Sunday, March 26, 2017

தெளிவு குருவின் (Slokham)

திருச்சிற்றம்பலம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

திருச்சிற்றம்பலம்

audio

எழும் போது வேலும் மயிலும் (Slokham)

எழும் போது வேலும் மயிலும் என்பேன், எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன், தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன், அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்

audio

நின்னையே நினைந்துருக (Aarabhi)

ஆரபி

நின்னையே நினைந்துருக வேண்டும், நின்னையன்றி வேறொன்றை நினையாதிருக்க
வேண்டும்....

என் அன்னையே, ஆலவாய் உறையும் அங்கயற் கண்ணியே!

நின் திருக் கோயிலை வலம் வர வேண்டும், அஃதன்றி வேறிடம் செல்லாமை வேண்டும்,
மூடர் முன் சென்றவர் முகமதனைப் புகழாமல், முக்கண்ணி உன் திருவடிப் புகழே இசைக்க வேண்டும்

நின் நாதன் திருநீறும், நின் மங்கலக் குங்குமமும் எந்நாளும் எந்நேரமும் என் நெற்றியில் ஒளிர வேண்டும், தமிழ் பண்ணால் உனை துதித்து, உன் பதமலர் நிழலில் எந்நாளும் நிலைத்திருக்கும் வரமதனைத் தரு தாயே!

சிவம் சுபம்

audio

Saturday, December 24, 2016

ஸ்ரீ பரமாச்சார்ய கீதம் (National Anthem Tune)




audio

விழுப்புரம் அளித்த மெய்ப் பொருளே,
எங்கள் விதி மாற்றி அருளும் பரம் பொருளே!

காஞ்சி நிவாஸ, காம கோடீஸா,
காமாக்ஷி ஹ்ருதயேசா!

பாதம் பதித்து காதம் கடந்து
வேதம் காத்த பரமா!

நடம் இடும் தெய்வமே வா வா
நடமாடும் தெய்வமே வா வா, (அத்)
தெய்வத்தின் குரலே, இறைவா!

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
பரமாச்சார்ய தேவா,

சரணம் சரணம் சரணம் தங்கள் பத கமலமே சரணம்.

சிவம் சுபம்




Thursday, November 3, 2016

Narasimhar Song ( சக்கரத்திலே அமர்ந்து சகலத்தையும்  கணிக்கும் திருமாலே - Revathi)

விருத்தம்**

நரசிங்கா என்றால் நரரும் தேவராவார்
நரசிங்கா என்றால் நம் வினைகள் அனைத்தும்  ஓடும்
நரசிங்கா என்றால் நமக்கேது பயம்
நரசிங்கா என்றால் நமக்கெல்லாம் இனி ஜெயமே...
இது சத்தியம் தானே

பாடல் - ரேவதி

(சுதர்சன) சக்கரத்திலே அமர்ந்து சகலத்தையும்
கணிக்கும் திருமாலே - நரசிங்கா,  நாரணா,
நான்மறை போற்றும்...... (சுதர்சன)

திண்ணமாய் உனை நினைந்தவர் வாழ்வினில்
திருமகளும், கலைமகளும், மலைமகளும்
அருள் மழை பொழிவாரே

அன்னை கோசலை தன் மாதவப் பயனே - ஒரு
சிறு விரலால் கிரியேந்திய மாயவனே
கொடிய வினை களையும் கோமானே
கோதை மனம் உறை ஸ்ரீ ரங்க நாதனே

திருமலை வாழும் கலியுக  வரதனே
திருமோகூர் உறையும் காளமேகனே
(உன்னை) இரு கரம் கூப்பித்  தொழுவோர்க்கு
ஈரெட்டு கரம் கொண்டு அருளும் கனவானே

** (விருத்தம் - ஸ்ரீ ஹரிதாஸ் ஸ்வாமிகள் அவர்கள்
ஒருமுறை பாடக் கேட்டது)

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio

ஸர்வ தேவ ஸ்துதி - ராகமாலிகை

ஆனைமுகனே! ஆறுமுகனே!
அம்மையே அப்பனே! அருள்வீரே
அன்புடனே

கார்முகில் வண்ணனே! கமலத் திருமாதே! நான்முகனே! நா மகளே! நலமெல்லாம் தருவீரே

ஹரி ஹர ஸுதனே! ஐயனே ஸரணம்.
அரி ராம சேவகனே அனுமனே ஸரணம், நவ க்ரஹ நாயகரே ஸரணம் ஸரணம், நம்பித் தொழுதோமே நன்மையே செய்வீரே

சங்கர குருவே! சந்திர சேகரரே,
ஸ்ரீ ராகவேந்திரரே, ஷீரடி சாயியே (ஸ்ரீ சத்ய ஸாயியே), சங்கீத மூர்த்திகளே!
ஸாது ஜனங்களே, ஸகல சௌபாக்ய கலை ஞானம் அருள்வீரே

மாதா பிதா குரு தெய்வமே ஸரணம், மலரடி தொழுதோமே, மனகிழ்ந் தருள்வீரே.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


audio


"நவகோள் பணி நம் பரமாச்சார்ய மூர்த்தி"

சடை மறைத்து மறை முடி வைத்து
புலியாடை  களைந்து, காவி பூண்டு
சூலம் விடுத்து தண்டம் ஏந்தி,
கயிலை விட்டு காஞ்சி வந்து,
பாதம் பதித்து இப்புவியை புனிதமாக்கி,
ஆலடியில் அன்று சொல்லாமல் சொன்னதை,
காமகோடி அமர்ந்து (தன்) தெய்வக் குரலால்
உலகுக்குரைத்த  நம் பரமாச்சார்யராம்
பரசிவனாரின் பாதுகைப் பூவே
நம் பாதுகாப்பு.

"சூரியனே" மங்கும் முக ஒளி,
"சந்திரனை" மிஞ்சும் குளிர் மனம்,

"செவ்வாய்" மலர்ந்தால் ஆறாம் வேதம்
அற்"புத" காமகோடி அருள் ப்ரவாகம்,

பரம "குரு" சந்த்ர சேகர மூர்த்தி,
"வெள்ளி" மலையாடும்  நாதனின் கீர்த்தி,
"ஸ்திர" பக்தி செய்வோர்க்கு ஞான ஸரஸ்வதி, அவர்
பதம் பணிந்தோர்க் கென்றும் பணிவிடை செய்யும்
அவ்"விரு அரைப் பாம்பு"ம்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர   சங்கர
ஹர ஹர சங்கர ஜெய சந்த்ர சேகர

சிவம் சுபம்

audio