Sunday, August 19, 2018

பிறை மறைத்த சந்த்ரமௌளீஸ்வரர் (on Mahaperiyavaa)



பிறை மறைத்த சந்த்ரமௌளீஸ்வரர்
பிழை பொறுக்கும்
சர்வ தயாபரர்.
மறை தாங்கும்
சந்திர சேகரர்
கரை காணா
கருணா சாகரர்.

கதை (Gathai) விடுத்த
ஸ்ரீமந் நாராயணர்.
கீதை சாரமுரைத்த
பதித பாவனர்.
ஹரி ஹர பேதம்
கடந்த வ்யாசர்.
கதியென் றடைநதோரின்
விதி மாற்றும் நான்முகர்.

அன்னை காமாக்ஷி
அய்யன் இதயம்.
அருள் பொழி கமலாக்ஷி
அய்யன் திருக்கரம்.
கலைமகள் ஸரஸ்வதி
அய்யன் திரு நாமம்.
கதி ஸத்கதி தரும்
கமல மலர் பாதம்.

ஆலடி அமர்ந்த ஆதி குரு நாதர்.
அகயிருள் நீக்க வந்த ஆதி சங்கரர்.
கலி தீர்த்தருளும்
காமகோடீஸ்வரர்.
கருதிப் பணிவோரை
உறுதியாய் காப்பவர்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment