Sunday, May 31, 2015

விசாகத் துதித்த வீரனே (Revathi)



ரேவதி

(வைகாசி) விசாகத் துதித்த வீரனே
கார்த்திகேய கருணாகரனே,

(தை) பூசப் புண்ணிய வேலவனே
பந்த பாசமறுக்கும் கந்தனே

சஷ்டியில்  சூர சம்ஹாரனே
சர்வ லோக ரக்ஷகனே
பங்குனி உத்திர மணமகனே
எங்குல தேவனாம் ஷண்முகனே

சிவக் கண்மணியே, சிவ சக்தி வேலனே
ஞால முதல்வனின்  ஞான இளவலே
வேதாச்சார்யன் தோள் அமர்ந்தோனே 
கீதாச்சார்யனின் மருகனே

audiolink




Friday, May 29, 2015

Siva Kudumbam (Bhoopalam/Bowli)

பூபாளம்/பௌளி


சிவ குடும்பத்தருள் நிறைந்திருக்க, பவ பயம் நம்மை அணுகாதே
படைத்தவள் நம்மை அன்னை மீனாள், கண்
காணித்து  வளர்ப்பவர் அய்யன் சிவனார்
தடைகள் தகர்ப்பான் தந்த முகன்
பயமதை போக்குவான் ஐயப்பன்
வெற்றிகள் குவிப்பான் வடிவேலன்
காத்து ரக்ஷிப்பான்  தாய் மாமன் 
மாமி பொழிவாள் வற்றா நிதி மழை,  (அவள்)
மைந்தன் மாற்றுவான் நம் விதியை,
சிவ சோதரியாம்  சரஸ்வதி
அளிப்பாள்  அழியா ஞான-மதி 
ஒருவரைத் தொழுதாலும் போதுமே,
குடும்பமே பொழியும் பேரருளே,
சிவ குடும்பத்தில் ஒன்றிடுவோம்
பவ பயம் வென்று நிலைத்திடுவோம்.

Nirjala Ekaathasi Naathudu (Brindavana Saaranga)


B/Saaranga



Nirjala Ekaathasi Naathudu, nirmala Hrudaya Vaasudu

Dhurguna naasana Dheerudu, Duritha nivaaraNa Subakarudu

Gopi jana mana mohanudu, Gopaala KrishNa Govinthudu, Siva Raama roopa Advaithudu, Sritha jana paalana Vittaladu

Dasaavathaara roopudu, Dharmopadesa Daamotharudu,Brahmaanda Viswa roopudu,  Brindhaavana Saarangudu,

audiolink


See also :

http://en.wikipedia.org/wiki/Nirjala_Ekadashi

Mahaa Periyaa Paathugaa-poo nam paathugaapu



பெரியவா பதமலர்,
பேரருள் இறை மலர், மஹா...

(சரணா) கதி என்றடைந்தோரின் விதி மாற்றி யருளும்..மஹா..

துளவ மணிந்தால் சிவனாவார், துளசியில் அவரே அரியாவார்,
துன்ப மகற்றும் துர்கையு மவரே, (சாகா) வர மருளும் நம்
பரமாச் சார்ய...மஹா...

அகவல் முதல் ஆகம வேத சாரமதை, அங்கைக் கனி போல்
அருளிய அற்புதர், த்வைதாத்வைதம் கடந்த துரியர், தூயவர் உள்ளக் கோயில் வாழும், மஹா....

audiolink


அன்னபூரணி அருட்பா (Raaga Malika)

அன்னபூரணி அருட்பா


ராக மாலிகை (ஆனந்த பைரவி, ரேவதி, ஹம்சானந்தி, சாமா)

தருமை ஆதீனம் பத்தாவது குரு மகா சந்நிதானம்
ஸ்ரீ சிவஞான தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் அருளியது 
கன்னியா  குமாரி யருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பருவத வர்த்தனி,
கமலை பராசத்தி சிவ காம சுந்தரி  காழி உமை பிரம வித்தை 
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை -
தந்த அகிலாண்ட நாயகி அறம் வளர்த்தவள்
தண்  னருள் செய் காமாக்ஷி யிங்கு 
என்னை யாள்  கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை இலங்கு நீலாயதாக்ஷி எழில்
பிரம ராம்பிகை இலங்கு பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப 
அன்னையாய்க் காசி முதலாகிய தலத்து
 விளையாடிடு விசாலாக்ஷியாம்
ஆண்ட கோடிகள் பணி  அகண்ட பூரணி என்னும்
அன்ன பூரணி அன்னையே 

ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் (Kaanada)

ஸ்ரீ    காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்


audiolink

ராகம் : கானடா 

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள் அருளியது 
வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன், பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தை வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --


அடாணா - தில்லை சிவகாமியம்மைப் பதிகம் (Attana)

அடாணா  - தில்லை சிவகாமியம்மைப்  பதிகம்



(எவ்வாறு அய்யனுக்கு "வேயுறு தோளி பங்கன்" பாடுகிறோமோ
அம்மைக்கு இந்த பாடலைப் பாடி அருள் பெறுவோம்) 

இரவி மதி பூமிசேய புந்தி குரு வெள்ளி
சனி ராகு கேதுக்கள் எல்லாம்
இயங்குவது உன் வலுவினால் ஆதலால்
அன்பரை என்றும் வாதிக்க வாட்டா 
சரவியல் கொளனையர் திசை புத்தி
சித்திர நன்மை தருவாய் பரிணமிக்கும்
தாப சுர பித்த வாதஞ் சிரக்கம்ப
கப சந்நி முதல் நோயெல்லாம் போம் 
பரவுனது பேர் சொல்லி பூதியோடு
குங்குமப் பொட்டணிதல் கண்டாலுமே
பூதப் பிரேத பைசாச ராக்ஷஸ
விஷம் பொல்லா விலங்கும் ஓடும் 
விரவு உன் மேனியாற் பசுமை பாய அரனது
செய்ய மேனியிற் பாதி கொண்டாய்
மேதினி தழைத்திடத் தில்லை
மாகரத்தின் மேவு சிவகாமி உமையே 

Douthiyam (தௌத்தியம் ) by Shri Pamban Swamigal

Composed by Shri Pamban Swamigal








Wednesday, May 20, 2015

ஸ்வாமிநாதன் மஹாஸ்வாமி ஆன தேதி (20 May) KalyaaNi

--- KalyaaNi

ஆதி அந்தம் இல்லா அருட் ஜோதி, அவனியில் தோன்றிய தேதி இது

ப்ரணவப் பொருளுறைத்த ஸ்வாமி நாதன் மீண்டும் புவி வந்த தேதி இது

வைகாசி செய்த "புண்ணிய-மே, விழுப்புரம் செய்த மா தவ-மே, மெய்ப்பொருள் தோன்றிய இருபது மே, அவர் அடியவர் நமக்கு சுபதினமே

பாரதம் முழுதும் நடந்த பாதமே, (நம்) பவ வினை களையும் ஞான சம்பந்தமே, அன்னியரும் வியந்த அத்வைதமே

அடி பணிந்தோர்க்கதன் நாமம் அமுதமே



audio link


Tuesday, May 19, 2015

இசைத் தவம் பயனுற்றதே (Kalavathi/ Valaji)

இசைத் தவம் பயனுற்றதே (கலாவதி/வலஜி)

 audio link



இசைத் தவம் பயனுற்றதே, இறையே மனம் நெகிழ்ந்து வந்ததுவே

நாதோபாசனையின் மாண்பிதுவே.  நாதனின் கரம் சிரம் கொண்டதுவே

ஸ்ருதி லய ஸுநாத வினோதினி, ஸுப்ர பாத சுப சிவமே, தனக்கென வாழா தபஸ்வினி, தயா சாகரன் மனம் கவர்ந்ததுவே, தண்ணருள் மழையில் கலந்ததுவே

அன்னை சுபம் போல் பக்தி செயவோமா, உதவுதற் கென்றே வாழ்வோமா, ஆண்டவனை நேரில் காண்போமா, அன்பர் உள்ளத்தே வாழ்வோமா

 

Sunday, May 17, 2015

Siva Bhoga Saaram (19 Select Verses)

1.  ஏதேது செய்தாலும், ஏதேது சொன்னாலும், ஏதேது சிந்தித் திருந்தாலும், மாதேவா நின் செயலே என்று நினதருளாலே உணரின், என் செயலே காண்கிலேனே

2. அவரவருக்கு உள்ளபடி ஈசன் அருளாலே, அவரவரைக் கொண்டு இயற்று மானால், அவரவரை நல்லார் பொல்லார் என்று நாடுவதென்? நெஞ்சமே எல்லாம் சிவன் செயல் என்று எண்.



3. எங்கே நடத்துமோ, எங்கே   கிடத்துமோ, எங்கே இருத்துமோ, என்றறியேன், கங்கை மதி சூடினான், தில்லையிலே தொம் தொம் என நின்று நடம் ஆடினான், எங்கோன் அருள்

4. ஏதேது செய்திடினும், ஏதேது பேசிடினும், ஏதேது சிந்தித்(து) இருந்திடினும்,. மாதேவன் காட்டிடுவ தான் அருட் கண்ணை விட்டு நீங்காது  நாட்டம் அதுவாய்
நட


5. எவ்வுயிரும் காக்கவோர்.ஈசனுண்டோ இல்லையோ, அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ - வவ்விப் பொருகுவதும், நெஞ்சே புழுங்குவதும் வேண்டாம், வருகுவதும் தானே வரும்

6. முப்பதும் சென்றால் விடியும், முப்பதும் சென்றால் இருளும், அப்படியே யேதும் அறி நெஞ்சே - எப்போதும் ஆம் காலம் எவ்வினையும் ஆகும், அது தொலைந்து போங்காலம், எவ்வினையும் போம்


7. முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக் கொண்டு என்ன வினை செய்ய இயற்றுமோ - இன்ன வினை செய்வோம், தவிர்வோம், திரிவோம், இருப்போம் இங்கு உய்வோம் எனும் வகை ஏது?

8..ஊட்டும் வினை யிருந்தால் உன் ஆணை, உன் பதத்தைப் பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் - கேட்டுத் திரியாதே, வந்து தில்லைத் தெய்வமே என்றென்று எரியாதே நெஞ்சே இரு



9. என்ன தன்று நின் செயலே என்றறிந்தால், யான் விரும்பி என்னவென்று வாய் திறப்பேன் ஈசனே - இன்னமின்னம் நாயேனை எப்படியோ ஈடேற்ற வேண்டும், உனக் கப்படியே செய்தருளுவாய்

10. இன்ன வினை இன்ன தலத்(து) இன்ன பொழு(து) இன்னபடி இன்னதனால் எய்தும் என அறிந்தே - அன்ன வினை அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால் பின்னறக் கூட்டும் பிரான்


11. சும்மா தனு வருமோ, சும்மா பிணி வருமோ, சும்மா வருமோ சுக துக்கம், நம்மால் முன் செய்த வினைக்கு ஈடாச் சிவனருள் செய்விப்ப தென்றால், எய்தவனை நாடி இரு

12. கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும், ஒன்றொன்றை ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும், காட்டுவதும் காட்டி மறைப்பதுவும், கண்ணுதலோன் முன்னமைத்த ஏட்டின் படி என்றிரு


13. எத்தனைதான் கற்றாலும், எத்தனைதான் கேட்டாலும், எத்தனை சாதித்தாலும் இன்புறா சித்தமே, மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வனைத்தும் பொய்யாகத்.தோன்றாத போது

14. கற்க இடர்ப்பட்டு மிகக் கற்ற எல்லாம் கற்றவர் பால் தற்கமிட்டு நாய் போலச் சள்ளெனவோ - நற் கருணைவெள்ளம் அடங்கும் விரிடையார்க்கு ஆளாகி உள்ளம் அடங்க அல்லவோ


15. நீதியில்லா மன்னர் இராச்சியமும், நெற்றியிலே பூதியில்லார் செய்தவமும், பூரணமாம் சோதி கழல் அறியா ஆசானும், கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்து விடு

16. ஐந்தறிவாற் கண்டாலும், ஆர் ஏது சொன்னாலும், எநத விருப்பு வெறுப்(பு) ஏய்ந்தாலும், சிந்தையே பார விசாரம் செய்யாதே, ஏதொன்றும்.தீர விசாரித்துச்.செய்

audio link

17. பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன், வர வரக்கண்டு ஆராய் மனமே, ஒருவருக்கும்.தீங்கு நினையாதே, செய்ந் நன்றி குன்றாதே, ஏங்கி இளையா திரு

18. ஆசையறாய், பாசம் விடாய், ஆனசிவ பூசை பண்ணாய், நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய், சீ சீ சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய், மனமே உனக்கென்ன வாய்


audio link

19. தில்லை வனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், கூடல்,  முதுகுன்றம், நெல்லைகளர், காஞ்சி கழுக்குன்றம், மறைக்காடு அருணை, காளத்தி, வாஞ்சியமென் முத்தி வரும்

audio link

Thursday, May 14, 2015

Periyavaa PuraaNam Shanmatha saaram (Brindavana Saranga)

Raaga: Brindavana Saaranga

Periya PuraaNam Siva, Siva  baktha PuraaNam,  Periyavaa PuraaNam Shanmatha saaram

Shanmatha saaram Sarva deva sthuthi haaram, samastha loka mangalaa-kaaram

Aingaran aruLaiyum,  Aarumugan anbaiyum, Imugan perumaiyum, Annaiyin karunaiyum, nam Maamanin mahimaiyum orungey paruhalaam, orumaiyil thiLaikkalaam



audio link

கண்ணன் கழல் இணையே சரணம் (Mohana Kalyani)

மோஹன கல்யாணி

கண்ணன் கழல் இணையே சரணம், கார்மேக மணி- வண்ணன் மலரடியே சரணம்.. சரணம்.. சரணம்

பாவை கோதையின் அந்த ரங்கநாதன், (பகவத்) கீதை அருளிய சத்குரு நாதன்

நாதயோகி த்யாகராஜரின் ராம-கோபாலன், நம் அன்னை காமாக்ஷியின் அருமை சோதரன் ஸ்யாம க்ருஷ்ணன், குரு குஹனுடன் கொஞ்சி விளையாடும் குருவாயூரப்பன், ஸ்ரீ பத்ம நாபன், ராம தாஸ வரதன்

audio link


அஞ்ஜனைச் செல்வன்,

அஞ்ஜனைச் செல்வன்,
ஆஞ்சனேய ருத்ரன்,
இரகு குலக் காவலன்,
ஈடில்லா தீரன்
உயர்ந்தொளிரும் உத்தமன்,
ஊழ்வினை மாற்றும் மூலன்,
என்றும் வாழும் சிரஞ்சீவி,
ஏக்கம் தீர்க்கும் சேவகன்,
ஐமுகத்து அற்புதன்,
ஒப்பிலா அசகாயன்
ஓங்காரத்தை உள் வைத்தவன்,
ஔதார்ய சஞ்சிவி

அனுமந்தன்,
ஸ்ரீ அனுமந்தன்.

(ஸ்ரீ அனுமன் அவதரித்தh அற்புத நன்னாள், இந்நாள் )

Audio Link

Bangaaru Meenaakshi, Baktha jana hruthaya saakshi (Mohanam)

 Mohanam

Bangaaru Meenaakshi, Baktha jana hruthaya saakshi..Ambaa

OMkaara Raaja Raajeswari,  Sringkaara Mathuraa-pureeswari.. Ambaa

Sankari, Chandra-kalaathari, Sangath- Thamizh Mohini, Thrinayani, Thribuvani, Dhik-vijaya vilaasini,  Suga-kari, Subakari, Sundareswari. Kathambavana vaasini, kaarunyaamrutha varshiNi


Audio link


ஆண்டவனை உள் வைத்த அடியவன் (Naatai Kurinji))


Raaga (நாட்டைக்குறிஞ்சி)

ஆண்டவனை உள் வைத்த அடியவன், அன்னை உயிர் காத்த ஆபத் பாந்தவன்

செம்மையால் உயர்ந்த சிந்தூர மேனியன், செயற்கறிய செய்த ஸ்ரீ ருத்ரன்

மந்தி முகம் கொண்டான்,  மந்திரம் ராம என்றான், இந்திரனும் பணிவான்,இராவணனும் பயந்தான், விந்தை பல புரிந்தான்,வீரன் குலம் காத்தான்,
தேர் கொடியில் பறந்தான், தேவ கீதை கேட்டான்

Audio Link

Saturday, May 9, 2015

ஸ்ரீ பரமாச்சார்யருக்கு 108 போற்றித் துதிகள்



A beautiful stothram on Sri MahaPeriyava, composed by Shri S. Thiagarajan. 



Reference: Link to mahaperiyavapuranam.org

Audio Link sung by Shri S. Thiagarajan

 ஸ்ரீ பரமாச்சார்யருக்கு 108 போற்றித் துதிகள்

OM  / ஓம் 

1. ANUSHATHTHIL AVATHARI-THEER  POTRI -அனுஷத்தில் அவதரித்தீர்  போற்றி
2. ANNAI MAHALAKSHMI ARULIYA   ARUT SELVAMAE  POTRI - அன்னை மஹாலக்ஷ்மி அருளிய அருட் செல்வமே போற்றி 
3. SRI SUBRAMANYA THANAYANAE POTRI - ஸ்ரீ சுப்பிரமணிய தனயனே போற்றி 
4. SRI SWAMINAATHA NAAMANAE  POTRI - ஸ்ரீ சுவாமிநாத நாமனே போற்றி 
5. SRI SIVAN SIR-IN THAMAYANAE POTRI - ஸ்ரீ சிவன் சாரின் தமையனே போற்றி 
6. VIZHUPPURAM THANTHA MEIPORULAE POTRI - விழுப்புரம் தந்த மெய்பொருளே போற்றி 
7. KAANCHI VAAZH KADAVULAE POTRI - காஞ்சி வாழ் கடவுளே போற்றி 
8. KAAMAKOTI PEETA  ATHIPATHIYAE POTRI - காமகோடி பீட அதிபதியே போற்றி 
9. KARUNYA CHANDRA SEKARA SARASWATHIYAE POTRI - காருண்ய  சந்திர சேகர சரஸ்வதியே போற்றி 
10. SOOLAM VIDUTHTHU VANTHEER POTRI -  சூலம் விடுத்து வந்தீர் போற்றி 
11. KAASHAAYA THANDAM POONDEER POTRI - காஷாய தண்டம் பூண்டீர் போற்றி 
12. SADAI, MATHI MARAITHTHU VANTHEER  POTRI - சடை, மதி.மறைத்து வந்தீர் போற்றி 
13. MARAI SIRAM THAANGINEER POTRI - மறை சிரம் தாங்கினீர் போற்றி 
14.. VATRAA KARUNAI GANGAIYAE POTRI - வற்றா கருணை கங்கையே போற்றி 
15. EM VITHI MAATRI ARULVEER POTRI - எம் விதி மாற்றி அருள்வீர் போற்றி 
16. VIDAI VIDUTHTHU VANTHEER POTRI - விடை விடுத்து வந்தீர் போற்றி 
17. SANYAASA DHARMA SIGARAMAE POTRI - சன்யாச தர்ம சிகரமே போற்றி 
18. NAAL VEDHAP PORULAE POTRI - நால் வேதப் பொருளே போற்றி 
19. SAASTHRA SAMPRATHAAYA SAAGARAME POTRI - சாஸ்திர சம்பிரதாய சாகரமே போற்றி 
20. THAMIZH AAGAMA NIPUNARE POTRI - தமிழ் ஆகம நிபுணரே போற்றி 
21. THIRUMURAI-THIRUVAAIMOZHI SAARAME POTRI - திருமுறை திருவாய்மொழி சாரமே போற்றி 
22. SARVA DHARMA SWAROOPAA POTRI - சர்வ தர்ம ஸ்வரூபா போற்றி 
23. SATH BAKTHI BHOSHAGAA  POTRI - சத் பக்தி போஷகா போற்றி 
24. SARANAAGATHA VATHSALARAE  POTRI - சரணாகத வத்சலரே போற்றி 
25. AALADI AMARNTHAVARE POTRI - ஆலடி அமர்ந்தவரே  போற்றி 
26. PIN KAALADI AVATHARITHTHAVARE POTRI - பின் காலடி அவதரித்தவரே  போற்றி 
27. ENDRUM KAAMKOTIYIL NILATHTHAVARE POTRI - என்றும் காமகோடியில் நிலைத்தவரே  போற்றி 
28. ELIMAIYIN EZHILAE POTRI - எளிமையின் எழிலே போற்றி   
29. SAKALA JEEVAA-RAASI NAATHARAE  POTRI - சகல ஜீவராசி நாதரே  போற்றி 
30. SATHAA LOKA KSHEMA PRAARTHTHANAIYAE  POTRI - சதா லோக க்ஷேமப் பிரார்த்தனையே  போற்றி 
31. KANDANGALAI INAITHTHA NEELAKANTARE POTRI - கண்டங்களை இணைத்த நீல கண்டரே போற்றி 
32. ADVAITHA PAARAMBARYAMAE POTRI - அத்வைத பாரம்பர்யமே போற்றி 
33. DWAITHAA-ADVAITHAM KADANTHAVARAE  POTRI - த்வைதாத்வைதம் கடந்தவரே  போற்றி 
34. SAIVA VAISHNAVA PAALAMAE POTRI - சைவ வைஷ்ணவ பாலமே போற்றி 
35. SHANMATHA RAKSHAGARE POTRI - ஷண் மத ரக்ஷகரே போற்றி 
36. ELLAAM ARINTHA AMAITHIYAE  POTRI  - எல்லாம் அறிந்த அமைதியே போற்றி 
37. EKAAMBARA VARATHARAAJARAE POTRI -  ஏகாம்பர வரதராஜரேபோற்றி  
38. SAKALA KALAI NAATHANAE POTRI - சகல கலை நாதனே போற்றி 
39. PAATHAM PATHITHU KAATHAM NADANTHEERAE  POTRI - பாதம் பதித்து காதம் நடந்தீரே போற்றி 
40. VEDHA NERI KAATHTHEER  POTRI - வேத நெறி காத்தீர்  போற்றி 
41. THOORINORIN THUNBAMUM ARUTHTHAAI POTRI - தூற்றினோரின் துன்பமும் அறுத்தீர் போற்றி 
42. NAASTHIGARUKKUM NAL ARUL PURIVEER POTRI -  நாஸ்தீகருக்கும் நல் லருள் புரிவீர் போற்றி 
43. PAAVAI NONBINAI PARINTHU URAITHTHEER POTRI - பாவை நோன்பினை பரிந்துரைத்தீர் போற்றி 
44. KOLARU PATHIGA VENDHE POTRI - கோளறு பதிக வேந்தரே போற்றி 
45. KALANAI, KAAMANAI VENDRA NERIYAE POTRI  - காலனை காமனை வென்ற நெறியே  போற்றி 
46. ANAIVARUM ONDRENDREER  POTRI - அனைவரும் ஒன்றென்றீர் போற்றி 
47. AKILA JAGATH GURUVAE POTRI - அகில ஜகத் குருவே போற்றி 
48. VILVAM SOODUVEER POTRI - வில்வம் சூடுவீர் போற்றி 
49. RUDRAAKSHA MAALAA DHARANAE POTRI - ருத்ராக்ஷ மாலாதரனே போற்றி 
50. SPATIKA THULASI THAAMANAE POTRI - ஸ்படிக துளசி தாமனே போற்றி 
51. SATH SANGA RAKSHAGARAE  POTRI - சத் சங்க ரக்ஷகரே  போற்றி 
52. PANDITHAR POTRUM PARAMANE POTRI - பண்டிதரும் போற்றும் பரமனே போற்றி 
53. PAAMARAR KAAVALANAE POTRI - பாமரர் காவலரே போற்றி 
54. YAAHAM YAGYAM KAAPPAVARE  POTRI - யாஹம் யக்யம் காப்பவரே போற்றி 
55. AAVAHANTHI HOMA NAAYAGARE  POTRI - ஆவஹந்தி ஹோம நாயகரே போற்றி 
56. SUDAR OLI SOORIYANAE POTRI - சுடர் ஒளி சூரியனே போற்றி 
57. KULIR MATHI MANATHTHAVARE POTRI - குளிர் மதி மனத்தவரே போற்றி  
58. KUTRAM PAARAATHU ARULUM GUNAMAE POTRI - குற்றம் பாராதருளும் குணமே   போற்றி 
59. GUNAM SIRAKKA ARULUM GURU NIDHIYAE  POTRI - குணம் சிறக்க அருளும் குருநிதியே போற்றி 
60. THIRUNEETRU SEMMALAE POTRI - திருநீற்று செம்மலே போற்றி 
61. TIRUK KARAM THOOKKI ARULVEER  POTRI - திருக்கரம் தூக்கி அருள்வீர் போற்றி 
62. PAZHAMAI NITHIYAE POTRI - பழமை நிதியே போற்றி 
63. PUTHUMI MANAMAE POTRI - புதுமை மணமே போற்றி 
64. ELIYA NERIGAL BOTHITHEER  POTRI - எளிய நெறிகள் போதித்தீர் போற்றி 
65. IMAYAM MUTHAL KUMARI NADANTHEER  POTRI - இமயம் முதல் குமரி வரை நடந்தீர் போற்றி 
66. PUVIYAI PUNITHAM AAKKINEER POTRI - புவியை புனிதம் ஆக்கினீர் போற்றி 
67. KAYILAI  NAATHANAE POTRI - கயிலை நாதனே போற்றி 
68. THIRUMALAIYILUM URAIVEER POTRI - திருமலையிலும் உறைவீர் போற்றி 
69. KROTHAM KALAIVEER POTRI - குரோதம் களைவீர் போற்றி 
70. DHARMA SWAROOPAMAE POTRI - தர்ம ஸ்வரூபமே போற்றி 
71. PASI PINI THEERPPEER POTRI - பசிப் பிணி தீர்ப்பீர் போற்றி 
72. PURAANA ITHIHAASA BHOSHAGARAE  POTRI - புராண இதிஹாச போஷகரே போற்றி 
73. ANBAR ULLAM URAIVEER POTRI - அன்பர் உள்ளம் உறைவீர் போற்றி 
74. AVARKKU AMMAI APPAN AAVEER POTRI - அவர்க்கு அம்மை அப்பன் ஆவீர் போற்றி 
75. MAATRU MATHATHTHAARUM POTRUM MAHANEEYARAE POTRI - மாற்று மதத்தாரும் போற்றும் மஹனீயரே போற்றி 
76. SARVA SAMMATHAACHAARYARE   POTRI - சர்வ மத சம்மதாச்சார்யரே போற்றி 
77. UDAL ULLA NOI  THEERPPEER  POTRI - உடல் உள்ள நோய் தீர்ப்பீர் போற்றி 
78, URU THUNAI AAVEER POTRI - உறு துணை ஆவீர் போற்றி 
79. AAYIRAM PIRAI KANDA ARPUTHARAE POTRI - ஆயிரம் பிறை கண்ட அற்புதரே போற்றி 
80. PRATHOSHA NAAYAGARE POTRI - ப்ரதோஷ நாயகரே போற்றி 
81. PRATHOSHA SEVAGARIN PANI YAETREER POTRI - ப்ரதோஷ சேவகரின் பணி ஏற்றீர் போற்றி 
82. ISAI ARASI POTRIYA IRAIVAA POTRI - இசை அரசி போற்றிய இறைவா போற்றி 
83. RUDRA CHAMAGAM VARNIKKUM ROOPARE POTRI - ருத்ர  சமகம் வர்ணிக்கும் ரூபரே போற்றி 
84. PAYAN KARUTHAA BAKTHI VALARTHTHEER  POTRI - பயன் கருதா பக்தி வளர்த்தீர் போற்றி 
85. NITHYA ANNATHAANA PRABUVE  POTRI - நித்ய அன்னதானப் பிரபுவே போற்றி 
86. VIHI MAATRI ARULUM  PIRAMA-NAE POTRI - விதி மாற்றி அருளும் பிரமனே போற்றி 
87. NAARAYANA SMRUTHIYIL LAYIPPEER  POTRI - நாராயண ஸ்ம்ருதியில் லயிப்பீர் போற்றி 
88. NADAMAADUM THEIVAMAE POTRI - நடமாடும் தெய்வமே போற்றி 
89. DEIVATHTHIN KURALE POTRI - தெய்வத்தின் குரலே போற்றி 
90. SARVAGYA PEETAA SANKARARE POTRI  - சர்வக்ய பீட சங்கரரே போற்றி 
91. SAAKSHAATH PARAMESWARANAE POTRI - சாக்ஷாத் பரமேஸ்வரனே போற்றி 
92. CHANDRA MOULEESWARARE POTRI - சந்திரமௌலீஸ் வரரே போற்றி 
93. KARYARKKANNIYIN KARUNAI PAARVAIYAE POTRI - கயற்கண்ணியின் கருணைப் பார்வையே போற்றி 
94. KAAMAAKSHI ANNAIYIN KADUM THAVAME POTRI - காமாக்ஷி அன்னையின் கடும் தவமே போற்றி 
95. MOOVULA GENGUM  VISAALA AAKSHIYAE POTRI - மூவுலகெங்கும் உம் விசால ஆட்சியே போற்றி 
96.VEDA KALAI GNANA SARASWATHIYAE POTRI - வேத கலை ஞான சரஸ்வதியே போற்றி 
97. ENNATRa ELIMAI THUTHIGAL ALITHTHEER POTRI - எண்ணற்ற எளிமை துதிகள் அளித்தீர் போற்றி 
98. VENDATH THAAKKATHU ARIVEER  POTRI - வேண்டத் தக்கது அறிவீர் போற்றி. 
98. VENDUVOR VENDUMUN ARULVEER  POTRI - வேண்டுவோர் வேண்டுமுன் அருள்வீர் போற்றி 
99. VETHANUM MAALUM THEDUM IRAIVAA POTRI - வேதனும் மாலும் தேடும் இறைவா போற்றி 
100. SANCHALAM, SABALAM THEERPPEER POTRI - சஞ்சலம் சபலம் தீர்ப்பீர் போற்றி.
101. SANKATA NIVAARANAARE  POTRI - சங்கட நிவாரணரே போற்றி 
102. IRAPPAI THADUPPEER POTRI - இறப்பை தடுப்பீர் போற்றி 
103. MEENDUM PIRAVAATHU KAAPPEER POTRI - மீண்டும் பிறவாது காப்பீர் போற்றி 
104. MAHAA PERIVAALAE POTRI - மஹா பெரியவாளே போற்றி 
105. PARAMAACHAARYA PARAMPORULAE POTRI - பரமாச்சார்ய பரம் பொருளே போற்றி 
106. PAATHAGA MALAM AGATRUM UM PAATHA KAMALAM POTRI - பாதக மலம் அகற்றும் உம் பாத கமலமே போற்றி 
107. THENNAADUDAIYA IRAIVAA POTRI - தென்னாடுடை இறைவா போற்றி 
108. ENAATTAVARUM POTRUM  MAHAA PERIYAVAA POTRI - எந்நாட்டவரும் போற்றும் மஹா பெரியவா போற்றி 
AALADI, KAALADI, KAAMAKOTI SANKARA CHANDRASEKARAK KADAVULAE POTRI POTRI
ஆலடி காலடி,காமகோடி சங்கர சந்திரசேகரக் கடவுளே போற்றி போற்றி 

சிவம் சுபம்
த்யாகராஜன்