இசைத் தவம் பயனுற்றதே (Kalavathi/ Valaji)
இசைத் தவம் பயனுற்றதே (கலாவதி/வலஜி)
இசைத் தவம் பயனுற்றதே, இறையே மனம் நெகிழ்ந்து வந்ததுவே
நாதோபாசனையின் மாண்பிதுவே. நாதனின் கரம் சிரம் கொண்டதுவே
ஸ்ருதி லய ஸுநாத வினோதினி, ஸுப்ர பாத சுப சிவமே, தனக்கென வாழா தபஸ்வினி, தயா சாகரன் மனம் கவர்ந்ததுவே, தண்ணருள் மழையில் கலந்ததுவே
அன்னை சுபம் போல் பக்தி செயவோமா, உதவுதற் கென்றே வாழ்வோமா, ஆண்டவனை நேரில் காண்போமா, அன்பர் உள்ளத்தே வாழ்வோமா
No comments:
Post a Comment