Sunday, August 19, 2018

என்ன கரிசனம் என் அன்னைக்கு



என்ன கரிசனம் என் அன்னைக்கு, ஏகாந்த தரிசனம் தந்தாளே இன்றெனக்கு...

கன்றழைக்கும் முன் கருதி வரும் ஆ போலே, கடையன் எனக்கும் காட்சி தந்தாள், முத்தங்கி அணிந்து முறுவல் பூத்தாள்.

தலைமகன் கணேசன் அருகமர்ந்தேன், விலை மதிக்க வொண்ணா (அன்னை) பாதம் கண்டேன், சிம்ஹ வாஹினி மந்த ஹாஸினி  ஆனந்த பைரவி அருள் பொழிந்தாள்,   அன்புடன் பூதி குங்குமம்  தந்தாள்

பிறிந்தவர் கூடினால் பேச முடியுமோ, பிடித்தவர் இணைந்தால் பிரிய முடியுமோ, (என்)  உள்ள ஏக்கமெல்லாம் இசையாகி அன்னைமுன் அருவியாய் பொங்கியதே, அன்னையின் சிரமலர் ஒன்றென்னை வாழ்த்தியதே.

வாழிய மதுர காளி யம்மா,  வாழிய சிறுவாச்சூர் தேவியம்மா, வாழிய த்ரிபுர சுந்தரி அம்மா, வாழிய வற்றாத உன் கருணை யம்மா 

சிவம் சுபம்

ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.



ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.

ஷண்முகனின் ப்ரிய மாமன், ஸ்வாதியில் 
ஸ்தம்பத்தைப் பிளந்து  வந்தான

நிந்தனை செய்தோனை மடி  வைத்தாட் கொண்டான்.  வந்தனை செய்தோனை வாழ்வாங்கு வாழ் என்றான். அஹோபிலத்தில் தோன்றியவன் அகிலமெங்கும் வ்யாபித்தான்.

சங்கரர்க்கு கரம் கொடுத்தான், மத்வரின் முக்ய ப்ராணன் ஆனான்.  உடையவரின் உடமை ஆனான், தேசிகர் கவியில் சிம்ஹமாய்  ஜ்வலித்தான்,

ஆழ்வார்கள் தமிழ் மாலையும் ஏற்றான், அன்னை லக்ஷ்மியை மடி வைத்தான்,
மரண பயமதைப் போக்கிடுவான். கனக மழையே  பொழிந்திடுவான்.

 சிவம் சுபம்

உம்மடி மலர் துணை போதுமே

file


உம்மடி மலர் துணை போதுமே, மூவுலகும் என் வசமாமே

திருமகள் அளித்த பெரும் கொடையே, மலை மகள் காமாக்ஷி மறுவுறுவே..

கலைகளாம் ஞான ஸரஸ்வதியே, அலை பாயா மனமருளும் பெருநிதியே, இந்திரர்க்கும் கிட்டா அருட் குருவே,  ஸ்ரீ சந்திரசேகராராம் சதாசிவமே....

சிவம் சுபம்.



காக்க வச்சு காக்க வச்சு காட்சி தந்தானே - என்னை திட்ட வச்சு திட்ட வச்சு கருணை செய்தானே

அங்கு இங்கும் அலய விட்டு சோதனை  செய்தான், அப்பப்பா பட்ட அசதி என்ன சொல்லுவேன், 

அடுத்த நாளு காலையிலே மனம் இளகி, எளிதாக இனிமையாகக் காட்சி தந்தானே, பைசாக் காசு செலவில்லாம, (அந்த) வட்டிக்காரனை கிட்டப் போயி கண்டு உள்ளம் பூரித்தேனே..

இடையில் காளஹஸ்தீக்கு சென்று வந்தேனே, அந்த ஈஸ்வரனே சிபாரிசு செய்திருப்பானோ, அம்மையப்பனை பார்த்து வந்தவுடனே, என் அருமை மாமனும்
தர்சனம் தந்து விட்டானே.

காளஹஸ்தீஸ்வரா
கபிலேஸ்வரா
திருமலேஸ்வரா ஸ்ரீ
வேங்கடேஸ்வரா..

சிவம் சுபம்.


அனுஷமளித்த ஆதிரையா போற்றி (Mahaperiyavaa Bhajan)



அனுஷமளித்த ஆதிரையா போற்றி.
ஆறாம் வேதம் உரைத்தாய் போற்றி.
இம்மையில் கண் கண்ட தெய்வமே போற்றி.
ஈடில்லாத் தவசீலமே போற்றி.
உலகை உய்விக்கும் ஜெகத் குருவே போற்றி.
ஊழ்வினை மாய்க்கும் மருந்தே போற்றி.
எட்டையும் ஐந்தையும் இணைத்தாய் போற்றி
ஏகனாம் சந்திர சேகர போற்றி.
ஐயமில்லாதருளும் அருட் சுனையே போற்றி.
ஒன்றி அதுவே ஆனாய் போற்றி.
ஓங்கி ஒளிர் ஞான ஸரஸ்வதியே போற்றி
ஔஷதாம்ருதமாம் உம் நாமமே போற்றி.

ஜெய ஜெய சந்திர சேகர போற்றி
ஹர ஹர சந்திர சேகர போற்றி.

சிவம் சுபம்

மூவுலகும் ஒரு குடும்பமே



மூவுலகும் ஒரு குடும்பமே, அதுவே சிவ குடும்பமாம் சத்யமே

அங்கயற்கண்ணியே நம் அன்னை - ஆலவாய் சுந்தரனே நம் அய்யன்.

முக்குறுணியோனும் மூவிரண்டு முக குன்றக் குமரனும் (நம்)  அருமை சோதரர் ஆவாரே, பல்லாண்டு கொண்ட கூடல் அழகனே அருள் வடிவான நம் தாய் மாமனே 

மதுரவல்லியாம் திருமகளே நம் அருமை மாமி ஆவளே, ,
அஞ்சனை செல்வனாம் அசகாய தீரனே நமை காக்கும் அரண் ஆவானே.
அறுவத்து மூவரும் ஆழ்வார்களும் நம் சுற்றமும் நட்பும் ஆவாரே.. 

சிவம் சுபம்

Sri Hanuman Song


File 

மூலத் துதித்த முத்து.
முக்கண்ணன் அம்ஸ வித்து.
அன்னை சீதையைக் காத்த சித்து.
இராம நாமப் பித்து.
அடியவர் குல சொத்து.

மந்தியாய்த் தோன்றி விந்தை பல புரி வித்தகன்...  சூரியனாரின் சீடன், சுந்தர ரகுராம பத்தன்.

அஞ்சனை இவனை ஈன்றாள், இவனோ புவி மகளைத் தாயாய் பெற்றான்.

செயற்கரிய செய்யும் ஜித்தன், செத்தவரையும் மீட்கும் சித்தன்,
காலனைக் காமனை வென்றவன்,   
அண்ணலை உள் வைத்த ஆலயன்.

தரும ராமனுடன் வாழ்ந்தான், அத் தருமம் உரைத்த கண்ணன் கொடி பறந்தான்,
 அவதார ராமனும் கண்ணனும் மறைந்தார்
இவனோ இன்றும் நம்மிடை வாழ்கிறான்.

சிவம் சுபம்

உன்னை எண்ணி நாளைத் துவக்குவேன் (Vasanta)

உ (வசந்தா)

உன்னை எண்ணி நாளைத் துவக்குவேன். உன்னைப் பணிந்தென் நாளை நடத்துவேன்

 (என்)  கண்ணின் கருமணியே, கற்பகமே மீனாளே

என்னால் ஆவதொன்றுமில்லை, உன் அருளிக்க கவலை எனக் கில்லை, ஆலத்தை அமுதாக்கும் அன்னை நீ அருகிருக்க, வேதனை என்னை அணுகுமோ, வேழனை யீன்ற மாயே

ஆடலில் வல்லானையே ஆட்டுவிப்பாயே, அரவணை துயில்வோனை அவதாரம் செய்ய பணிப்பாயே, வேதன் மனையாளின் வீணையை பழிக்கும் குரலாளே,   உன் பாதம் பிடித்த எனக்கு எல்லாமே ஜெயமே...

சிவம் சுபம்.