Wednesday, July 19, 2017

ஆனியில் மீனாட்சி ஊஞ்சலாடினாள்



ஆனியில் மீனாட்சி ஊஞ்சலாடினாள், அவனி ஆளும் அன்னை ஊஞ்சலாடினாள்

சுந்தர வதனியவள் ஊஞ்ச லாடினாள், சுந்தரனுடன் இணைந்து ஊஞ்சலாடினாள்

நூறு கால் மண்டபத்தில் ஊஞ்சலாடினாள்,
திருவாதவூரர் பாட ஊஞ்ச லாடினாள்
பொன்னூஞ்சல் பாட அம்மை ஊஞ்சலாடினாள்
பொன்னார் மேனியனும் உடன் ஆடினார்

சிவ சக்தி அவள் ஊஞ்சலாடினாள்,
சிவ ரஞ்சனி அவள் ஊஞ்சலாடினாள்
சிவ ராஜதானியில்
ஊஞ்சலாடினாள்
சிவ-சுபமாகி ஊஞ்சலாடினாள்

சிவம் சுபம்

audio                       

No comments:

Post a Comment