உ
A Divine Lyric by the one n only Sri Kannadaasan Sir.
கண்ணதாசன் பாடல்:
சிவகாமி அம்மன் துதி:
கருவிலே நான் தூங்கி காலங்கழிக்கையில் காற்றாக வந்தவள் நீ
கையிலே பிள்ளையாய் பையக் கிடைக்கையில் கனிந்த பாலானவள் நீ
உருவிலே பெரிதாகிப் பள்ளிக்குச் செல்கையில் உடன் வந்த கல்வியும் நீ
உறவிலே ஒன்றாகித் திருமணம் நடக்கையில் ஒளிமாலை ஆனவள் நீ
திருவோடு பிள்ளை என் மனையிற் பிறக்கையில் சீர் தந்த ஆட்சியும் நீ
தேசங்கள் யாவிலும் தொழில் செய்யச் செல்கையில் செல்வமாய் நின்றவள் நீ
குருவான குமரனின் அறிவான அன்னையே கோல நடராசன் துணையே
கோவிலிடை அந்தணர்கள் கூடி வரும் தில்லையில் கொஞ்சும் சிவகாமி உமையே ! Courtesy fb

No comments:
Post a Comment