காபி
என்ன தவம் செய்தனை, காஞ்சன மாலை, இக்-ககன மனைத்தையும் படைத்த கயற்கண்ணி, அம்மா என்றழைக்க..
அலைமகள், கலைமகள் பணி ஏற்கும் மலைமகளை,
மடிவைத்துக் கொஞ்சி முத்தாட...நீ
ஐந்தொழில் புரி ஆலவாய் அழகனையே மருகனாய் கொண்டு மணிமுடி சூட்டிட..,நீ
ஞான கணேசனை, ஞான ஸ்கந்தனை, பேரனாய் பெற்ற பெருமாட்டியே., நீ
audio
Tuesday, April 7, 2015
சபலம் சஞ்சலம் மாய்த்திடுவான் (Mohanam)
மோஹனம்
சபலம் சஞ்சலம் மாய்த்திடுவான், சங்கட ஹர சதுர்ததியின் நாதன்
ஜெகஜ் ஜெனனி அளித்த ஜெகத் பாலனன், ஜெகன் மோஹன கணநாதன்
பாலரும் விருத்தரும் வணங்கும் தேவன், தீவிர வைணவரும் பணியும் சைவன், கடி மணம் தம்பிக்கு முடித்து வைத்தவன், அடி பணிந்தோரைக் காப்பதில் முதல்வன்
அய்யனின் கணங்களை வழி நடத்திடுவான், அன்னையின் தவத்திற்கு காவல் இருப்பான், மாமனின் காதையை எழுதித் தந்தவன், மெய் அன்பருக்கோ அவன் தன்னையே தருவான்
audiolink

மீனாக்ஷி அம்மையின் திருமணமே (Ananda Bhairavi)
ஆனந்த பைரவி
மீனாக்ஷி அம்மையின் திருமணமே, காணக் கிடையா வைபோஹமே
கருநீல வண்ணன் தாரை வார்க்க, பவளமேனியன் மரகத மேனியளை ஏற்கும்.
பவ்யமாய் பரந்தாமன் வேண்டிடவே, கம்பீரமாய் கயிலையன் களித்திருக்க
நாணி அன்னை முகம் சிவக்க, நான்முகாதியர் சென்னிமேல் கரம் குவிக்க
தொழுத இளைஞருக்கு நல் மண வாழ்க்கை அமையும், கண்ட மற்றோர்க்கு மங்கலம் நிலைக்கும், பசி பிணியின்றி உலகம் சிறக்கும், ஆன்மீகத்தில்
அகிலம் திளைத்து உயரும்

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து (Thodi)
தோடி
மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து, கயற் கண்ணால் எனை கடை கணித்து...
பிழை பொறுக்கும் தாயல்லவோ, நீ, என் குறை களையும் தந்தையும் அல்லவோ.,
என்னை (நல்) வழி நடத்தும் குருவல்லவோ, என்னுள் கொலுவிருக்கும் தெய்வம் அல்லவோ, இதற்கு மேலும் நான் சொல்லவோ, இனியாகிலும் மனதிரங்கி,
audiolink
கடவுளைக் கண்டேன் (சிவரஞ்சனி)
சிவரஞ்சனி
கடவுளைக் கண்டேன், என் கண் குளிர, மனம் நெகிழ.
காஞ்சி எனும் தலத்தே, காமகோடி பீடத்தே.. நான்..
அமர்நதால் அன்னை காமாக்ஷியாய், நின்றால்
விபூதி சங்கரனாய், கிடந்தால் ஸ்ரீ ரங்கநாதனாய், முகம் மலர்ந்தால் முழு ஞான ஸரஸ்வதியாய்
விழி மலர்ந்தார், என் வேதனை மாய்ந்தது, கரம். அசைத்தார், கனக தாரை ,பொழிந்தது, திருவாய் மலர்ந்தார், தெய்வத்தின் குரல் ஒலித்தது, திருவடி பணிந்தேன், (மீண்டும் பிறவா) பெறு-வாழ்வடைந்தேன்

Monday, March 2, 2015
த்ரிபுரஸுந்தரி அன்னையே
பாகஸ்ரீ
த்ரிபுரஸுந்தரி அன்னையே, திரும்பக் காண்பேனோ உன்னையே
பெற்றவளை இழந்த என்னைப் பேணிய உற்ற தாயே, தக்க தருணத்தில் உன் அருகில் தனயன் நான் இல்லையே, அம்மா
(உன்)மஞ்சள் முகமும், மலர்ந்த வதனமும், நீ இட்ட என் நெற்றிக் குங்குமமும், உன்னுடன் நான்
இசைத்த கீதமும், என்றும் என் உயிருள் கலந்- தினிக்கும் அம்மா! சத்தியம்
மதுரகாளியின் மறு உருவே, அன்பர் மனக்குறை தீர்த்த தருவே, (எம்) குறைகளையும் குணமாய் கொண்ட குருவே, (கனவிலும்) மறவேனம்மா உன் திருப் பாத மலரே
Wednesday, February 25, 2015
வேலும் மயிலும் துணை (சங்கராபரணம்) Velum Mayilum Thunai
விருத்தம் - சங்கராபரணம் -
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன்..
செந்திலே! வேலவனே!
பாடல் - சங்கராபரணம் - ஸ்ரீ அகஸ்தியர்
செந்தூர் கடற்கரையில் நந்தா விளக்கில் உயர்
சிந்தாமணிக்கு நிகரானவன்
கந்தா குஹா கௌரி மைந்தா எனக் கனிந்து
வந்தார் என் மனக் குறை தீர்ப்பவர்
அன்பிற் பிறந்து வளர் அன்பிற் சிறந்து உயர்
அன்பர்க்கெல்லாம் அன்பு மூர்த்தியாம்
அற்பர்க்கெல்லாம் அசுர துஷ்டர்க் கெல்லாம் அவர்
அச்சப்படும் கால மூர்த்தியாம்
நம்பிப் பணிந்தவர் முன் பிம்பத் தனி மயிலில்
செம்பொற்ச் சிலம்பொலிக்கத் தோன்றுவான்
நம் சிந்தைக் கிசைந்து விளையாடுவான்
பொங்கும் தனிக் கருணைத் தங்கத் தனம்
சகல சம்பைத்தையும் தந்து வாழ்த்துவான்
சிவம் சுபம்
த்யாகராஜன்
Subscribe to:
Posts (Atom)