதி,
திரு உளமே காமகோடி பீடம்,
நின்றால் நமசிவாயர்,
அமர்ந்தால் நான்முகர்,
கிடந்தால் அரங்கநாதர்,
நடந்தால் நடமாடும் தெய்வம்,  அய்யன்
திருவடி நிழலே திரு வைகுண்ட  கைலாய கௌரீ லோகம், அத் திரு வுருவே
ஸ்ரீ சந்த்ரசேகர பரமாச்சார்ய பரப்ரஹ்மம்.

சிவம் சுபம்

உ BHAJAN- Thilang Manthraalaya Raagavendraa

உ BHAJAN-  Thilang

Manthraalaya
Raagavendraa
Mahaneeya
Raagavendraa

Brunthaaavana
Raagavendraa - (para)
Brahma swaroopa
Raagavendraa

Thungaa dheera
Raagavendraa
Duritha NivaaraNa
Raagavendraa

VeeNa vinotha
Raagavendraa
Dheena SaraNya
Raagavendraa

Buvanagiri
Raagavendraa-(thri)
Bhuvana vandhya
Raagavendraa

Madhva thilaka
Raagavendraa
MangaLa mooruthi
Raagavendraa 

Prahlaatha
Raagavendraa
Pranamaamyham
Sadhaa

Sivam Subam
Sundaram
Thiagarajan

Devagi sukumaaraa raa raa.. (Sri Krishna Leelamrutham)

OM

Principal characters associated with
Sri Krishna

Devagi sukumaaraa raa raa
Yasodaa nandana raa raa
Vasudeva sudhaa raa raa
Nanda Kishoraa raa raa

தேவகி ஸுகுமார ராரா
யசோத நந்தன ராரா
வசுதேவ சுதா ரா ரா
நந்த கிஷோரா ராரா

Balaraamanuja raa raa
Gopika lola raa raa
Raadha maanasa raa raa
Sudhaamaa mithra raa raa

பலராமானுஜ ராரா
கோபிகா லோலா ராரா
ராதா மானஸ ராரா
ஸுதாம மித்ரா ராரா

Subadaraa sothara raa raa
Sathya baama priya raa raa
Rukmini hrudayaa raa raa
Draupadi saevitha raa raa

சுபத்ரா சோதர ராரா
சத்யபாமா ப்ரிய ராரா
ருக்மிணி ஹ்ருதய ராரா
த்ரௌபதி சேவித ராரா

Kamsa vidhaaraa raa raa
Sisubaala sirachedaaga raa raa
Duriyodhana kulaanthaga raa raa
Paandava dhootha raa raa

கம்ஸ விதார ராரா
சிசுபால சிரச்சேதக ராரா
துர்யோதன குலாந்தக ராரா
பாண்டவ தூத ராரா

Abhimanyu praaNa raa raa
Bheeshma architha raa raa
KarNa muktheesa raa raa
Kunthee varadhaa  raa raa

அபிமன்யு ப்ராண ராரா
பீஷ்மார்ச்சித ராரா
கர்ண முக்தீச ராரா
குந்தீ வரத ராரா

Vithura vanditha raa raa
Akroora priya raa raa
Paartha saarathi raa raa
Siva baktha sironmani raa raa

விதுர வந்தித ராரா
அக்ரூர ப்ரிய ராரா
பார்த்த ஸாரதீ ராரா
சிவ பக்த சிரோன்மணி ராரா

Sankara-advaitha raa raa
Madhva Dvaitha raa raa
Raamaanuja Visishtaa raa raa
Udhva Geethaesa raa raa

சங்கராத்வைத ராரா
மத்வ த்வைத ராரா
ராமானுஜ விசிஷ்டா ராரா
உத்வ கீதேசா ராரா

Meraa maanasa raa raa
Jeyadevaesa raa raa
Bhattadri Naarayana raa raa
Puranthara Vittala raa raa

மீரா மானஸ ராரா
ஜெயதேவேச ராரா
பட்டத்ரீ நாராயண ராரா
புரந்தர விடல ராரா

Vyaasa roopaa raa ra
Bhagavatha priya raa raa
Bhakthvathsala raa raa
Aanjaneya Raama raa raa

வ்யாச ரூப ராரா
பாகவத ப்ரிய ராரா
பக்தவத்ஸல ராரா
ஆஞ்சநேய ராம ராரா

Alli-kaeneesa raa raa
Guruvaadha pureesa raa raa
Upidipi Krishna raa raa
Thulasi booshaNa raa raa

அல்லிக்கேணீச ராரா
குருவாதபுரீச ராரா
உடுப்பீ  க்ருஷ்ண ராரா
துளசி பூஷண ராரா

Vaikunta vaasaa raa raa
Parama-pathaesaa raa raa
Paathamu leeraa raa raa - nee
Paathamu leeraa raa raa

வைகுண்ட வாசா ராரா
பரம பதேசா ராரா
பாதமுலீரா ராரா - நீ
பாதமுலீரா ராரா

Nannaelukoraa raa raa
நன்னேலுகோரா ராரா

Sivam Subam
Sundaram Thiagarajan

நள்ளிரவில் தோன்றிய வெள்ளி (Begadaa)

உ (பேகடா)

நள்ளிரவில் தோன்றிய வெள்ளி,
கருமைக்கு பெருமை சேர்த்த வைரம்

ரோகிணியில் உதித்த அசுர காலன்
அஷ்டமியில் ஜனித்த சிஷ்ட பரி பாலன்

கொடும் சிறையளித்த தரும காவலன்,
ஆநிறை மேய்த்த வேணு கோபாலன்
உரி வெண்ணை திருடிய க்ருஷ்ண தாமோதரன்
கிரி ஏந்தி கோகுலம் காத்த யாதவன்

பாதம் நோக தூது நடந்தவன், பக்தனுக்காய் தேரோட்டியானவன்,
ஐந்தாம் வேதம் உறைத்த ஆச்சார்யன், ஆயுதம் தொடாது அதர்ம மழித்தவன்

பிதாமகர் ஆயிரம் சொல்மாலை பூண்டவன், சிவனாரின் ஆயிரம் தருமனுக் குரைத்தவன், ஆலிலை மிதந்து குருவாயூர் சேர்ந்தவன், பட்டத்ரியின் பாமாலை சூடிய பரந்தாமன்

சிவம் சுபம் 

சிவ கண்மணியே வா வா வா (revati)

உ (ரேவதி)

சிவ கண்மணியே வா வா வா - என் சிந்தை கவர்ந்த அருள் மணியே வா

சிவை கர வேலுமணியே வா வா
சிவன் தோளமர்ந்த குரு குஹ மணியே வா

ஆனைமுகனின் அன்புமணியே வா, அனந்தசயனின் மருக மணியே வா,
தேவியர் இருவரின் காதல் மணியே வா,
தேவ சேனாபதியாம்  காவல் மணியே வா

ஒளவையின் அருந்தமிழ் மணியே வா வா, ஆலவாய் யுவராஜ மணியே வா,
ஆதிசங்கரின் புஜங்க நாக மணியே வா,
கீர்த்தி நிறை கார்த்திகேய மணியே வா

தருமபுரமுத்துக் குமரமணியே வா வா
கரும வினை போக்கும் (ஞானஸ்) கந்த மணியே வா
பக்த பரி பால சுப்ர மணியே வா
சக்தி சிவ சரவண மணியே வா வா

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

காவடி எடுத்து வந்தேன் கந்த பெருமானே

OM

(பஷ்ப)  காவடி எடுத்து வந்தேன் கந்த பெருமானே - உன் காலடி என் சிரம் வைத்தாள்  (என்) சொந்த பெருமானே

பால் குடம் தாங்கி வந்தேன் பன்னிரு கையனே, என் பால் பரிவு காட்டிடு பன்னிரு கண்ணனே

சென்னிமலை ஏறி வந்தேன் பால சுப்ரமணியனே, செம்மை வழி எனை நடத்து சிவ சுப்ரமணியனே,   கன்னித் தமிழ் வளர்த்த பழனி மலை ஆண்டவனே, பண்ணும் பூசை பலனளிக்க பரிந்தருள் ஈன்றவனே,

குன்றமதில் கோலம் கண்டேன்,  (என்) குறைகளை களைந்துவிடு
தணிகை மலை ஏறிவந்தேன் தாபமதை தீர்த்துவிடு, செந்தூரில் குளித்து வந்தேன் பந்தமதை போக்கிவிடு, ஸ்வாமி மலை ஏறி வந்தேன் ஞானமதை ஊட்டிவிடு,

பழமுதிர் சோலையிலே ஆடி விளையாடிடுவாய், என் மனமெனும் கோயிலிலே மகிழ்ந்தே அமர்ந்திடுவாய், கரண சுத்தி செய்தே உன் கழலிணை தந்திடுவாய், மரணமில்லா தென்னை என்றும் வாழவைப்பாய்

திருப்புகழ் பாடி உன்னை தினமும் தொழுதிடுவேன், கந்தா உன் அலங்காரம் (என்) அகங்காரம்  போக்கிவிடும், அருட்பா அமுதை நான் அனுதினம் படைத்திடுவேன்,
உன் விபூதி அணிந்தே நான் அனுபூதி பெற்றுய்வேன்

சிவம் சுபம் 

நந்தவனம் உறை பாலன்

நந்தவனம் உறை பாலன், நல்ல மனம் உறை வேலன் 

முருகன் என்றழைப்பார் அவனை, முத்துக்  குமர னென்பார் அவ்வழகனை

அய்யனின் ஐந்து அருள் முகமும், அன்னையின் அழகுத் திருமுகமும் இணைந்து வந்த கந்தன், ஈறடி பணிவோரின் சொந்தன், வள்ளிக்கு வாழ்வளித்த வள்ளல், தேவசேனையின் கரம் பிடித்த செம்மல்

அய்யனைப் போலே அபிடேகம் கொள்வான்,
அம்மையைப் போலே செம்பட்டாடை அணிவான், மாமனைப் போலே அலங்காரம் ஏற்பான், (அம்) மூவருக்கும் முன்னே அருள் மழை பொழிவான்.

Gaana Saraswathi Gnana Saraswathi Naadha Saraswathi Laya Saraswathi (Mohanam)

உ (mohanam)

Gaana Saraswathi
Gnana Saraswathi
Naadha Saraswathi
Laya Saraswathi

Dhaana Saraswathi
Dharma Saraswathi
Bhakthi  Saraswathi
Bavya Saraswathi 

Madura Saraswathi
MangaLa Saraswsthi
Guru Saraswathi
Krupaa Saraswathi 

Saayi Saraswathi
Sankara Saraswathi
Siva Saraswathi
Suba Saraswathi

Sivam Subam

august 15th 2017 Desiya Naama Vali

Desa Bhakthi BhajanaavaLi

OM

PuNya  Bhaaratham
GaNya Bhaaratham
Puraathana Bhaaratham
Navayuga  Bhaaratham

Veda Bharatham
Aagama Bhaaratham
Saasthra Bhaaratham
PuraaNa Bhaaratham

Karma Bhaaratham
Dharma Bhaaratham
Bhakthi Bhaaratham
Gnana Bhaaratham

Akanda Bhaaratham
Iswarya Bhaaratham
Thiaga Bhaaratham
Seela Bhaaratham

Samaaja Bhaaratham
Samashti Bhaaratham
Sakthi Bhaaratham 
Shaanthi Bhaaratham

Maathru Bhaaratham
Deva Bhaaratham
Deiva Bhaaratham
Divya Bhaaratham

Jeya Jeya Bhaaratham
Hara Hara Bhaaratham
Vandhe Bhaaratham
Vandhe Maatharam

Sivam Subam

Super Vinaayaakaa (Brindaavana Saaranga)

OM

Super Vinaayaakaa
Sundara Vinaayakaa
Deiva Vinaayaakaa
Dancing Vinaayakaa

Friendly Vinaayaakaa
Prema Vinaayaakaa
Kamala Vinaayakaa
KaaruNya Vinaayakaa

Clay Vinaayakaa
Turmeric Vinaayakaa
Dhaanya Vinaayakaa
Golden Vinaayakaa

Humble Vinaayakaa Simple Vinaayakaa
Sakthi Vinaayakaa
Chathurthi Vinaayakaa

Sivam Subam

Kaamakoti karuNaa murthy,



Kaamakoti karuNaa murthy,
Kaamaakshi samaana keerthi..... Sri

Aachaarya krupaanidhi, Paramaachaarya Pasupathi .... Sri

Dharma kaingkarya nidhi,
Swadharma paalana pathi,
Sadhaa NaarayaNa smruthi,
Sarva MangaLa prasaadhaga  pathi.... Sri

வீணா நாத விநோதர்



வீணா நாத விநோதர் - அன்பர் வேதனை களையும் மஹனீயர்

ப்ருந்தாவன ராயர்,  முனி ப்ருந்தமெல்லாம் பணி குரு ராயர்

கங்கையிலும் புனிதமாய துங்கைக் கரை வாசர், செங்கையில் மாலை கமண்டலம் ஏந்தி அருள் பொழி அற்புத நேசர்

(நம்) மனமெனும் மந்த்ரா லயத்தில் அய்யனை மகிழ்வோ டமர்த்தி துதி செய்வோம், அறம் பொருள் இன்பம் வீடும் பெற்று இறவாதென்றும் வாழ்வோம் 

சிவம் சுபம்

சடைமறைத்து, கதிர்மகுடம் தரித்து (Paranjyothi Munivar)

சடைமறைத்து, கதிர்மகுடம் தரித்து, 
நறுங் கொன்றையந்தார் தணந்து,
வேப்பந் தொடைமுடித்து,
விடநாகக்கலன் அகற்றி,
மாணிக்க சுடர்பூணேந்தி,
விடைநிறுத்தி கயலெடுத்து வழுதி மருமகனாகி மீன நோக்கின் மடவாலை மணந்து, உலகம் முழுதாண்ட சுந்தரனை வணக்கம் செய்வாம்.

செழியர் பிரான் திருமகளாய் (Paranjyothi Munivar) - Mohanam

செழியர் பிரான் திருமகளாய், கலை பயின்று முடி புனைந்து செங்கோலோச்சி, முழுதுலகும் செயம் கொண்டு, திறைகொண்டுந்தி கண முனைப்போர் சாய்த்து, தொழு கணவற் கணிமண மல்லிகை சூட்டி, தன் மகுடம் சூட்டி, செல்வதழைவுறு  தன்னரசளித்த பெண்ணரசி அடிக்கமலம் தலை மேல்  வைப்பாம்

ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்.

ஸ்ரீ கணேஷ் நாமாவளி - SRI GANESH NAAMAVALI



ஸ்ரீ கணேஷ் நாமாவளி - SRI GANESH NAAMAVALI

மோகன கல்யாணி  - MOHANA KALYAANI

சித்தி கணேசம், புத்தி கணேசம் -  SIDHDHI GANESAM - BUDHDHI GNESAM
சக்தி கணேசம்,  சாந்த  கணேசம்  - SAKTHI GANESAM - SAANTHA  GANESAM
மோன கணேசம், ஞான கணேசம் - MONA GANESAM - GNANA GANESAM
 மோஹன கணேசம் - மோதஹ  கணேசம்  MOHANA GANESAM -  MOTHAHA GANESAM

ப்ரணவ கணேசம் ப்ராண கணேசம் - PRANAVA GANESAM - PRAANA GANESAM
பால  கணேசம்  தந்த கணேசம் - BAALA  GANESAM - THANTHA  GANESAM
அமித  கணேசம் - அவிக்ன  கணேசம் -  AMITHA  GANESAM - A-VIGNA  GANESAM
சுமுக கணேசம் சுலப கணேசம் - SUMUKA GANESAM - SULABA GANESAM

ஹரித்ரா கணேசம் ஹரிஹர  கணேசம் - HARIDHRAA GANESAM - HARIHARA GANESAM
வல்லப கணேசம் வரத  கணேசம் - VALLABA GANESAM - VARATHA GANESAM
வித்யா கணேசம்  விமல கணேசம் - VIDHYAA GANESAM - VIMALA GANESAM
நித்ய  கணேசம் ந்ருத்ய கணேசம் - NITHYA GANESAM - NRUTHYA GANESAM

ஸ்தம்ப கணேசம் - வ்ருக்ஷ கணேசம் - STHAMBA GANESAM -VRUKSHA GANESAM
ப்ரிதிவி கணேசம் - ப்ரத்யக்ஷ கணேசம் - PRITHIVI GANESAM -  PRATHYAKSHA GANESAM
ரக்த கணேசம் - ருத்ர கணேசம் - RAKTHA GANESAM - RUDRA GANESAM
சக்ர கணேசம் - சதுர்த்தி கணேசம் - CHAKRA GANESAM -  CHATHURTHI GANESAM

ஆத்ம கணேசம் - ஆலய கணேசம் - AATHAMA  GANESAM - AALAYA  GANESAM
ஆதி கணேசம் - ஜோதி கணேசம் -  AATHI GANESAM - JOTHI GANESAM
தர்ம கணேசம் - தன்வந்தரி கணேசம் - DHARMA GANESAM - DHANVANTHRI GANESAM
தோடு கணேசம் - நீட கணேசம் - THODU GANESAM - NEEDA GANESAM

வேத கணேசம் ஸ்வேத கணேசம் - VEDA GANESAM - SWETHA GANESAM
வீர கணேசம் வைத்ய கணேசம் - VEERA GANESAM - VAITHYA GANESAM
விகட கணேசம் விஜய கணேசம் - VIKATA GANESAM - VIJAYA GANESAM
மஹா கணேசம் மங்கள கணேசம் - MAHAA GANESAM - MANGALA GANESAM

SIVAM SUBAM
THIAGARAJAN SUNDARAM


தோடு கணேசம் -  துணை கணேசம்  (Thodu - is a telugu word) He is our guide/friend.
நீட கணேசம் - நிழல் கணேசம்  (Needa - is a telugu word)  He is our refuge.
அமித (amitha) கணேசம் - இணையில்லா கணேசம்  (Incomparable Lord)
அவிக்ன (avigna) கணேசம் -  தடைகளைத் தகர்ப்பவர் - Remover of all obstacles -
விகட (vikata) கணேசம் - huge /  gigantic

வரவேண்டும் வர வேண்டும் (Revati)

உ (ரேவதி)

வரவேண்டும் வர வேண்டும் முதல்வா-  அருளைத் தர வேண்டும் தர வேண்டும் தலைவா

அன்னை சக்தி அளித்த ஆனைமுகா - தன்னையே தந்திடும் தந்த முகா

அன்னையும் பிதாவுமே உலகமென்று உறுதிபட உறைத்த உத்தமனே,
கன்றினைக் காக்கும் ஆ போலே என்றும் எமைக் காக்கும் இறைவனே, களி மண்ணிற்கும் பெருமை சேர் கஜ முகனே,  விழி இமைக்கு முன் அருள் பொழியும் ஆண்டவனே

சிவம் சுபம்

அ ... அன்னையும் பிதாவும் உலகம் என்றவன்



அன்னையும் பிதாவும் உலகம் என்றவன்

ஆனந்தமாக அவரை வலம் வந்தவன்

இனிய கனி வென்ற இபமா முகத்தன்.

ஈடிணையில்லா ஈஸ்வரி நநதனன்

உயர் பாரதத்தை எழுதிய தந்தன்.

ஊர் உலகெங்கும் கோயில் கொண்டவன்

எளிமையின் இலக்கணம், எளிதில் அருள்பவன்.

ஏற்றமளிக்கும் ஞால/ஞான முதல்வன்

ஐயமிலாதருளும் ஐங்கர ஐயன்

ஒன்றோர் உள்ளத் தொளிரும் ஜோதியன்

ஓங்கார ப்ரணவ வடிவத் திறைவன்

ஔவை அகவலில் அகம் நெகிழ்பவன், கைலாயம் அருள்பவன்.

சிவம் சுபம்

முக்குறுணிப் பிள்ளையாரு, முத்து மாரி பிள்ளையவரு



முக்குறுணிப் பிள்ளையாரு, முத்து மாரி பிள்ளையவரு

தெப்பக்குளம் தோண்டும் போது வண்டியூரில் தோன்றினாரு

மீனாக்ஷி கோயிலின் முகப்பினில் அமர்ந்தாரு,  அருளாட்சி செய்திடும் அன்னையின் காவலரு,
பதினெட்டுப் படி மாவு கொழுக்கட்டை ஏற்பாரு, கதி யென்று பதம் பணிந்தால் சரி சரி யென்று அருள்வாரு

திருமலை நாயக்கரு ப்ரதிஷ்டை செய்தாரு,
உருவத்தில் பெருத்தவரு, உள்ளத்திலே  பிள்ளை யவரு, சதுர்த்தியின் நாயகரு, சங்கடம் களைவாரு.

சிவம் சுபம்

தந்த முகனின் தாள் பணிவோம் (Sindhu Bhairavi)



Viruttham - Vaakundaam Nalla Manam Undaam

தந்த முகனின் தாள் பணிவோம், தடைகளெல்லாம் தகர்த்து வெற்றி பெறுவோம்

வினயமுடன் பக்தி செய்தே விக்னேஸ்வரன் அருள் பெறுவோம்,  கனவிலும் கணபதியை  மறவாது   களித்திருப்போம்

அன்னை தந்தையை மதிப்போரே ஆனைமுகன் அருள் பெறுவார்,
அகிலமும் சுற்றி வந்தே அனைத்து நலமும் பெற்றுய்வார்

அய்யன் அவன் எளிமையை நம் வாழ்விலே கடைப்பிடிப்போம், மெய்யன் அவன் துணை கொண்டு மேன்மேலும் உயர்ந்திடுவோம்

சிவம் சுபம்

யாரும் இல்லை என்று புலம்பாதே



யாரும் இல்லை என்று புலம்பாதே, 
ஆண்டவன் இருக்கிறான் மனம் வெம்பாதே

எல்லாம் அவன் செயல், யாதும் அவன்  அருள்.... மறவாதே

ஐந்தெழுத்தை ஜெபித்திருப்போம,
எட்டெழுத்தை எண்ணி இருப்போம் (நம்)
தலையெழுத்தை அவன் மாற்றிடுவான்,
தண்ணருள் பொழிந்து காத்திடுவான்

ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய்து,
மார்க்கண்டேயனைப் போல் மலர் தாள் பிடிப்போம்,
இறைவன் இரங்கி வந்திடுவான்,
இன்னருள் பொழிந்து ரக்ஷித்திடுவான்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

ஆனைமுகன் நன்கு துவக்கி வைப்பான் (Sarva Deva Stuthi)



ஆனைமுகன் நன்கு துவக்கி வைப்பான் - ஆஞ்சநேயன் அற்புதமாய் முடித்து வைப்பான்

சக்தி தவம் காக்க அவதரித்தான் ஆனைமுகன்-  சீதை தவம் முடிக்க வந்துதித்தான் ஆஞ்சனேயன்

அம்மையப்பனே உலகம் என்றான் ஆனைமுகன், சீதாராமனே  அனைத்தும் என்றான் ஆஞ்சனேயன்

மாமனின் கதை வரைந்தான் ஆனைமுகன், ராமனைக் காக்க கதை எடுத்தான் ஆஞ்சநேயன்

மோதஹ  ப்ரியன் ஆனைமுகன், வடை மாலை அழகன் ஆஞ்சநேயன்

ஈஸ்வரி ஸுதன் ஆனைமுகன்
ஈஸ்வராம்ஸன் ஆஞ்சனேயன்

ஆனைமுகனை வணங்க தடை தகறும், ஆஞ்சனேயனை வணங்க வெற்றி மலரும்

ஜெய் ஸ்ரீ ராம்
சிவம் சுபம்

சம்பந்தர் தேவாரம் (Mohanam) - உற்றுமை சேர்வது மெய்யினையே

சம்பந்தர்  தேவாரம்    -மோஹன ராகம்

உற்றுமை சேர்வது மெய்யினையே.......
உணர்வது நின்னருள் மெய்யினையே....
கற்றவர் காய்வது காமனையே.....
கனல் விழி காய்வதும் காமனையே....

அற்றம் மறைப்பது உன் பணியே
அமரர்கள் செய்வதும் உன் பணியே
பெற்று உகந்தது கந்தனையே
பிரமபுரம் தனை உகந்தனையே.

சிவம் சுபம்

ராமசாமி க்ருஷ்ணசாமி (With Alwaar Paasuram Viruttham - Aadi Aadi )


Viruttham
Adi Adi agam karaindhu isai pAdip pAdik kaNNIr malgi engum nAdi nAdi narasingA enRu vAdi vAdum iv vAL nudhalE


ராமசாமி க்ருஷ்ணசாமி என்று பல சாமி இருந்தாலும் நம்ம நரசிம்ம சாமிக்கு ஈடு இணை உண்டோ?

ஒரு நாள் ஒரு நாழிகையே வந்தான், தூண் புகுந்து நின்றான், தூண் பிளந்து வந்தான், துஷ்டனை வதைத்தான், சிஷ்டனைக் காத்தான்

அஹோபிலத்தில் அவன் அவதாரம், அமைதியாய் கடிகையில் யோகத் தவம்,  ஆழ்வார்கள் புனைந்தனரே பாசுரம், அதைப் பாடி நாம் அடைவோமே பரமபதம்.

நல்லோர் வேண்டிட நந்தவனம் விரைந்தான், நம் தாயாரைத் தன் மடி வைத்து வந்தான், பக்த ஆஞ்ச நேயன் பக்கம் அமர்ந்தான், (நாம்) பதினாறும் பெற்று வாழ பரிந்தருள் புரிவான்.

சிவம் சுபம்.
சுந்தரம் த்யாகராஜன்

"நந்த(வ)ன நரசிம்மன்" (Mohanam)

"நந்த(வ)ன நரசிம்மன்"

மோஹனம்

தூணில் தோன்றிய நரசிம்மன்
தூயனைக் காத்த நரசிம்மன்
அஹோபிலத்துறை நரசிம்மன்
அன்பரைக் காக்கும் நரசிம்மன்

அன்னையை மடிவைத்த நரசிம்மன்
அழகிய சிங்கன் நரசிம்மன்
மந்திர ராஜன் நரசிம்மன்
மங்கள ரூபன் நரசிம்மன்

வநந்தவனத்துறை நரசிம்மன்
நம் லக்ஷ்மீ நரசிம்மன்
ஆஞ்சநேய ப்ரிய நரசிம்மன்
அஞ்சேல் என்றருளும் நரசிம்மன்

கவலைகள் தீர்க்கும் நரசிம்மன்
கடுகியருளும் நரசிம்மன்
ப்ரதோஷ காலத்தில் வலம் வருவோம்
பிறவிப் பிணியைக் களைந்திடுவோம்

துளசி மாலை சூட்டிடுவோம்
பாசுரங்கள் பாடிடுவோம்
பானகம் நீர்மோர் படைத்திடுவோம்
பதமலரை சூடிடுவோம்

ஸ்வாதித் திருமஞ்சனம் செய்திடுவோம்
ஸ்வாதீனமாக வாழ்ந்திடுவோம்.
சந்நிதி வலம் வந்திடுவோம்
சந்ததி தழைத்து சுகித்திருப்போம்

சிவம் சுபம்
ந்ருசிம்ஹம் நிர்பயம் 

இறைவனுக்கே சோதனையா (Kedaara Gowlai)

கேதாரகௌள

இறைவனுக்கே சோதனையா ? கடவுளுக்கே வேதனையா ?

மூவுலகாளும் சொக்கனுக்கே இன்னல்கள் செய்தது யாரைய்யா ?

காமனை எரித்து காலனை உதைத்த கோமானே,  நீர் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதென்ன பெம்மானே,   (திரு) மாலுக்கே சக்கரம் ஈந்தவனே நீ விஜயனிடம் வில்லடி பட்டதென்னே?

(பாண்டவர்க்காய்)தூது நடந்த கண்ணனின் துதி கொண்ட முக்கண்ணனே, நீர் சுந்தரர்க்காய் ஆரூர் வீதியிலே அலைந்த காரணம் தான் என்னே, முத்தமிழ் வளர்த்த இறையே உன் பாடலைக் கீரன் பழித்த தென்னே ? 

சிவம் சுபம்

ஈரடியால் மூவுலகை அளந்தவனம்மா (Hindolam)

ஹிந்தோளம்

ஈரடியால் மூவுலகை அளந்தவனம்மா ... வாமனனாய்  தோன்றிய வரதனமமா

முன்பு நரசிங்கனாய் வந்தவனம்மா, (சிறு) பாலன் குலம் காப்பேன் என்ற பரமனம்மா

பிரமனையே ஈன்ற பதுமனம்மா, பிராமண குலத்திலே தோன்றினா னம்மா, திருவோண நாயகனாம் திருமாலம்மா, திருப் பாதமதை  (மா) பலிக்கு ஈந்தவனம்மா

சிவம் சுபம்

முத்தனத்தாளே வா வா வா (Siva ranjani)

சிவரஞ்சனி

முத்தனத்தாளே வா வா வா
முத்தமிழ் தலைவியே வா வா வா

மலையத்வஜன் மகளே வா வா வா
காஞ்சன மரகதமே வா வா வா

வைகைக் கரையில் வாழ்பவளே வா
வானோரும் வணங்கும் தேவியே வா வா
நாளையெனாதருளும் நலமே வா
காளைமேல் அமர்வோன் காதலியே வா

பொற்றாமரைக் குளக் கரையினிலே,
பொற்கோபுரத்தின் நிழலிலே
நின்றாட்சி செய்யும் நித்தியமே,
நின்னருள் ஒன்றே சத்தியமே.

சிவம் சுபம்

சொக்கநாத வெண்பா + மீனாக்ஷி பாகனே (Shankarabharanam)

ShankaraabaraNam

எல்லாம் உனது பதம், எல்லாம் உனது செயல், எல்லாம் உனதருளே என்றிருந்தால், பொல்லாத மா துயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே சொக்கநாதா

--- ஸ்ரீ சொக்கநாத வெண்பா

புதன் தொழும் அற்புதனே, நின் பதம் தந்தாள் வா, சொக்க நாதனே

மீனாக்ஷி பாகனே, அருளாட்சி செய்வோனே, ஆலவாய் அழகனே, அருள் புரி அண்ணலே

குறும்புப் பாட்டெழுதி தருமியின் வறுமை நீக்கி, திருமுகப் பாசுரத்தால்  பத்திரர்க்கு புகழ் சேர்த்தாய்.  கல் யானைக்கும் கருணை புரி வள்ளலே, இக் கசடனைக் கடைத்தேற்ற  எண்ணுக அருட் புனலே.

சிவம் சுபம்

திருச்சுழி ரமணர் (On Sri Ramana Bhagavaan)

ஓம்

திருச்சுழி ரமணர்
தலைச்சுழி மாற்றுவார்
வேங்கட ரமணர்
நற்றுணை ஆவார்

ஆலவாய் ரமணர்
பவபயம் ஓட்டுவார்
அண்ணாமலை ரமணர்
அருள்நெறி ஊட்டுவார்

த்யான ரமணர்
ஞானம் கூட்டுவார்
பகவன் ரமணர்
ஜோதியாய் ஒளிர்வார்

சிவம் சுபம்

ராஜமாதங்கியின் குழந்தையம்மா (Maandu)

மாண்டு

ராஜமாதங்கியின் குழந்தையம்மா
ராஜ பூஜிதக் குழந்தையம்மா
அன்னை மீனாளின் குழந்தையம்மா
தன்னையே தந்திடும் குழந்தையம்மா

வயிற்றுப் பசி போக்கும் குழந்தையம்மா
ஞானப் பசி தூண்டும் குழந்தையம்மா
மாண்டோரை மீட்கும் குழந்தையம்மா
மரணத்தை வென்றக் குழந்தையம்மா

சமயநல்லூ ரளித்த குழந்தையம்மா
சமய மறிந்தருளும்
குழந்தையம்மா
மதுரை யம்பதியின் குழந்தையம்மா - அதன்
மகிமை சொல்லி முடியுமா

சிவம் சுபம்

அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே

ஓம்

அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே, அங்கயற்கண்ணி அன்னையே.... என்னை

(என்னை) படைத்தவளே கண் பார்த்தருள்வாயே,  நான் பிழைக்கும் மார்க்கமும் காட்டிடுவாயே

(நான்) செய்யும் முயற்சி எல்லாம் உனதே (அம்மா), அதனால் விளையும் பயன் யாவும் நினதே,  வேதனை யானாலும் சோதனை யானாலும் அதனைப்  போக்கும் கடமை நினதே

எண்ணிலா நாமம் கொண்டவளே, அளப்பறியாக் கருணை வாரிதியே, உன் விழி இமைத்தால் எனக்கு நல் வாழ்வு, அதனால் ஓங்கும் உன் நற்புகழே

சிவம் சுபம்

Kapata vaesha dhaari (with Vallalar Viruttham)

Arutpaa - viruththam

தடுத்தலறிய பயம் கவலை எல்லாம் தவிர்த்தே என் கருத்துள்ளே அடுத்த கொடியே, அருளமுதம் அளித்து என் தன்னை மெய் யருட்கரத்தால் எடுத்த கொடியே,  சித்தி யெலாம் இந்தா மகனே என்று எனக்கே கொடுத்த கொடியே, ஆனந்தக் கொடியே அடியேற்கும் அருளுகவே

வள்ளல் பெருமான்

Kapata vaesha dhaari.... naan Kapata vaesha dhaari....neeyo abarimitha KaruNaa saagari 

Pizhai nirainthathae en vaazhvu.... athil guNam kaaNbathae  un maaNbu

Naan enathendra agam neenga vaendum, en agam unathu koyilaaga vaendum, (naan) sanmaarga neriyil vaazhnthida vaendum, (Paraa) Sakthi un paathamathai saernthida vaendum

ennaal aavathu ondruumillai
unnaal aagaathathu yaethumillai,
nanneriyil ennai vaazha vaippaai, nargathi thanthu ennai aatkond-aruLvaai

Sivam Subam

உருவாய்க் காணும் ஜீவனிடம்



உருவாய்க் காணும் ஜீவனிடம் அன்பு செய்யா மனத்தினால் அருவாய் எங்கும் நிறை சிவனைக் காணுதல் சாத்தியம் ஆகுமோ

பசியால் துடிக்கும் ஏழைக்கு பிடி சோறு உண்ண அளிக்காமல் சிவனுக்கு படையல் பலன் தருமோ

பிணியால் அல்லலுறும் பேதைக்கு கிழிந்த கந்தையும் ஈயா மனம் கொண்டோர் சூட்டும்  கவசம் ஈசன் ஏற்பாரோ, கருணை தான் செய்வாரோ

சக உயிர்களிடம் இறைவனைக் கண்டால்
இறைவன் நம்முள் ஒளிர்வானே, (நம்)   இதயமே கோயில் ஆகிடுமே

சிவம் சுபம்

அண்ணனும் தங்கையும் அவதரித்தார் (Maandu)

மாண்டு

அண்ணனும் தங்கையும் அவதரித்தார், அகிலம் உய்ய அவதரித்தார்

மாயனை மறைக்க மாயை வந்தாள், துஷ்டரை மாய்க்க மாயன் வந்தான்

தேவகி வயிற்றில் .அண்ணன் உதித்தான், யசோதை மகளாய் தங்கை ஜெனித்தாள், அஷ்டமியில் தோன்றி அண்ணனும் தங்கையும் (மூ) உலகோர் துன்பம் துடைத்தனரே

ஜெய ஜெய துர்கா தேவி, ஜெய ஜெய க்ருஷ்ண ஸ்வாமி!

சிவம் சுபம்

Kaveri thaaikku Neeraajanam (Kurinji)

உ (Kurinji)

Kaveri thaaikku Neeraajanam
KaruNaa saagarikku
Neeraajanam

Agaththiar MahaLukku
Neeraajanam
AlaimagaL Sotharikku
Neeraajanam

Thalai Kaaverikku Neeraajanam
Tamizh Kaaverikku
Neeraajanam

Vatraatha Ootrukku
Neeraajanam
Vaazhv-aLikkum Devikku
Neeraajanam

Vaetrumai IllaLukku Neeraajanam
Otrumai vaLarppaaLukku
Neeraajanam

Saiva-VaiNava-thaaLukku
Neeraajanam
Sarva MangaLa-thaaLukku Neeraajanam

Neeraajanam  Neraajanam
Neeraajanam Neraajanam...

Sivam Subam

Slokam on MS Amma (Mohanam)



அன்னையே,
ஆரமுதே,
இசையே, இரக்கமே,
ஈகையே,
உண்மையே, உழைப்பே,
உபாசனையே, உயர்வே,
ஊக்கமே
எழிலே, எளிமையே,
ஏற்றமே,
ஐயமே இல்லாத பக்தியே,
ஒப்பிலாமையே,
ஓம்காரமே,
ஔதார்யமே

அருள்வாய் "சுபமே சிவமே".

சுபமே சிவம், சிவமே சுபம்.
சிவம் சிவம் சிவம்....
சுபம் சுபம் சுபமே

ஈவதெற்கென்றே இசை மழை (On MS Amma)

ஈவதெற்கென்றே இசை மழை பொழிந்த ஈடிணை யில்லா தெய்வப் பிறவி.....

மீண்டும் நம்மிடை உருக் கொண்டு வந்த மீரா தேவியாம் சுப லெக்ஷ்மி

தனக்கென வாழா தனிப் பெருமாட்டி, குணக் கடலாம் எழில் சீமாட்டி, சதாசிவனின் கரம் பிடித்து சந்திர சேகரர் பதம் பணிந்து  நாத மழை பொழிந்து நானிலம் சிறக்க

இசையால் இறை பணி செய்து நெகிழ்ந்து,
இல்லறத் துறவியாய் 
எளிமையாய் வாழ்ந்து,
கண்டங்களை கண்டத்தால் இணைத்த சங்கீத  ஸரஸ்வதியே நின் தாள் சரணம் அம்மா!

சிவம் சுபம்

அன்பெனும் பிடியுள் (Mohanam)

மோஹனம்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே -
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும்  வலைக்குட்படு பரம்பொருளே -
 அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே -
அன்பெனும் உயிர் ஒளிர்  அறிவே
அன்பெனும் அணுவுள்  அமைந்த பேரொளியே -
அன்புருவாம் பர சிவமே.

சிவம் சுபம்

Bhogam Suka Bhogam Siva Bhogam Adhu Nithyam...

விருத்தம் / பாடல்
வள்ளல் பெருமான் அருளிய அருட்பா மலர்கள்

நீ என் அப்பன் அல்லவா,
நினக்கு இன்னம் சொல்லவா,
தாயின் மிக்க நல்லவா,
ஸர்வ சித்தி வல்லவா,
புத்தம் தரும் போதா,
வித்தம் தரும் தா தா,
நித்தம் தரும் பாதா,
சித்தம் திரும் பாதா.

போகம் சுக போகம் சிவ போகம் அது நித்யம்,
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்யம்,
நலமங்கலம் உறும் அம்பல நடனம் அது நடனம்,
பல நன்கருள் சிவ சங்கர படனம் அது படனம்.

சிவம் சுபம்

மதுரை மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ்


அன்னையை வரவேற்போம் !

இன்றைய தெய்வத் தமிழ் மலர் - 4

மதுரை மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ் - 

பெருந் தேனிறைக்கும் நறை கூந்தற் பிடியே வருக
முழு ஞான பெருக்கே வருக
பிறை மௌலிப் பெம்மான் முக்கட் சுடர்க்கிடு
நல் விருந்தே வருக

மும்முதற்க்கும் வித்தே வருக
வித்தின்றி விளைந்த பரமானந்த்தின்
விளைவே வருக

பழ மறையின் குருந்தே வருக
அருள் பழுத்த கொம்பே வருக

திருக்கடைக்கண் கொழித்த கருணைப்
பெரு வெள்ளம் குடைவார் பிறவிப்
பெரும் பிணிக்கோர் மருந்தே வருக

பசுங் குதலை மழலைக் கிளியே வருகவே
மலையத்துவசன் பெற்ற பெரு வாழ்வே
வருக வருகவே

- ஸ்ரீ குமரகுருபரர்

சிவம் சுபம்

மீனாட்சி உன்னை பாத்து



மீனாட்சி உன்னை பாத்து எத்தனை நாளாச்சு, பாக்காம கண்ணு ரெண்டும் பூத்துத்  தானே போச்சு...
மதுர..

அனலில் விளைந்த அற்புதமே! உன்னை ஆராதிக்க விளையுது ஆனந்தமே

மஞ்சப் பட்டு கட்டீ மல்லிகப் பூச்சூடி கையில கிளி வச்ச கருணப் பூங்கொடியே,  சொக்கனும் மயங்கிடும் சுந்தர வதனியே, டக்குன்னு வரம் கொடுக்கும் தடாதகை தேவியே   

சிவம் சுபம்

ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ்

ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ் 

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்

பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன்,
பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,

செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள்
அருளியது

சிவம் சுபம்

(இப்பிள்ளைத் தமிழைப் பாடி  நம்  குழந்தைகளைத் தாலாட்டலாமே)

சொக்கி போனேன் அய்யா (Mohanam)


மோஹனம்

சொக்கி போனேன் அய்யா.... சொக்க நாதா.... உன் சொக்கத் தங்க மேனி எழிலினிலே.

நெகிழ்ந்து போனேன் அய்யா சொக்க நாதா.....உன் தேவியின் கயற் கண் பார்வை அருளில் ..

மகிழ்ந்து அணிந்தேன் அய்யா சொக்க நாதா, மணமிகு உந்தன் திரு நீற்றினையே, அதன் மத்தியில் ஒளிருதய்யா சொக்க நாதா, உன் தேவியின் தாழம்பூ குங்குமமே

மெய் மறந்தேனய்யா சொக்க நாதா,  உன் திருமுகப் பாசுரத் தமிழினிலே, என்னை இழந்தேனய்யா சொக்கநாதா, நீ கால்மாறி ஆடும் கம்பீரத்திலே

(உன்னை) மறவாது வாழ்வேனய்யா சொக்க நாதா, நீ மலரடி பதித்த வைகைக் கரையில், (நான்) இறவாது வாழ்வேனய்யா சொக்க நாதா, உன் சிவராஜ தானியாம் மதுரையிலே

சிவம் சுபம் 

குரு பாதமே குறை களையுமே

ஸ்ரீ குருப்யோ நம:

குரு பாதமே குறை களையுமே
குரு பாதமே குணம் அருளுமே
குரு பாதமே பவம் அறுக்குமே
குரு பாதமே பயம் போக்குமே

குரு பாதமே குலம் காக்குமே
 குரு பாதமே  திரை விலக்குமே
குரு பாதமே மறை விளக்குமே
குரு பாதமே இறை பாதமே

இறையை  நொந்தால் குரு காப்பாரே
குருவை மறந்தால் இறை அருளாரே
குருவருளே திருவருள்
குருவருளே இறை யருள்

சிவம் சுபம்

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி (Maalika)

ராக : மாலிகா             

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி 
கருணை பர்வத வர்த்தினி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை

தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை  தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு

என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை  இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமராம்பிகை  பார்வதி ஆதி   எண்ணிலா நாம ரூப

அன்னையாய் காசி முதலாகிய தலத்து விளையாடிடு
விசாலக்ஷியாம்
அண்டகோடிகள்பணி அகண்ட பூரணி எனும்
அன்னபூரணி அன்னையே

தருமை ஆதினம்  பத்தாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் அருளிய
காசி அன்னபூரணி யம்மை திருவருட்பா

(இந்த ஒரு பாடலின்  மூலம் அன்னையின் அனைத்து முக்கியத்  திரு நாமங்களையும் ஜெபித்து இன்புறலாம்)

சிவம் சுபம்

(காழி refers to சீர்காழி)

தங்க நிகர் குணத்தோடு (Thaiyal Naayaki Paamaalai)

தையல் நாயகிப் பாமாலையில் இருந்து ஒரு பாடல். 

தங்க நிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியில் புகழ் காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூ மாது போற்றி
மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகிழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணாமுலை அழகு சிவகாமி
மங்கை மீனாக்ஷி போற்றி போற்றி
பொங்கிவரும் துயரத்தைப் பொடிப்பொடியாக்க வரும்
அன்னபூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வு தரும் பூங்கொடியாம் விசாலாக்ஷி
புனித உமா தேவி போற்றி
மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடு வர
மாதரசி கூட்டி வருவாய்
வைத்தீஸ்வரன் கோயில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே

சிவம் சுபம் 

Sarva Devi Sthuthi கயற்கண்ணி எனைப் படைத்தாள்



Sarva Devi Sthuthi

கயற்கண்ணி எனைப் படைத்தாள்,
உண்ணாமுலை என் உயிரானாள்,
அன்னபூரணி பசி தீர்த்தாள்
அகிலாண்டேஸ்வரி நிழல் கொடுத்தாள்

காந்திமதி நல் ஞான மளித்தாள்,
வடிவாம்பாள் நல் பொலி வளித்தாள்
கற்பகாம்பாள் கனகம் பொழிந்தாள்
காளிகாம்பாள் என் காவலானாள்

காமாக்ஷி தவ வழியதை காட்டினாள்,
தர்மாம்பாள் நல் நெறியதை ஊட்டினாள்
த்ரிபுராம்பா நற்றுணை யானாள்
லலிதாம்பா ராஜ வாழ் வளித்தாள்

அபிராமி நம் மங்கலம் காப்பாள்,
சிவகாமி மனோ தைரியம் சேர்ப்பாள்,
தையல்நாயகி (உடல்) நலமருள்வாள்,
பைரவி பயமதைக் கொன்றிடுவாள்

கோமதி என்றும் தாமதியாள்,
விசாலாக்ஷி விண்ணயும் அளிப்பாள்
ராஜராஜேஸ்வரி (நம்) குலம் காப்பாள்
அபயம்பா அடி மலர் தருவாள்

நவ ராத்ரி நந்நாளில் அன்பரனைவரும் இணைந்திடுவோம்.
அகிலமெங்கும் சுபம் நிலைக்க
சிவையவள் பாதம் பணிந்திடுவோம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்

சிவம் சுபம்