Friday, May 29, 2015

Mahaa Periyaa Paathugaa-poo nam paathugaapu



பெரியவா பதமலர்,
பேரருள் இறை மலர், மஹா...

(சரணா) கதி என்றடைந்தோரின் விதி மாற்றி யருளும்..மஹா..

துளவ மணிந்தால் சிவனாவார், துளசியில் அவரே அரியாவார்,
துன்ப மகற்றும் துர்கையு மவரே, (சாகா) வர மருளும் நம்
பரமாச் சார்ய...மஹா...

அகவல் முதல் ஆகம வேத சாரமதை, அங்கைக் கனி போல்
அருளிய அற்புதர், த்வைதாத்வைதம் கடந்த துரியர், தூயவர் உள்ளக் கோயில் வாழும், மஹா....

audiolink


அன்னபூரணி அருட்பா (Raaga Malika)

அன்னபூரணி அருட்பா


ராக மாலிகை (ஆனந்த பைரவி, ரேவதி, ஹம்சானந்தி, சாமா)

தருமை ஆதீனம் பத்தாவது குரு மகா சந்நிதானம்
ஸ்ரீ சிவஞான தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் அருளியது 
கன்னியா  குமாரி யருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பருவத வர்த்தனி,
கமலை பராசத்தி சிவ காம சுந்தரி  காழி உமை பிரம வித்தை 
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை -
தந்த அகிலாண்ட நாயகி அறம் வளர்த்தவள்
தண்  னருள் செய் காமாக்ஷி யிங்கு 
என்னை யாள்  கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை இலங்கு நீலாயதாக்ஷி எழில்
பிரம ராம்பிகை இலங்கு பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப 
அன்னையாய்க் காசி முதலாகிய தலத்து
 விளையாடிடு விசாலாக்ஷியாம்
ஆண்ட கோடிகள் பணி  அகண்ட பூரணி என்னும்
அன்ன பூரணி அன்னையே 

ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் (Kaanada)

ஸ்ரீ    காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்


audiolink

ராகம் : கானடா 

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள் அருளியது 
வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன், பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தை வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --


அடாணா - தில்லை சிவகாமியம்மைப் பதிகம் (Attana)

அடாணா  - தில்லை சிவகாமியம்மைப்  பதிகம்



(எவ்வாறு அய்யனுக்கு "வேயுறு தோளி பங்கன்" பாடுகிறோமோ
அம்மைக்கு இந்த பாடலைப் பாடி அருள் பெறுவோம்) 

இரவி மதி பூமிசேய புந்தி குரு வெள்ளி
சனி ராகு கேதுக்கள் எல்லாம்
இயங்குவது உன் வலுவினால் ஆதலால்
அன்பரை என்றும் வாதிக்க வாட்டா 
சரவியல் கொளனையர் திசை புத்தி
சித்திர நன்மை தருவாய் பரிணமிக்கும்
தாப சுர பித்த வாதஞ் சிரக்கம்ப
கப சந்நி முதல் நோயெல்லாம் போம் 
பரவுனது பேர் சொல்லி பூதியோடு
குங்குமப் பொட்டணிதல் கண்டாலுமே
பூதப் பிரேத பைசாச ராக்ஷஸ
விஷம் பொல்லா விலங்கும் ஓடும் 
விரவு உன் மேனியாற் பசுமை பாய அரனது
செய்ய மேனியிற் பாதி கொண்டாய்
மேதினி தழைத்திடத் தில்லை
மாகரத்தின் மேவு சிவகாமி உமையே 

Douthiyam (தௌத்தியம் ) by Shri Pamban Swamigal

Composed by Shri Pamban Swamigal








Wednesday, May 20, 2015

ஸ்வாமிநாதன் மஹாஸ்வாமி ஆன தேதி (20 May) KalyaaNi

--- KalyaaNi

ஆதி அந்தம் இல்லா அருட் ஜோதி, அவனியில் தோன்றிய தேதி இது

ப்ரணவப் பொருளுறைத்த ஸ்வாமி நாதன் மீண்டும் புவி வந்த தேதி இது

வைகாசி செய்த "புண்ணிய-மே, விழுப்புரம் செய்த மா தவ-மே, மெய்ப்பொருள் தோன்றிய இருபது மே, அவர் அடியவர் நமக்கு சுபதினமே

பாரதம் முழுதும் நடந்த பாதமே, (நம்) பவ வினை களையும் ஞான சம்பந்தமே, அன்னியரும் வியந்த அத்வைதமே

அடி பணிந்தோர்க்கதன் நாமம் அமுதமே



audio link


Tuesday, May 19, 2015

இசைத் தவம் பயனுற்றதே (Kalavathi/ Valaji)

இசைத் தவம் பயனுற்றதே (கலாவதி/வலஜி)

 audio link



இசைத் தவம் பயனுற்றதே, இறையே மனம் நெகிழ்ந்து வந்ததுவே

நாதோபாசனையின் மாண்பிதுவே.  நாதனின் கரம் சிரம் கொண்டதுவே

ஸ்ருதி லய ஸுநாத வினோதினி, ஸுப்ர பாத சுப சிவமே, தனக்கென வாழா தபஸ்வினி, தயா சாகரன் மனம் கவர்ந்ததுவே, தண்ணருள் மழையில் கலந்ததுவே

அன்னை சுபம் போல் பக்தி செயவோமா, உதவுதற் கென்றே வாழ்வோமா, ஆண்டவனை நேரில் காண்போமா, அன்பர் உள்ளத்தே வாழ்வோமா