Wednesday, July 19, 2017

ஆனியில் மீனாட்சி ஊஞ்சலாடினாள்



ஆனியில் மீனாட்சி ஊஞ்சலாடினாள், அவனி ஆளும் அன்னை ஊஞ்சலாடினாள்

சுந்தர வதனியவள் ஊஞ்ச லாடினாள், சுந்தரனுடன் இணைந்து ஊஞ்சலாடினாள்

நூறு கால் மண்டபத்தில் ஊஞ்சலாடினாள்,
திருவாதவூரர் பாட ஊஞ்ச லாடினாள்
பொன்னூஞ்சல் பாட அம்மை ஊஞ்சலாடினாள்
பொன்னார் மேனியனும் உடன் ஆடினார்

சிவ சக்தி அவள் ஊஞ்சலாடினாள்,
சிவ ரஞ்சனி அவள் ஊஞ்சலாடினாள்
சிவ ராஜதானியில்
ஊஞ்சலாடினாள்
சிவ-சுபமாகி ஊஞ்சலாடினாள்

சிவம் சுபம்

audio                       

Pattinathaar Padal

பட்டினத்தார் பாடல்கள் - 4 & 5

பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே

ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே.

சிவம் சுபம்

பட்டினத்தார் பாடல்கள் - 2, 3
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே !

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே !

சிவம் சுபம்


Sri Guru Sthuthi - Mohanam

Sri Guru Sthuthi  - Mohanam (Kavi :  Vaara Sri  avargal )

உருவாகும் உலகில் எல்லாம் குரு வாகும் பகவானே
திருவாகும் செல்வம் எல்லாம் தினம் தோறும் தருவோனே

தலம்  ஆலங் குடி தனிலே...தளம் கொண்டு அமர்வோனே
குலம்  தேவர் குலம்  காக்கும் புஷ்பா ராகச் சுடரோனே

பெரும் யானை வாகனம் மேல்...வரும் வ்யாழ பகவானே
அரசாலே அனல் வளர்த்தோம், அரசாளும் நிலை தருவாய்

பொன்மஞ்சள் மேனியிலே திகழ் மஞ்சள் ஆடையனே
வெண் முல்லை மலரளித்தோம்,   வித்தைகளைத் தந்தருள்வாய்

"ஸ்ரீம்" என்னும் மந்திரத்தால் திருக்கோலம் இட் டழைத்தோம்
பொறி கடலை படைத்   தளித்தோம்....நீ பெயர்கையில் அருள் புரிவாய்

audio-1
audio-2

ஏனிந்த மௌனம் அம்மா



ஏனிந்த மௌனம் அம்மா - ஏழை என்னோடென்ன வாதம்மா - மீனம்மா

ஊமையை பாட வைத்த உமையே, இப் பேதையை மறந்த தென்ன தடாதகையே

பொற்றாமரைக் குளக் கரையில், பொற்கோபுர நிழலில்,பொன்னார் மேனிய(னி)ன் கரம் பிடித்து, முத்தமிழ் வளர்த்து மூவுலகாளும் மரகத மயிலே! எந்நேரமும் உன்னை நினைந்துருகும் இந்த மூடன் பால்....

சிவம் சுபம்

kaNdu thozhuvom (Siva Ranjani)

siva ranjani

kaNdu thozhuvom ..... ayyan aruLai uNdu magizhvom

Punnai nizhal amarntha buvana Suntharanai
Annai mayilaai thozhutha
Iraivanai

Apparum Sambandarum paadiya Paramanai
Aruvaththu moovar valam varum ParamporuLai

VaLLuvar koorum Aathi Bhagavanai
Mayilaiyai Kayilai-yaai maatriya Easanai

Poompaavai uyir meetta
PuNNiyanai
Puththirar iruvarudan aruLvonai

Kaa Paali endraal vanthiduvaan
Thaa Paali endraal thanthiduvaan  ... thannaiyae thanthiduvaan

Sivam Subam

audio

Aaladi Guruvae Kaaladi Guruvae



Aaladi Guruvae
Kaaladi Guruvae

Kaaladi Guruvae
Kaamakoti Guruvae

Kaamakoti Guruvae
Kaamakshi Vadivae

Kaamaakshi Vadivae
Chandira Sekaramae

Chandira Sekaramae
Chandra mouleesamae

Chandra mouleesamae
Sankaraachaaryamae

Sankaraachaaryamae
Paramaachaaryamae

Paramaachaarya Paatha kamalamae - agatrum
namathu paathaga malamae.

  Sivam Subam

audio

Vinaayakan vinai kaLaivaan (School Prayer)

OM

Vinaayakan vinai kaLaivaan
Ayyappan thunai varuvaan
Bairavan bayam pokkuvaan
Vadivelan vetrigaL kuvippaan

Ilakkumi kanagam pozhivaaL
NaaraNan kaaval niRppaan
KalaivaaNi gnanam saerpaaL
Naanmugan vithi maatri kaappaan

Aanjaneyan asaadyam seivaan
Annai MeeNaaL agam aNaippaaL
Aalavaayan amutham aLippaar
Aaladi-yaan anaiththum aruLvaar

Sivam Subam

audio

நர சிங்க தேவா வா வா (Aarabhi)

aarabi

audio-1
audio-2

நர சிங்க தேவா வா வா - என் நர ஜென்ம பாபம் நசித்திடவே

குறை களை குண சீலனே வா வா, அன்பர் உளமாம் அஹோபிலம் உறையும் தேவா

தூணைத் தாயாய்க் கொண்டவனே, தூயனைக் காக்க அவ தரித்தோனே,  தூயவளை மடி வைத்தோனே, துஷ்ட நிக்ரஹ சிஷ்ட வரதனே

ஆதி சங்கரை காத்தவனே, அன்-புடையவரின் அழகிய ரங்கனே, மத்வர் தொழு தேத்தும் மாதவனே, மா தேவன் போற்றும் மந்த்ர ராஜ பாதனே

 சிவம் சுபம்

மலர் ஆடையில் ஒளிர் மலை மகள்



மலர் ஆடையில் ஒளிர்  மலை மகள், மங்கலம் பொழிந்திடும் திருமகள், வெற்றித் திருமகள்

சண்ட முண்டாசுரனை வென்றவள், சாமுண்டீஸ்வரீயாம் அன்னையவள், நம் அன்னையவள்

மா தேவனைக் காத்த உமையவள், மாதவனின் சோதரியாம் துர்கையவள், கர்நாடகத் துறை தேவியவள்,
எந்நாட்டவர்க்கும தாயானவள்

சிவம் சுபம்

audio

பாட மாட்டேன் நான் பாட மாட்டேன் (Saama)

saama

பாட மாட்டேன் நான் பாட  மாட்டேன் - பகவான் திருவடிப் புகழன்றி வேறு...

மாண்டு மாண்டு மீண்டும் பிறந்துழலும் மனித மூடரை நான்...

வள்ளலின் திருவடிப் புகழ்ச்சி யன்றி, பாம்பனாரின் தௌத்திய பாடலன்றி, (வேதாந்த) தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரமன்றி, பட்டத்ரியின் ஸ்ரீ பாத ஸப்ததி யின்றி வேறு....

இரை தேடுவதோடு இறையையும் தேடுவோம், இறை திருப்புகழை தினமும் பாடுவோம். இறை திருவடி நிழல் தனையே நாடுவோம், இறையன்பல்லா வேறெந்த பாடலையும்....

சிவம் சுபம்

Gayathri Song - Saraswathi

Saraswathi

முப்பொழுதும் அவளை ஜெபித்திடுவோம் -  எப்பொழுதும்  நம்மைக் காத்திடுவாள், அன்னை காத்திடுவாள்

இருகரம் கூப்பித் தொழுவோரை ஈறைந்து கரம் கொண்டு  அகம் அணைப்பாள், அன்னை அகமணைப்பாள்

முனி கௌசிகனின் தவக் கனி, மூவுலகாளூம் தேவக் கன்னி,  ஐமுகம் கொண்ட அருட் கனி,  ஷண்மதத்தின் ஸாரக் கனி.

அவளே ப்ரஸித்த வேத மாதா, அவளே ப்ரணவ நாத  ஸாரதா,  (அவளே) ஸந்த்யா ஸாவித்ரீ ஸரஸ்வதி, ஸத்கதி அருளும் காயத்ரீ.

சிவம் சுபம்

Jai Santoshi Maatha


Audio

OM

Santhoshi Maa Jai Santhoshi Maa
Santhoshamu-losagae Santhoshi Maa

Vigneswari Santhoshi Maa
Vijayeswari Santhoshi Maa
Padmeswari Santhoshi Maa
Parameswari Santhoshi Maa

Sukreswari Santhoshi Maa
Chakreswari Santhoshi Maa
Sarveswari Santhoshi Maa
Sathyeswari Santhoshi Maa

Vradeswari Santhoshi Maa
Yogeswari Santhoshi Maa
Gnaneswari Santhoshi Maa
PraaNeswari Santhoshi Maa

Sivam Subam 

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி


ராக : மாலிகா                Raaga : Maalikaa 

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பர்வத வர்த்தினி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை

தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை  தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு

என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை  இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமராம்பிகை  பார்வதி ஆதி   எண்ணிலா நாம ரூப

அன்னையாய் காசி முதலாகிய தலத்து விளையாடிடு
விசாலக்ஷியாம்
அண்டகோடிகள்பணி அகண்ட பூரணி எனும்
அன்னபூரணி அன்னையே

தருமை ஆதினம்  பத்தாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் அருளிய
காசி அன்னபூரணியம்மை திருவருட்பா

(இந்த ஒரு பாடலின் மூலம் அன்னையின் அனைத்து
முக்கியத்  திரு நாமங்களையும் ஜெபித்து இன்புறலாம்)

சிவம் சுபம்

கார்த்திகேய கருணாகரா




கார்த்திகேய கருணாகரா - கழலிணை பிடித்தேன், கடுகி அருள்வா

கந்தா குஹா கௌரீ சுதனே, வந்தாள் எனையே வரதன் மருகனே

ஆனைமுகனைத் தொழும் ஆறுமுக வா வா, ஏறு மயிலேறி விரைந்தோடி வா வா,
மாறு பட சூரரை வதைத்த வேலா, ஆறுபடை அமர்ந்தருள் அழகா வா வா

தந்தை தோளமர்ந்த தனயனே வா வா,
விந்தை பல புரியும் நந்த(வ)னத் திறைவா, என் சிந்தை கவர்ந்த சுப்பிர மணியனே, எந்தை உனையன்றி வேறு புகல் காணேனே...

சிவம் சுபம்

audio

அருளே சந்த்ரசேகரம்



அருளே சந்த்ரசேகரம்
ஆகம வேத ஸாரம் - சந்த்ரசேகரம்

இக பர  ஸுகம் - சந்த்ரசேகரம்
ஈஸ்வரம் - சந்த்ரசேகரம்

உலக குருவாம் - சந்த்ரசேகரம்
ஊழ்வினை மாய்க்கும் -
சந்த்ரசேகரம்

எல்லோர்க்கும் சம்மதமாம் -  சந்த்ரசேகரம்
ஏழிசை நாதம் சந்த்ரசேகரம்

ஐந்தொழில் புரி சந்த்ரசேகரம்
ஒப்புயர்வில்லா சந்த்ரசேகரம்

ஓங்கார ஜோதிஸ்வருப பரமேஸ்வரம்
ஔதார்யமே வடிவாம் பரமாச்சாரியம்

ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
ஹர ஹர சந்தர் சேகரா
ஜெய ஜெய சந்தர சேகரா

சிவம் சுபம்

audio