Tuesday, April 7, 2015

அங்கயற் கண்ணியை !


அங்கயற் கண்ணியை !
ஆடல் அறுபத்தி நாலு புரிந்தாளை!
இச்சை க்ரியை ஞான பரா சக்தியை!
ஈசன் உயிர் காத்த கரத்தாளை!
உண்மைப் பொருளை!
ஊமையைப் பாட வைத்தாளை!
எங்கும் நிறைந்தாளை!
ஏகனுக்கு தன்னில் பாதி ஈந்தாளை!
ஐங்கரனை படைத்தாளை!
ஒப்பிலா முதல்வியை!
ஓம்கார ஹ்ரீங்காரியை!
ஔதார்ய பரம்பொருளை! அடிபணிந்துய் வோமே.

audiolink

Mantha-haasa vathani (Bhairavi)

Bairavi

Mantha-haasa vathani, Maathu Sironmani,  Mangala kaariNi,  Meenaakshi

Suntharesuni RaaNi, Suvaasini, Sudhaa mathura baashiNi, Meenaakshi

Mathuraa puri vilaasini, Maragatha syaamala varNini, Meenaakshi, Bairavi, Baktha ManonmaNi, Siva Suba RoopNi, Meenaakshi

audiolink

என்ன தவம் செய்தனை (Kaapi)

காபி

என்ன தவம் செய்தனை, காஞ்சன மாலை, இக்-ககன மனைத்தையும் படைத்த கயற்கண்ணி, அம்மா என்றழைக்க..

அலைமகள், கலைமகள் பணி ஏற்கும் மலைமகளை,
மடிவைத்துக் கொஞ்சி முத்தாட...நீ

ஐந்தொழில் புரி ஆலவாய் அழகனையே  மருகனாய் கொண்டு மணிமுடி சூட்டிட..,நீ

ஞான கணேசனை, ஞான ஸ்கந்தனை, பேரனாய் பெற்ற பெருமாட்டியே., நீ

audio

சபலம் சஞ்சலம் மாய்த்திடுவான் (Mohanam)

மோஹனம்

சபலம் சஞ்சலம்  மாய்த்திடுவான், சங்கட ஹர சதுர்ததியின் நாதன்

ஜெகஜ் ஜெனனி அளித்த ஜெகத் பாலனன், ஜெகன் மோஹன கணநாதன்

பாலரும் விருத்தரும் வணங்கும் தேவன், தீவிர வைணவரும் பணியும்  சைவன், கடி மணம் தம்பிக்கு முடித்து வைத்தவன், அடி பணிந்தோரைக் காப்பதில் முதல்வன்

அய்யனின் கணங்களை வழி நடத்திடுவான், அன்னையின் தவத்திற்கு காவல் இருப்பான், மாமனின் காதையை எழுதித் தந்தவன், மெய் அன்பருக்கோ அவன் தன்னையே தருவான்

audiolink

மீனாக்ஷி அம்மையின் திருமணமே (Ananda Bhairavi)

ஆனந்த பைரவி

மீனாக்ஷி அம்மையின் திருமணமே, காணக் கிடையா வைபோஹமே

கருநீல வண்ணன் தாரை வார்க்க, பவளமேனியன் மரகத மேனியளை ஏற்கும்.

பவ்யமாய் பரந்தாமன் வேண்டிடவே,  கம்பீரமாய் கயிலையன் களித்திருக்க
நாணி அன்னை முகம் சிவக்க, நான்முகாதியர் சென்னிமேல் கரம் குவிக்க

தொழுத இளைஞருக்கு நல் மண வாழ்க்கை அமையும், கண்ட மற்றோர்க்கு மங்கலம் நிலைக்கும், பசி பிணியின்றி உலகம் சிறக்கும், ஆன்மீகத்தில்
அகிலம் திளைத்து உயரும்

audiolink

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து (Thodi)


தோடி

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து, கயற் கண்ணால் எனை கடை கணித்து...

பிழை பொறுக்கும் தாயல்லவோ, நீ, என் குறை களையும் தந்தையும் அல்லவோ.,

என்னை (நல்) வழி நடத்தும் குருவல்லவோ, என்னுள் கொலுவிருக்கும் தெய்வம் அல்லவோ, இதற்கு மேலும் நான் சொல்லவோ, இனியாகிலும் மனதிரங்கி,

audiolink

கடவுளைக் கண்டேன் (சிவரஞ்சனி)

சிவரஞ்சனி

கடவுளைக் கண்டேன், என் கண் குளிர, மனம் நெகிழ.

காஞ்சி எனும் தலத்தே, காமகோடி பீடத்தே.. நான்..

அமர்நதால் அன்னை காமாக்ஷியாய், நின்றால்
விபூதி சங்கரனாய், கிடந்தால் ஸ்ரீ ரங்கநாதனாய்,  முகம் மலர்ந்தால் முழு ஞான ஸரஸ்வதியாய்

விழி மலர்ந்தார், என் வேதனை மாய்ந்தது, கரம். அசைத்தார், கனக தாரை ,பொழிந்தது, திருவாய் மலர்ந்தார், தெய்வத்தின்  குரல் ஒலித்தது, திருவடி பணிந்தேன், (மீண்டும் பிறவா) பெறு-வாழ்வடைந்தேன்

audiolink