Sunday, August 19, 2018

பவளத்துள் மரகதம் சேர்ந்ததுவே

உ 

பவளத்துள் மரகதம் சேர்ந்ததுவே
கயிலை மதுரையுள் கலந்ததுவே
வலக்கையில் கிளியை ஏந்தியதே,
இடக்கையில் சூலம் தாங்கியதே

வேட்டியும் சேலையும் பூண்டதுவே,
திருநீற்றில் குங்குமம் ஒளிர்ந்ததுவே,,
வில்வமும் முல்லையும் சூடியதே,
மீனாக்ஷி சுந்தரம் ஆகியதே

சிங்காதனத்தில் அமர்ந்ததுவே
கந்தன் கணபதி தொழுததுவே
அயனும் மாலும் வியந்ததுவே
அகிலமே போற்றிப் பணிந்ததுவே.

அர்தநாரியாம் அம்மையப்பன்
ஆதி-பகவன் அம்மையப்பன்.
சிவ-சக்தி அம்மையப்பன், ஸ்ரீ
மீனாக்ஷி சுந்தரன் அம்மையப்பன்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment