Sunday, March 24, 2019

ப்ருந்தாவனம் வாழும் ராயரே (Sri Ragavendrar Brindhavana Saaranga)

உ

13th March - SwamigaL Jayanthi

ராகம் :

ப்ருந்தாவனம் வாழும் ராயரே - முனி ப்ருந்தமெலாம் போற்றும் தேவரே

துங்கா தீரம் வாழும் துறவியே - உமை தொழுதோர்க்கில்லை மறு பிறவியே

பண்ணால் உம்மை துதிப்போம் ஐயனே, கடைக் கண்ணால் எம்மைப் பாரும் மெய்யனே, புவனகிரி தந்த புனிதரே, திரி புவனமும் போற்றும் ராகவேந்த்ரரே

சுந்தரவடிவம் கொண்ட தூயரே, உமது மந்த்ராக்ஷதையே எமைக் காக்கும் ரக்ஷையே, வீணையை மீட்டும் நாத ஸ்வரூபா, எம் வேதனை களையும் த்யான ஸ்வரூபா

சிவம் சுபம்

பள்ளி கொண்ட பெருமானே

உ

பள்ளி கொண்ட பெருமானே, அருளை அள்ளி வழங்கும் சிவபரனே

(அன்னை)  உமை மடி அயர்ந்த அய்யா, எமைக் காக்க எழுந்தருள், முக் கண்ணய்யா

ஆலம் உண்ட அண்ணலே, அரி அயனைக் காத்த வள்ளலே, நீல கண்ட பரம்பொருளே, காலகாலனாம் மெய்ப் பொருளே

சுருட்டப்பள்ளி வாழ் சுந்தரா, மனயிருட்டை நீக்கும் மதிசேகரா, ப்ரதோஷ வலம் வந்தருள்வாய், எம் பிறவி தோஷம் களைந்தருள்வாய்

சிவம் சுபம்


(Sarva Mangala Mangalye & மாசி பங்குனி கூடும் வேளை) - Karadai Nonbu

உ

மோஹனம்

மாசி பங்குனி கூடும் வேளை, மங்கலக் காரடை நோன்பு காலை

அன்னை சாவித்ரி அடி சூடும் வேளை, அன்புக் கணவரின் ஆயூள் கூட்டும் வேளை

காரடை படைத்து கயற் கண்ணியைப் பணிவோம்
கவனத்துடன் நோன்பு சரடு பூணுவோம்
மாசிக் கயிற்றில் பாசி படிய சுமங்கலத் தாரகையாய் என்றும் ஜ்வலிப்போம்

சிவம் சுபம்

(Punniyam Seidhanai Maname & முத்தங்கி அணிந்த முக்கண்ணி)

உ

முத்தங்கி அணிந்த முக்கண்ணி
முன்னின்றருளும் கயற்கண்ணி
முத்தனத்தோடு உதித்தாளே, முக்கண்ணனைக் கண்டு ஒன்றை மறைத்தாளே

சிம்ஹாஸனம் அமர் ராஜமாதங்கி, சிவனையும் அரசாள வைத்த மாதங்கி
அயக்ரீவன் போற்றும் அன்னை லலிதை
அகத்தியன் கண்ட ஸ்ரீ சக்ர வனிதை

உடல் மன நோயைத் தீர்த்திடுவாள்
உன்னத வாழ்வை அளித்திடுவாள்
அலை கலை பணியும் மலைமகள்
அர்தநாரி அவள் சங்கர நாரணி

சிவம் சுபம்

பவனி வருகிறார் அய்யன் பவனி வருகிறார் (Kapaleshwarar)

உ

காபாலீசர் தேரோட்டம்
17-3-2019

பவனி வருகிறார் அய்யன் பவனி வருகிறார் - மயிலையை கயிலை யாக்கி பவனி வருகிறார்

அதிகார நந்திமேல் பவனி வந்தவர்
அற்புதமாய் தேரேறி பவனி வருகிறார்

மாட வீதி களிலே பவனி வருகிறார்,
மக்களைக் கண்டு ஆசி கூற வருகிறார்

அன்னை கற்பகாம்பிகையும் பவனி வருகிறார்
அய்யனை நிழல் போலத் தொடர்ந்து வருகிறார்.

ஆனைமுகனும் ஆறுமுகனும் முன் செல்கிறார்
ஆடிப் பாடி மக்களோடு மிதந்து செல்கிறார்.

கா-பாலீஸ்வரன் பவனி வருகிறார்
பாபநாசன சிவன் பவனி வருகிறார்,

சம்பந்தரின் முறை கேட்டவர் பவனி வருகிறார்
சாகா வரம் அளிக்கும் ஈசன் வருகிறார்

அறுவத்து மூவர் கண்ட தேவன் வருகிறார்
வேதநாதம் திருமுறை முழங்க வருகிறார்

சண்டிகேசர் பின் தொடர பவனி வருகிறார்
நம் சந்ததி சிறந்து வாழ அருள் பொழிகிறார்

வடம் பிடித்து அய்யன் தேரை இழுத்திடுவோமே
வாணாளும் வரமும் பெற்று சுகித்திடுவோமே

(அய்யன்) தேரோட்டம் கண்டவர்க்கு என்றும் இன்பமே
அம்மை யப்பன் அருளால் எல்லாம் சுபமே

சிவம் சுபம்

ஆடும் மயிலாய் உருவெடுத்து + கா பாலீ எங்களை மயிலை நாதனே (Revati)

ஓம்

விருத்தம்

கற்பகவல்லி அம்மை பிள்ளைத் தமிழ்

ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் தாள் அர்ச்சித்த நாயகியாம் நின் திருநாமங்களைப் பாடி உருகி பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய், காடெனவே  பொழில் சூழ் (திரு) மயிலாபுரி கற்பகமே

ரேவதி

கா பாலீ எங்களை மயிலை நாதனே

அன்னை மயிலாகி அழைக்க வந்தோனே மயிலையுள் கயிலையை வைத்த ஈசனே

ஆலம் உண்டு அன்று அகிலம் காத்தாய், பூம்பாவை உயிர் மீட்டு சம்பந்தர் புகழ் சேர்த்தாய், அறுவத்து மூவர் வலம் வந்து தொழுதிட எம்மிடை தேராடி  அருள் மழை  பொழிவாய்

சிவம் சுபம்

மெதுவாய் அழைத்தே (On Murugan)

மெதுவாய் அழைத்தே 
அருகினில் இழுத்தே
கனிவாய் எழுந்தாய்
மனந்தனில் அருளாய்
அதுவாய் இதுவாய் எதுவாய்
வரினும் துன்பம் அதனை
களைவாய் எளிதாய் -உன்
இணைத்தாள் சேர்த்தே
துணையாய் இருப்பாய்- நானே
தனியாய் துவளும் நேரம்
நினைவினில் நின்றே நாளும்
நிகழ்வினை நடத்திடு தாயே