Sunday, October 22, 2017

கோலாட்டம் ஆடும் கோமகள் மீனாக்ஷி



கோலாட்டம் ஆடும் கோமகள் மீனாக்ஷி
கோரின வரமருளும் மதுரை மீனாக்ஷி

வரமழை பொழியும் வான்முகில் மீனாக்ஷி,
வான் மழை பொழிந் தெம்மைக் கா வா மீனாக்ஷி

இறையைப்  பிரியாவிடையே மீனாக்ஷி
குறையையும் குணமாய்க் கொள்ளும் மீனாக்ஷி
அலை கலை தொழுதேத்தும் மலைமகள் மீனாக்ஷி
அளப்பரியாக் கருணை 
அமுதே மீனாக்ஷி 

 பச்சைப் பவள வண்ண சிவசக்தி மீனாக்ஷி
இச்சை க்ரியை ஞான சக்தி மீனாக்ஷி
சர்ச்சைக் கப்பாற்பட்ட சக்தி யவள் மீனாக்ஷி, என் கொச்சைத் தமிழையும் ஏற்று அருளும் மீனாக்ஷி

 சிவம் சுபம்

No comments:

Post a Comment