Wednesday, July 19, 2017

மலர் ஆடையில் ஒளிர் மலை மகள்



மலர் ஆடையில் ஒளிர்  மலை மகள், மங்கலம் பொழிந்திடும் திருமகள், வெற்றித் திருமகள்

சண்ட முண்டாசுரனை வென்றவள், சாமுண்டீஸ்வரீயாம் அன்னையவள், நம் அன்னையவள்

மா தேவனைக் காத்த உமையவள், மாதவனின் சோதரியாம் துர்கையவள், கர்நாடகத் துறை தேவியவள்,
எந்நாட்டவர்க்கும தாயானவள்

சிவம் சுபம்

audio

பாட மாட்டேன் நான் பாட மாட்டேன் (Saama)

saama

பாட மாட்டேன் நான் பாட  மாட்டேன் - பகவான் திருவடிப் புகழன்றி வேறு...

மாண்டு மாண்டு மீண்டும் பிறந்துழலும் மனித மூடரை நான்...

வள்ளலின் திருவடிப் புகழ்ச்சி யன்றி, பாம்பனாரின் தௌத்திய பாடலன்றி, (வேதாந்த) தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரமன்றி, பட்டத்ரியின் ஸ்ரீ பாத ஸப்ததி யின்றி வேறு....

இரை தேடுவதோடு இறையையும் தேடுவோம், இறை திருப்புகழை தினமும் பாடுவோம். இறை திருவடி நிழல் தனையே நாடுவோம், இறையன்பல்லா வேறெந்த பாடலையும்....

சிவம் சுபம்

Gayathri Song - Saraswathi

Saraswathi

முப்பொழுதும் அவளை ஜெபித்திடுவோம் -  எப்பொழுதும்  நம்மைக் காத்திடுவாள், அன்னை காத்திடுவாள்

இருகரம் கூப்பித் தொழுவோரை ஈறைந்து கரம் கொண்டு  அகம் அணைப்பாள், அன்னை அகமணைப்பாள்

முனி கௌசிகனின் தவக் கனி, மூவுலகாளூம் தேவக் கன்னி,  ஐமுகம் கொண்ட அருட் கனி,  ஷண்மதத்தின் ஸாரக் கனி.

அவளே ப்ரஸித்த வேத மாதா, அவளே ப்ரணவ நாத  ஸாரதா,  (அவளே) ஸந்த்யா ஸாவித்ரீ ஸரஸ்வதி, ஸத்கதி அருளும் காயத்ரீ.

சிவம் சுபம்

Jai Santoshi Maatha


Audio

OM

Santhoshi Maa Jai Santhoshi Maa
Santhoshamu-losagae Santhoshi Maa

Vigneswari Santhoshi Maa
Vijayeswari Santhoshi Maa
Padmeswari Santhoshi Maa
Parameswari Santhoshi Maa

Sukreswari Santhoshi Maa
Chakreswari Santhoshi Maa
Sarveswari Santhoshi Maa
Sathyeswari Santhoshi Maa

Vradeswari Santhoshi Maa
Yogeswari Santhoshi Maa
Gnaneswari Santhoshi Maa
PraaNeswari Santhoshi Maa

Sivam Subam 

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி


ராக : மாலிகா                Raaga : Maalikaa 

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பர்வத வர்த்தினி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை

தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை  தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு

என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை  இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமராம்பிகை  பார்வதி ஆதி   எண்ணிலா நாம ரூப

அன்னையாய் காசி முதலாகிய தலத்து விளையாடிடு
விசாலக்ஷியாம்
அண்டகோடிகள்பணி அகண்ட பூரணி எனும்
அன்னபூரணி அன்னையே

தருமை ஆதினம்  பத்தாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் அருளிய
காசி அன்னபூரணியம்மை திருவருட்பா

(இந்த ஒரு பாடலின் மூலம் அன்னையின் அனைத்து
முக்கியத்  திரு நாமங்களையும் ஜெபித்து இன்புறலாம்)

சிவம் சுபம்

கார்த்திகேய கருணாகரா




கார்த்திகேய கருணாகரா - கழலிணை பிடித்தேன், கடுகி அருள்வா

கந்தா குஹா கௌரீ சுதனே, வந்தாள் எனையே வரதன் மருகனே

ஆனைமுகனைத் தொழும் ஆறுமுக வா வா, ஏறு மயிலேறி விரைந்தோடி வா வா,
மாறு பட சூரரை வதைத்த வேலா, ஆறுபடை அமர்ந்தருள் அழகா வா வா

தந்தை தோளமர்ந்த தனயனே வா வா,
விந்தை பல புரியும் நந்த(வ)னத் திறைவா, என் சிந்தை கவர்ந்த சுப்பிர மணியனே, எந்தை உனையன்றி வேறு புகல் காணேனே...

சிவம் சுபம்

audio

அருளே சந்த்ரசேகரம்



அருளே சந்த்ரசேகரம்
ஆகம வேத ஸாரம் - சந்த்ரசேகரம்

இக பர  ஸுகம் - சந்த்ரசேகரம்
ஈஸ்வரம் - சந்த்ரசேகரம்

உலக குருவாம் - சந்த்ரசேகரம்
ஊழ்வினை மாய்க்கும் -
சந்த்ரசேகரம்

எல்லோர்க்கும் சம்மதமாம் -  சந்த்ரசேகரம்
ஏழிசை நாதம் சந்த்ரசேகரம்

ஐந்தொழில் புரி சந்த்ரசேகரம்
ஒப்புயர்வில்லா சந்த்ரசேகரம்

ஓங்கார ஜோதிஸ்வருப பரமேஸ்வரம்
ஔதார்யமே வடிவாம் பரமாச்சாரியம்

ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
ஹர ஹர சந்தர் சேகரா
ஜெய ஜெய சந்தர சேகரா

சிவம் சுபம்

audio