Sunday, August 19, 2018

அன்னையின் கண் மலர்ந்தால் கருணை மழை.

அன்னையின் கண் மலர்ந்தால் கருணை மழை.
அதரம் மலர்ந்தால்
அருள் மழை.
கரமலர் அசைந்தால்
கனக மழை.
மனமலர் மலர்ந்தால்
மாலின் தரிசனம்.
பதமலர் பிடித்தால்
 பரமபத வாசம்.

சிவம் சுபம்

அன்னை தோன்றிய நன்னாள்



அன்னை தோன்றிய நன்னாள்
ஆண்டவனை  ஆண்டவள் அவதரித்த திருநாள்.
இன் தமிழமுது பொழியத் துவங்கிய நாள்.
ஈடிலா திருத்துழாய் புகழ் கொண்ட நாள்.
உலகம் உய்ய வழி சமைந்த நாள். 
ஊழி முதல்வன் உள்ளம் நெகிழ்ந்த நாள்.
எழில் கீரவாணியைக் கண்டெடுத்த நாள்.
ஏற்றமிகு  பெரியாழ்வார் இல்லம் நிறைந்த நாள்.
ஐயமில்லா பக்திக் கொடி படரத் துவங்கிய நாள்.
ஒப்பிலா சமரச நெறி
ஓங்கிப் பெருகிய நாள்.
ஔதார்யப் பெருமகள் ஆண்டாளின் ஆடிப்பூரத் திருநாள்.

சிவம் சுபம்.

"மீனாள் ஆண்டாள்"



"மீனாள் ஆண்டாள்"

அனலில் உதித்தாள் அங்கயற்கண்ணி
புவிமகளாய் தோன்றினாள்
கோதையாம் கன்னி

வலக்கர கீரவாணி மீனாள்
இடக்கர கிள்ளை மொழியாள் ஆண்டாள்.

மதுரையின் மாண்பு மங்கை மீனாள்.
வில்லியின் பெருமை நங்கை ஆண்டாள்,
சங்கத் தமிழ் தலைவி மீனாள்.
சந்தத் தமிழ் சுவை ஆண்டாள்.

அரன் கரம் பிடித்தாள்பவள் மீனாள்,
அரங்கன் மனம் கவர்ந்தாண்டவள்  ஆண்டாள்,
பிள்ளைத் தமிழ் நாயகி மீனாள்.
கன்னித் தமிழ் செல்வி ஆண்டாள்.

ஆடிப்பூரத்தில் உதித்தாள் கோதை
ஆடிப்பூரத்தில் பூ சூடுவாள் தடாதகை,
கோதை அரங்கன் மனத்தில் அமர்ந்தாள்,
தடாதகை அரனை வலத்தில் கொண்டாள்.

கதம்பவனத்தாள் அன்னை மீனாள்.
துளசிவனத்தாள் அன்னை ஆண்டாள்.
சித்திரை சித்திரம் அன்னை மீனாள்.
மார்கழிப் பாவை மங்கை ஆண்டாள்.

கோதையை வணங்கி அரங்கனுள் கலப்போம்.
தடாதகையைத் தொழுது அரனுள்
நிலைப்போம்.
இருவரும் நம்மிரு கண்ணின் மணிகள், நம்
இதயத் யொளிரும் (ஜோதிச்) சுடர் மணிகள்.

சிவம் சுபம்.

Sri Ananthaa Aathi Seshaa



Sri Ananthaa  Aathi Seshaa
Nagendraa SaraNam
Sri Laksmana   Raama Anujaa
Nagendraa SaraNam

Sri Balaraamaa  KrishNa braadhaa
Nagendra SaraNam
Hara booshaNaa Hari Aasanaa
Nagendraa SaraNam

Sarppa Raajaa Sarva MangaLaa
Naagendra SaraNam
Raagu Kethu Dhosha nassaa
Naagendra SaraNam

Paalu pandu pettithini,  paathamulu pattithini,
(maa) Kula rakshaga  Naagendra Devaa SaraNam.

Sivam Subam

Gadhadharaa Sri Raama KrishNaa

OM

Gadhadharaa Sri Raama KrishNaa
KaruNaa saagaraa Sri Raama KrishNaa
Paramahamsaa Sri Raama KrishNaa
Bhagavaanae Sri Raama KrishNaa

Belooru vaasaa  Sri Raama KrishNaa
Saaradhaa PraaNaa Sri Raama Krishnaa
Dvaitha Maarga  Sri Raama KrishNaa
Advaitha nilaya  Sri Raama KrishNaa

Paamara Priya  Sri Raama KrishNaa
Panditha vanthitha Sri Raama KrishNaa
Veda saaraa Sri Raama KrishNaa
Viveka Aanandaa  Sri Raama KrishNaa

Sarva Dharmaa  Sri Raama KrishNaa
Sarva Sammatha  Sri Raama KrishNaa
Samastha MangaLa Sri Raama KrishNaa
Saasvatha Sathya Sri Raama KrishNaa

Sivam Subam

கல்லினுள் விளைந்த தெய்வக் கனி (Bilahari)


பிலஹரி

கல்லினுள் விளைந்த தெய்வக் கனி,
கருதிப் பணிந்தோனைக் காத்த தனி.

தூணிலிருந்து வந்த தூயவன்.
துஷ்டனையும் ஆட்கொண்ட மாயவன்.

(அன்பர்) நினைக்குமுன் தோன்றும் ஸ்ரீ ஹரி.
 (அவர்) நினைத்ததெல்லாம் அருளும் நரஹரி.
ஸ்வாதியில் உதித்த நர சிம்ஹம். (நம்மை)
ஸ்வாதினமாய் வாழவைக்கும்
மா-லோலம்

(மெய்)  அன்பருள்ளமே அஹோபிலம்,
அடிபணிந்தோரைக் காக்கும் தெய்வ பலம். (அன்பருள்ளமே)
நவ நரசிம்மனின் உறைவிடம்,
பவம் களைந்தாட்கொள்ளும் பரம பதம்.

சிவம் சுபம்

பாற்கடல் எங்கும் இல்லை அய்யா (Saama)



விருத்தம் -

அருமையான விண்ணப்பப் பாடல்
(எழுதிய மகான் - தெரியாது)

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம்புலன் அடக்கம்,
தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம், இன்னுயிர்ச் சாலம் எல்லாம், இறைவா, நின் உரு என்று ஓர்தல் நின் அடி த்யானயோகம் நிதம் எனக்கருள்வாயே

சாமா

பாற்கடல் எங்கும் இல்லை அய்யா,
பால் மனமே பாற்கடலய்யா

அதிலுறை மனசாட்சியே... பரந்தாமனய்யா....

தோன்றும் நல்லெண்ணங்களே வேதமய்யா,
நா நவிலும் நல் வார்த்தைகளே மந்திரமய்யா,
செய்யும் நற்காரியங்கள் பூசைகள் அய்யா,
 விளையும் மனநிறைவே அவன் ஆசி அய்யா

சிவம் சுபம்