சபரி மலையான், அபரிமத கருணை மலையான் (thillang)
திலங்
சபரி மலையான், அபரிமத கருணை மலையான் - அரி-அர சுதன், அன்பரின் ஹ்ருதய மதன்
தாய் ராமன் ஏக பத்னி வ்ரதன்,
சேய் இவனோ ஏகாக்ர சித்தன்
அய்யன் சிவன் அருணை சோதியன்
மைந்தன் இவனோ மகர சோதியன்
அண்ணன் முருகன் வேல் ஏந்துவான்
தம்பி இவனோ வில் ஏந்துவான்
முதல்வன் கணேசன் எலியைக் கொண்டான், இளையோன் இவனோ புலிமேல் வருவான்
அன்னை காமாக்ஷியின் காவல் சாஸ்தா, தன்னையே தந்திடும் தர்ம சாஸ்தா
சிவ வைணவத்தை இணைத்த ஐயன்
(நம்) பவ பயம் போக்கும் ஐயப்பன்
Sivam Subam
audio

No comments:
Post a Comment