உ
My Humble Tribute to Sri Muthuswami Dikshithar
தினசரி ப்ரார்த்தனை 96
*ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆராதனம்*
*Sri Muththu Swami Dikshithar Aaraadhanam*
ஸ்ரீ ராமஸ்வாமி தனயம்
ஸ்ரீ வித்யா உபாஸகம்
கங்கா தேவி ப்ரஸாதித வீணா கரம்
மந்த்ர தந்த்ர யந்த்ராராதன நிபுணம்
பாவராக தாள லய விநோதம்
ஸ்ரீ குருகுஹ முத்ரா ஸுநாதம், (ஸ்ரீ)
மீனாக்ஷி ஹ்ருதய நிரந்தர நிவாஸம்
ஸ்ரீ முத்துஸ்வாமீம் சிந்தயேஹம் ஸதா
Sri Ramaswami Thanayam
Sri Vidhyaa Upaasagam
Gangaa devi prasaadhitha VeeNaa karam
Manthra Thanthra Yanthra-araadhanaa nipuNam
Bhaava,eaaga thaaLa laya vinodham
Sri Guruguha Mudraa Sunaadham, (Sri)
Meenaakshi Hrudaya niranthara nivaasam
Sri Muththu Swaamim chinthayeham sadhaa
ராமஸ்வாமி அளித்த முத்துஸ்வாமி - (பாவ)
ராக தாள லய "குருகுஹ" ஸ்வாமி
திருத்தணிகையன் அருள் பெற்ற வித்து
திருவாரூர் மும்மணியுள் ஒரு முத்து 1
சகல வேதாகம சாஸ்த்ர மணி
சர்வ மந்த்ர தந்த்ர சிரோன்மணி
ஸ்ரீ வித்யா உபாசனா ஸ்ரேஷ்ட மணி
சிறந்த வைணீக சிகாமணி 2
நாமத்தை நாதத்துள் அமுதெனக் கலந்து
வேத மந்த்ர சாரத்தில் தோய்த்தெடுத்து
மேள சக்ர ராகங்களில் மெருகூட்டி
காலத்தை வென்று வாழும் கீத மணி 3
(உம்) நவா வர்ணத்தில் கமலை நெகிழ்வாள்
நவகோள் மலர்கள் நன்மை பயக்கும்
"மீனாக்ஷி மேமுதம் தேஹி" என்றால்
"இதோ தந்தேன்" என்று அன்னை அருள்வாள் 4
(உம்) துதி பெறா தெய்வம் இல்லை அய்யா
உம் துதி கேட்டு நெகிழா உயிரில்லை அய்யா
தீபத் திருநாளில் ஜோதியில் கலந்து
எட்டயாபுரத் தொளிர் நந்தா விளக்கே !
எண் திக்கும் ஒலிக்கும் நாதப் பெருக்கே ! 5
சிவம் சுபம்