Sunday, May 31, 2015

விசாகத் துதித்த வீரனே (Revathi)



ரேவதி

(வைகாசி) விசாகத் துதித்த வீரனே
கார்த்திகேய கருணாகரனே,

(தை) பூசப் புண்ணிய வேலவனே
பந்த பாசமறுக்கும் கந்தனே

சஷ்டியில்  சூர சம்ஹாரனே
சர்வ லோக ரக்ஷகனே
பங்குனி உத்திர மணமகனே
எங்குல தேவனாம் ஷண்முகனே

சிவக் கண்மணியே, சிவ சக்தி வேலனே
ஞால முதல்வனின்  ஞான இளவலே
வேதாச்சார்யன் தோள் அமர்ந்தோனே 
கீதாச்சார்யனின் மருகனே

audiolink




Friday, May 29, 2015

Siva Kudumbam (Bhoopalam/Bowli)

பூபாளம்/பௌளி


சிவ குடும்பத்தருள் நிறைந்திருக்க, பவ பயம் நம்மை அணுகாதே
படைத்தவள் நம்மை அன்னை மீனாள், கண்
காணித்து  வளர்ப்பவர் அய்யன் சிவனார்
தடைகள் தகர்ப்பான் தந்த முகன்
பயமதை போக்குவான் ஐயப்பன்
வெற்றிகள் குவிப்பான் வடிவேலன்
காத்து ரக்ஷிப்பான்  தாய் மாமன் 
மாமி பொழிவாள் வற்றா நிதி மழை,  (அவள்)
மைந்தன் மாற்றுவான் நம் விதியை,
சிவ சோதரியாம்  சரஸ்வதி
அளிப்பாள்  அழியா ஞான-மதி 
ஒருவரைத் தொழுதாலும் போதுமே,
குடும்பமே பொழியும் பேரருளே,
சிவ குடும்பத்தில் ஒன்றிடுவோம்
பவ பயம் வென்று நிலைத்திடுவோம்.

Nirjala Ekaathasi Naathudu (Brindavana Saaranga)


B/Saaranga



Nirjala Ekaathasi Naathudu, nirmala Hrudaya Vaasudu

Dhurguna naasana Dheerudu, Duritha nivaaraNa Subakarudu

Gopi jana mana mohanudu, Gopaala KrishNa Govinthudu, Siva Raama roopa Advaithudu, Sritha jana paalana Vittaladu

Dasaavathaara roopudu, Dharmopadesa Daamotharudu,Brahmaanda Viswa roopudu,  Brindhaavana Saarangudu,

audiolink


See also :

http://en.wikipedia.org/wiki/Nirjala_Ekadashi

Mahaa Periyaa Paathugaa-poo nam paathugaapu



பெரியவா பதமலர்,
பேரருள் இறை மலர், மஹா...

(சரணா) கதி என்றடைந்தோரின் விதி மாற்றி யருளும்..மஹா..

துளவ மணிந்தால் சிவனாவார், துளசியில் அவரே அரியாவார்,
துன்ப மகற்றும் துர்கையு மவரே, (சாகா) வர மருளும் நம்
பரமாச் சார்ய...மஹா...

அகவல் முதல் ஆகம வேத சாரமதை, அங்கைக் கனி போல்
அருளிய அற்புதர், த்வைதாத்வைதம் கடந்த துரியர், தூயவர் உள்ளக் கோயில் வாழும், மஹா....

audiolink


அன்னபூரணி அருட்பா (Raaga Malika)

அன்னபூரணி அருட்பா


ராக மாலிகை (ஆனந்த பைரவி, ரேவதி, ஹம்சானந்தி, சாமா)

தருமை ஆதீனம் பத்தாவது குரு மகா சந்நிதானம்
ஸ்ரீ சிவஞான தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் அருளியது 
கன்னியா  குமாரி யருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பருவத வர்த்தனி,
கமலை பராசத்தி சிவ காம சுந்தரி  காழி உமை பிரம வித்தை 
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை -
தந்த அகிலாண்ட நாயகி அறம் வளர்த்தவள்
தண்  னருள் செய் காமாக்ஷி யிங்கு 
என்னை யாள்  கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை இலங்கு நீலாயதாக்ஷி எழில்
பிரம ராம்பிகை இலங்கு பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப 
அன்னையாய்க் காசி முதலாகிய தலத்து
 விளையாடிடு விசாலாக்ஷியாம்
ஆண்ட கோடிகள் பணி  அகண்ட பூரணி என்னும்
அன்ன பூரணி அன்னையே 

ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் (Kaanada)

ஸ்ரீ    காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்


audiolink

ராகம் : கானடா 

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள் அருளியது 
வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன், பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தை வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --


அடாணா - தில்லை சிவகாமியம்மைப் பதிகம் (Attana)

அடாணா  - தில்லை சிவகாமியம்மைப்  பதிகம்



(எவ்வாறு அய்யனுக்கு "வேயுறு தோளி பங்கன்" பாடுகிறோமோ
அம்மைக்கு இந்த பாடலைப் பாடி அருள் பெறுவோம்) 

இரவி மதி பூமிசேய புந்தி குரு வெள்ளி
சனி ராகு கேதுக்கள் எல்லாம்
இயங்குவது உன் வலுவினால் ஆதலால்
அன்பரை என்றும் வாதிக்க வாட்டா 
சரவியல் கொளனையர் திசை புத்தி
சித்திர நன்மை தருவாய் பரிணமிக்கும்
தாப சுர பித்த வாதஞ் சிரக்கம்ப
கப சந்நி முதல் நோயெல்லாம் போம் 
பரவுனது பேர் சொல்லி பூதியோடு
குங்குமப் பொட்டணிதல் கண்டாலுமே
பூதப் பிரேத பைசாச ராக்ஷஸ
விஷம் பொல்லா விலங்கும் ஓடும் 
விரவு உன் மேனியாற் பசுமை பாய அரனது
செய்ய மேனியிற் பாதி கொண்டாய்
மேதினி தழைத்திடத் தில்லை
மாகரத்தின் மேவு சிவகாமி உமையே